ஸ்டெர்லைட் தாமிர நச்சாலையை அகற்ற வலியுறுத்தி கடந்த 100 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் தூத்துக்குடி மக்கள், ஆட்சியர் அலுவலகத்திற்கு அமைதியாக நேற்று 22-05-2018 அன்று பேரணி வந்தனர். இதை தடுத்து நிறுத்தி காவல்துறை துப்பாகி சூடு நடத்தியதில் 12 பேர் பலியானார்கள். ஏராளமானோர் படுகாயமடைந்த நிலையில் அரசு மருத்துவமனை தூத்துக்குடியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையறிந்த வைகோ சென்னையிலிருந்து உடனடியாக புறப்பட்டு இரவே தூத்துக்குடி வந்து படுகாயமடைந்தவர்களை மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறி மருத்துவம் பற்றி மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். உடன் ஏராளமான மதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் குவிந்திருந்தனர்.
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
No comments:
Post a Comment