Tuesday, April 17, 2018

ஸ்டெர்லைட் மூட வலியுறுத்திய பிரச்சாரத்தை தொடங்கிய வைகோ!

ஸ்டெர்லைட் தாமிரம் உருக்காலையை மூட வலியுறுத்தும் எதிர்ப்பு பிரச்சார பயணம் இன்று 17-04-2018 மாலையில் கோவில்பட்டியிலிருந்து வைகோ அவர்களின் வாகன பிரச்சாரம் தொடங்கியது.

தொடர்ந்து, எட்டயபுரம், புதூர், விளாத்திகுளம், வைப்பாரில் வாகன பிரச்சாரம் நடந்தது. இதில் மதிமுக பொதுச்செயலாளர், ஸ்டெர்லைட்டை எதிர்த்து 30 ஆண்டுகளாக போராடுபவரான வைகோ அவர்கள் தாமிர உருக்காலையால் புற்றுநோய் போன்ற கொடிய நோய்களை பற்றி அறிவியல் மருத்துவ ரீதியாக எடுத்துரைத்தார்.

அப்போது பேசிய அவர், ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட மக்களை திரட்டுவேன். சட்டமன்ற, நாடாளுமன்ற, மேயர் தேர்தல்களில் நிரந்தரமாக மூடுவேன் என்ற உத்தரவாதம் தந்தும், ஊர் ஊராக போய் விழிப்புணர்வு ஏற்படுத்தினேன். ஆட்சிக்கு வந்தால்தானே அகற்ற முடியும் என்றும் கோரொனேன். ஆனால்  மக்கள்  எனக்கு வாக்களிக்கவில்லை. அதை பற்றி கவலை இல்லை. மக்கள் எழுச்சி பெற வேண்டும் என்று விரும்பினேன். அது இன்று நடந்து விட்டது. மாணவர்கள் வரவேண்டும் என்று நினைத்தேன். குமரட்டியா புரத்தில் போராடுகிறார்கள். என் எண்ணம் ஈடேறிவிட்டது. ஜாதி மதம் கட்சி கடந்து தூத்துக்குடியில் 28ஆம் தேதி நடக்கும் ஸ்டெர்லைட் பற்றி விளக்கும்  திறந்த வெளி விழிப்புணர்வு மாநாட்டுக்கு வாருங்கள் என அனைத்து மக்களுக்கும் வைகோ அழைப்பு விடுத்தார்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

No comments:

Post a Comment