Sunday, April 8, 2018

8 வது நாள் நியூட்ரினோ எதிர்ப்பு விழிப்புணர்வு விளக்க நடைபயணம்!

நியூட்ரினோ எதிர்ப்பு விழிப்புணர்வு விளக்க நடைபயணத்தில் தலைவர் வைகோ அவர்களை இன்று 08-04-2018 ஆம் தேதி 8 வது நாள் காலையில் அய்யம்பட்டியில் விவசாயத் தொழிலாளர் தோழர்கள் வரவேற்றார்கள்.

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். இரமேஷ் தலைமையில் தொண்டர் அணியினரோடு திரண்டிருந்தார்கள்.

நடைபயணத்தை வரவேற்கும் விவசாயத் தொழிலாளி பெண்மணிகள். 

தொடர்ந்து காலை உணவு வேளையில் தலைவர் வைகோ அவர்களுடன் தோட்டத் தொழிலாளர்கள்.

நியூட்ரினோ எதிர்ப்பு விழிப்புணர்வு விளக்க நடைபயணத்தில் தலைவர் வைகோ அவர்களை வரவேற்கும் தேங்காய் வெட்டி லோடு ஏற்றும் தொழிலாளர்கள்.

சுரங்க பாதை ரயில் திட்டத்திற்காக சென்னையில்..சட்ட கல்லூரி இடிந்திடும் என கல்லூரி இடத்தை மாற்றுகிறீர்களே! அது போல நியூட்ரினோ விற்காக மலையை உடைக்கும் போது, அது இங்கு உள்ள ஊர் மக்களை பாதிக்காதா என வைகோ கேள்வி.

எங்களுக்காக பாடுபட்டு நடந்துவரும் நீங்க 100 வருடம்நல்ல இருக்கோனுமயா என மனதார வாழ்த்தும் அம்மாபட்டி மக்கள்.

லைவர் வைகோ அவர்கள் இன்று உத்தமபாளையம் நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தார்கள். திடீரென மேலே இருந்து ஒரு சத்தம். ஐயா வாழ்த்துக்கள் என்று. தலைவர் உடனே அண்ணாந்து பார்த்தார். மரத்தில் மேல் புளியம் பழம் பறித்துக் கொண்டிருந்த தோழர்கள் இருந்தார்கள். அவர்களுக்கு நன்றி சொல்லி தன் பயணத்தை தொடர்ந்தார் வைகோ.

இன்றைய நியூட்ரினோ எதிர்ப்பு நடைபயணத்தில் தலைவர் வைகோ அவர்களுடன் கலந்து கொள்ள மதுரையில் இருந்து மே 17 இயக்க தோழர்கள் பலர் வருகை தந்தார்கள்.

தலைவர் வைகோ அவர்களிடம் இன்று ஒரு குழந்தைக்கு பெயர் வைக்க சொல்லி வேண்டினர். என்ன குழந்தை என கேட்க, ஆண் குழந்தை என்றார்கள்.



ஆண் குழந்தை என்றால், பிரபாகரன் தான் என்றார் தலைவர் வைகோ. பெயர் சொன்னவுடன் உற்சாகமாக கைதட்டி மகிழ்ந்தனர் மக்கள்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

No comments:

Post a Comment