Monday, November 30, 2015

நெல்லை பேராசிரியர் இல்ல திருமணத்தில் வைகோ வாழ்த்துரை!

நெல்லை மாவட்டம், தெற்கு கள்ளிகுளம் பேராசிரியர் எடிசன் அவர்களின் மகன் அதிசய ஆரோக்கிய பொன் ஆதவன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி 30.11.2015ய ல் நடந்தது. அந்த வரவேற்பு நிகழ்ச்சியில் வைகோ கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

விழுப்புரம் தென் மாவட்ட மக்கள் நலக்கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம்!

உளுந்தூர்பேட்டை யில் மக்கள் நலக் கூட்டணியின் விழப்புரம் தெற்கு மாவட்டத்திற்க்குப்பட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கூட்டமானது இன்று 30-11-2015 மதியம் 2 மணி அளவில் உளுந்தூர்பேட்டை அன்பு திருமண மண்டபத்தில்,  உளுந்தூர்பேட்டை பேரூராட்சி பெருந்தலைவர் விழப்புரம் தெற்கு மாவட்ட மதிமுக செயலாளர் திரு க.ஜெயசங்கர் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. 

கூட்டணியின் தோழர்கள் திருவாளர்கள், G.ஆனந்தன் அவர்கள், A.v.சரவணன் அவர்கள், வெற்றிச்செல்வன் அவர்கள், T.ஏழமலை ஆகியோர் கலந்துகொண்டனர்.

இவர்களுடன் உளுந்தூர்பேட்டை நகர மதிமுக செயலாளர் க.பிரின்ஸ் செந்தில் குமார் அவர்கள் முன்னின்று நிகழ்ச்சி யை நடத்தினார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

Sunday, November 29, 2015

பொதுக்குழு உறுப்பினர் இல்ல மண விழாவில் வைகோ வாழ்த்துரை!

நெல்லை மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் திரவியம் (எ)கணேஷ்குமார் அவர்களின் மகன் அருண்குணசிங், பிரியதர்ஷினி ஆகியோரின் திருமணத்தை சங்கரன்கோவில் கிருஷ்ணா மகாலில் தலைவர் வைகோ அவர்கள் நடத்தி வைத்து வாழ்த்துரை வழங்கினார். கழக நிர்வாகிகள் பொதுமக்கள், உறவினர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

ஓமன் மதிமுக இணையதள அணி

Saturday, November 28, 2015

வெள்ளத்தால் பாதிக்கபட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாநகரில் குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள மழை வெள்ள நீரை உடனடியாக அகற்றவேண்டும். தொற்றுநோய்கள் பரவாமல் தடுக்கவேண்டும். மழைவெள்ளதால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மக்களுக்கும் தாமதமின்றி நிவாரணம் வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட மக்கள் நலக்கூட்டணி சார்பில் தூத்துக்குடி சிதம்பர நகரில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் கலைவேந்தன், முன்னாள் எம்.பி.அப்பாத்துரை ஆகியோர் தலைமை வகித்தனர். தூத்துக்குடி மாவட்ட மதிமுக செயலாளர் எஸ்.ஜோயல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் கே.எஸ்.அர்ச்சுனன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.அழகுமுத்துபாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் தெற்கு&முரசுதமிழப்பன், மாநகர் செல்வக்குமார், வடக்கு கதிரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதிமுகவின் மாநில மீனவரணி செயலாளர் நக்கீரன் வரவேற்றார். 

ஆர்ப்பாட்டத்தில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டு பேசியதாவது:-

தமிழகத்தை ஆண்டுவருபர்களும், ஏற்கனவே ஆட்சி புரிந்தவர்களும் இயற்கை வளங்ளை பாதுகாக்க தவறியதின் விளைவினாலே இதுமாதிரியான இயற்கை சீற்றம் ஏற்பட்டு மக்கள் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடியில் கடந்த 1992ம் ஆண்டு ஏற்பட்ட மழைக்கால பேரழிவுக்கு பின்பு இந்த 2015ம் ஆண்டு தான் பேரழிவு ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த அளவிற்கு மக்கள், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளபோதும் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை மத்திய அரசின் நிவாரணக்குழு பார்வையிட வரவில்லை. இவர்களை பார்வையிட வருமாறு மாநில அரசும் வலியுறுத்தவில்லை. மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மாவட்ட நிர்வாகமும், மாநில அரசும் தான் செய்யவேண்டிய கடமையை செய்யத் தவறியதை எடுத்துரைக்கவே மக்கள்நலக் கூட்டணி மூலமாக இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மழையினால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்துள்ள மக்கள் தங்களுக்கான நிவாரணங்களை அரசு தராத நிலையில் அதனைக்கேட்டு அறவழியில் போராட்டம் நடத்தியுள்ளனர். இதற்காக அப்பாவி மக்கள் மீது இந்த அரசு காவல்துறையை ஏவிவிட்டு வழக்குப்பதிவு செய்துள்ளது பெரும் கண்டனத்திற்குரியதாகும்.

