Thursday, April 5, 2018

நியூட்ரினோ போராளி தியாகி இரவி இல்லத்தில் வைகோ!

நியூட்ரினோ நாசகார திட்டத்தை எதிர்த்து மார்ச் 31 ஆம் தேதி நியூட்ரினோ எதிர்ப்பு நடைபயண தொடக்கவிழாவில், மதிமுக விருதுநகர் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சிவகாசி இரவி நியூட்ரினோவை விரட்டி தமிழகத்தை காப்பாற்ற தன்னை கொடையளிக்க உடல் மீது பெட்ரோலை ஊற்றி தீவைத்துக்கொண்டார்.

இதை கண்டு அதிர்ச்சியடைந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் காண வரும் முன்பு மற்ற மதிமுகவினர் தீயை அணைத்துவிட்டு ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனை நோக்கி சென்றனர். 

உடனே வைகோ அவர்கள் மதுரை அப்பல்லோ மருத்துவமனை டீன் அவர்களிடம் என் தம்பி தன்னுடலில் நியூட்ரினொவை எதிர்த்து தீவைத்துவிட்டான். அவனை ஆம்புலன்சில் தோழர்கள் கொண்டுவருகிறார்கள். உயர்தர ஏற்பாடுகள் செய்து சிகிச்சை கொடுங்கள் என்று அலைபேசி மூலமாக கேட்டுக்கொண்டார்.

தொடர் சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்ப்பட்டாலும் 90 சதவிகிதம் உடல் எரிந்து போனதால் சிகிச்சை பலனின்றி ஏப்ரல் 2 ஆம் நாள் அதிகாலை மரணமடைந்தார். 

இதையறிந்த மதிமுகவினர் கண்ணீர் கடலில் ஆழ்ந்தனர். பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் இரவியின் உடலை எடுத்து சென்று அந்த வாகனத்திலே அமர்ந்து பின்னர் உடல் தகனம் செய்து நடைபயணத்தை தொடர்ந்தார்.

இன்று 05-04-2018 முழு அடைப்பு போராட்டம் இருந்ததால் நடைபயணத்தை ரத்து செய்துவிட்டு மதிமுகவினர் முழு அடைப்பு போராட்டத்தில் கலந்துகொண்டதோடு, வைகோ அவர்கள் இரவி அவர்கள் இல்லத்திற்கு தனது துணைவியார் ரேணுகாதேவி அம்மையாருடன் சென்று சிவகாசி இரவியின் மனைவி, பிள்ளைகள், தாயார் மற்றும் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.


ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

No comments:

Post a Comment