Wednesday, October 19, 2016

தேசத் துரோகக் குற்றச்சாட்டு வழக்கில் தீர்ப்பிற்க்கு வைகோ வியாழக்கிழமை (20.10.2016) நீதிமன்றம் வருகிறார்!

கடந்த 21.10.2008 அன்று சென்னை, இராஜா அண்ணாமலை மன்றத்தில் ‘ஈழத்தில் நடப்பது என்ன?’ என்ற தலைப்பின்கீழ் நடைபெற்ற உள்ளரங்கக் கூட்டத்தில் பேசிய பொதுச் செயலாளரின் பேச்சு சட்டவிரோத (தடுப்பு) நடவடிக்கைச் சட்டம் பிரிவு 13 (i)(b) கீழும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 124-A இன் கீழும் வழக்கு அப்போதைய தி.மு.க. அரசால் தொடரப்பட்டது. அந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள 3-ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அ.இ.அ.தி.மு.க., அரசு சார்பில் இந்த வழக்கை நடத்த சிறப்பு அரசு வழக்கறிஞர் நியமிக்கப்பட்டு, வழக்கில் அரசு தரப்பில் மொத்தம் 15 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த பின்பு தீர்ப்புக்காக 20.10.2016 ஆம் தேதிக்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த வழக்கின் தீர்ப்புக்காக சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள 3-ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வைகோ அவர்கள் 20.10.2016 வியாழக்கிழமை அன்று மதியம் 2.00 மணிக்கு நீதிமன்றத்திற்கு வருகிறார்.

கழக கண்மணிகள் வாய்ப்புள்ளவர்கள் கலந்துகொள்ள ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் அன்போடு வேண்டுகிறோம்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment