மே பதினேழு இயக்க தோழர் திருமுருகன் காந்தி அவர்களும் அனைத்து தோழர்களும் மேமாதம் 3 ஆம் வாரம் ஞாயிற்று கிழமை மாலை தமிழர் கடல் மெரினாவில் கண்ணகி சிலைக்கு அருகில் அமைதியான முறையில் முள்ளிவாய்க்காலில், ஈழ தமிழர்கள் மீதான இனப்படுகொலையை நடத்திய இலங்கை அரசு கொன்று குவித்த தமிழர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் விதத்தில் நடத்துகிறார்கள்.
இதில் மதிமுக உள்ளிட்ட அனைத்து தமிழின அமைப்புகளும், தமிழின உணர்வாளர்களும் கலந்துகொள்கிறார்கள். அது போல 20-05-2018 அன்று தமிழர் கடலில் நினைவேந்தல் நடந்தது. இதில் நினைவேந்தல் பேரணியாக செல்லும்போது, திருமுருகன் காந்தி, வைகோ உள்ளிட்ட ஆயிரகணக்கான தமிழர்களை தமிழக காவல்துறை கைது செய்தனர். பின்னர் விடுவித்தனர்.
ஆனாலும் வைகோ திருமுருகன் காந்தி உள்ளிட்ட தோழர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி நினைவஞ்சலி செலுத்தினார்கள்.
ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை
No comments:
Post a Comment