Saturday, April 14, 2018

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தீக்குளித்த சரவண சுரேஷ் இறுதி நிகழ்வில் அனைத்து கட்சியினர் பங்கேற்பு!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தீக்குளித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மருமகன் சரவணசுரேஷ் சிகிச்சை பலனின்றி இன்று 14-04-2018 மதியம் உயிரிழந்தார்


சரவண சுரேஷ் அவர்களின் திருவுடல் மதுரை, இராஜாஜி மருத்துவ மனையில் உடல் பிரேத பரிசோதனை முடிந்த பின்பு, உடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு, அரசு அமரர் ஊர்தியில் இன்று 14-04-2018 மாலை கோவில்பட்டி அருகில் உள்ள பெருமாள்பட்டிக்கு நல்லடக்கம் செய்ய உடலை எடுத்து சென்றார் வைகோ அவர்கள்.

அங்கு ஊர்மக்கள் ஏராளமானோர் கூடியிருந்து கதறி அழுதார்கள். பின்னர் உடல் அனைவர் அஞ்சலிக்காகவும் வைக்கப்பட்டிருந்தது. அப்போது அனைவரும் கதறி அழுதது நெஞ்சை குலைய வைத்தது.

சரவண சுரேஷ் அவர்களுக்கு ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலிகள்.

இந்த இறுதி நிகழ்வில், பல்வேறு கட்சி தலைவர்கள், மதிமுக நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தி இரங்கல் உரை நிகழ்த்தினார்கள்.

இறுதி இரங்கல் உரை நிகழ்த்திய வைகோ அவர்கள் பேசும்போது, 

நான் கொண்ட கொள்கை வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, உயிரை தியாகம் செய்த சரவண சுரேஷின் பெயர் மதிமுக வரலாற்றில் மட்டுமல்ல, காவேரி பிரச்சினை வரலாற்றிலும் பொன் எழுத்துகளால் பொறிக்கபட்டிருக்கும். 

எந்த நோக்கத்திற்காக சரவண சுரெஷ் உயிர் தியாகம் செய்தானோ, அந்த நோக்கம் வெற்றி என்ற இலக்கை அடைய நான் இன்னும் அதிக அளவு போராடுவேன் என்று இந்த இடத்தில் நான் சபதம் செய்கிறேன் என தலைவர் வைகோ உரை நிகழ்த்தினார்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

No comments:

Post a Comment