Thursday, April 12, 2018

பிரதமர் மோடி வருகையை எதிர்த்து கறுப்புக்கொடி காட்டிய வைகோ!

தமிழ்நாட்டுக்கு வாழ்வாதாரமான காவிரிப் பிரச்சினையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத துரோகம், நீட் தேர்வில் தமிழக மாணவர்களின் சமூக நீதியை அழித்த துரோகம், நாசகார நியூட்ரினோ திட்டத்தைத் திணிக்க முற்படும் கொடூரம், காவிரி டெல்டா பிரதேசத்தில் ஹைட்ரோ கார்பன், ஷேல், மீத்தேன் ஆகிய எரிவாயுத் திட்டங்களைச் செயல்படுத்தும் அக்கிரமம், தமிழக மீனவர்களுக்குச் செய்யும் துரோகம், நாட்டின் பன்முகத் தன்மையையும், மதச் சார்பற்றஅடித்தளத்தையும் தகர்க்க முற்படும் இந்துத்துவா சக்திகளின் தீய நோக்கத்தைச் செயல்படுத்த முனையும் அராஜகம், கர்நாடகத்தில் மேகதாட்டு, ராசி மணலில் அணைகள் கட்டுவதற்கு மறைமுக ஏற்பாடு என்ற விதத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளுக்கும் நலன்களுக்கும் விரோதமாக செயல்பட்டு வரும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் வருகையை எதிர்த்து தமிழக மக்களின் கொந்தளிப்பை உணர்த்தும் வகையில் 2018 ஏப்ரல் 12 ஆம் அன்று காலை 10 மணி அளவில் தமிழ்நாட்டுக்கு வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதத்தில் சென்னை வேளச்சேரி சாலை, சின்னமலை, வி.எஸ்.டி. மோட்டார் அருகில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பின்னர் அனைவரையும் போலீஸார் கைது செய்தனர். அனைவரையும் வேனில் ஏற்றிவிட்டு வைகோ கடைசி ஆளாக கைதானார். கைதானவர்கள் ரேஸ்கோர்ஸ் பார்க்கில் அடைக்கப்பட்டனர்.

அதில் பேசிய வைகோ அவர்கள், காவேரி மேலாண்மை வாரியம் ஒருநாளும் அமைக்கப்பட போவதில்லை என்பதில் மோடி உறுதியாக இருக்கிறார்  என வைகோ தெரிவித்தார்.

உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்பட்டால் சோவியத் யூனியனில் நடந்தது போல் இங்கேயும் நடக்கும்.

 இந்த அறப்போரில் கழகக் கண்மணிகள் தமிழ் உணர்வாளர்கள் பெருமளவில் பங்கேற்று கைதாகினார்கள். 

மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டார்கள்.

ஓமன் தமிழர் மறுமலர்ச்சி பேரவை

No comments:

Post a Comment