இன்று (16.05.2018) சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மக்கள் தலைவர் வைகோ அவர்களின் தலைமையில் ஜனநாயக உரிமைகளை மீட்க அறப்போர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து கட்சி தலைவர்களும் கலந்துகொண்டு முழக்கங்களை எழுப்பினார்கள்.
இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் பேசும்போது, கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் பாரத பிரதமர் மோடி பேசும் போது எதிர்க்கட்சி களுக்கு எச்சரிக்கை செய்து பேசியது குறித்து ஜனாதிபதியிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயலாளர் இரா.முத்தரசன் அவர்களுக்கு, பொது இடங்களுக்கு வரும் போது இனி எப்போதும் சிவப்பு துண்டு அணிந்து வாருங்கள் எனவும் வைகோ அன்பு வேண்டுகோள் விடுத்தார்.
முன்னாள் எம்பி திரு.விசுவநாதன் பேசுகையில், மாணவனாக இருந்த போது நான் உங்கள் ரசிகன். ஜனநாயக போரில் நீங்கள் இருக்கும மதசார்பற்ற கூட்டணியில் நான் தொண்டன் என பேசினார்.
திமுக வை சேர்ந்த திரு.வி.பி.துரைசாமி பேசும்போது, தமிழின உரிமைகளுக்காக அதிகமாக சிறை சென்ற ஒரே நபர் திரு.வைகோ அவர்கள்தான். நாடாளுமன்றத்திலும் அதிக முறை உரிமைக்குரல் எழுப்பியதும் அவர்தான் எனவும் வைகோவுக்கு புகழாரம் சூட்டினார்.
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
No comments:
Post a Comment