இந்த அரசானது விமர்சனத்தை ஏற்க விரும்புவதில்லை, ஏதாவது விமர்சனம் செய்தால் அவர்கள் மீது பொய்வழக்கு போடுவதும், அவதூறு வழக்கு தொடுப்பதும் வாடிக்கையாகி விட்டது. இதற்கு சகிப்புத்தன்மை இல்லாதது தான் காரணமாகும். இருந்தபோதும் தமிழக அரசு மழைக்கால நிவாரணம் கேட்டு போராடிய மக்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை எல்லாம் உடனடியாக வாபஸ் பெறவேண்டும்.

தூத்துக்குடி பக்கிள் ஓடையை வரை படத்தில் உள்ளபடி குறுகலாக இல்லாமல் அகலமாக கட்டவேண்டும், உப்பாற்று ஓடையிலுள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும். கொம்பாடி ஓடையில் வீணாகும் தண்ணீரை தடுத்து சேமித்திட தடுப்பணை கட்டுவதற்கு இந்த அரசை வலியுறுத்த வேண்டும் என்று என்னிடம் சொன்னார்கள். ஆனால் இப்போது நிலமை அப்படி இல்லை, குறிபிட்டபடி அணை கட்டுவதற்கு இந்த அரசிற்கு காலஅவகாசம் இல்லை, ஏனெனில் வரும் தேர்தலோடு இந்த அரசிற்கு முடிவு கட்டப்பட்டு விடும். 

பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டும் மாநில அரசு நீர்நிலைகளை பராமரிக்க முன்வரவில்லை. ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி அணையில் மணலை அள்ளும் நோக்கத்தில் தான் இந்த அரசு தூர் வாரும் பணிகளை மேற்கொண்டது குறித்து நாங்கள் பசுமைத்தீர்பாயத்தில் எடுத்துரைத்தோம். இதன்மூலமாக தீர்ப்பாயம் அணையின் முதல், 2வது ரீச்களில் மட்டும் அமலைச்செடிகள் மற்றும் கழிவுகளை அகற்ற உத்தரவிட்டுள்ளது.

மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள வாழை விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.ஒன்றரை லட்சமும், நெல்பயிர் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25ஆயிரமும், மானாவாரி பயிர் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.20ஆயிரமும், வீடுகளை இழந்தவர்களுக்கு ரூ.25ஆயிரமும், ஒரளவு சேதமடைந்த வீடுகளுக்கு ரூ.20ஆயிரமும், இறந்த மாடுகளுக்கு ரூ.50ஆயிரமும், ஆடுகளுக்கு ரூ.10ஆயிரமும், கோழிகளுக்கு ரூ.500 வீதம் நிவாரணம் வழங்கிடவேண்டும் என்று மக்கள் நலக்கூட்டணி சார்பில் இந்த அரசை ஏற்கனவே வலியுறுத்தியுள்ளோம்.

இதன் அடிப்படையில் சேதாரங்களை கணக்கிட்டு அதற்கான நிதியை மத்திய அரசிடம் இருந்து பெற்றுக்கொடுத்திடவேண்டும். தமிழக மழைவெள்ள சேதத்தினை ஈடுகட்ட மத்திய அரசு ரூ.10ஆயிரம் கோடி நிதி வழங்கிடவேண்டும் என்று நாங்கள் மாநில அரசை வலியுறுத்தியுள்ளோம்.

இதற்கேற்ப மத்திய அரசு வழங்கும் நிவாரண நிதியானது பாதிக்கப்பட்ட மக்களுக்கு சரியானபடி சென்று சேர்ந்திட அனைத்து கட்சிகளையும் சேர்ந்த பிரமுகர்கள், விவசாயசங்க பிரதிநிகள் அடங்கிய கண்காணிப்பு குழுவை அமைத்திட வேண்டும். அவர்களின் கண்காணிப்பிலேயே பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படவேண்டும். அப்போதுதான் தவறுகள் ஏதும் நடைபெறாமல் தடுக்கமுடியும்.

தூத்துக்குடி மாநகரில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில்
தேங்கி கிடக்கும் மழைநீரை உடனடியாக அப்புறப்படுத்திடவேண்டும், மறியல்
செய்ததற்காக பொதுமக்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெறவேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.

தமிழக அரசியலில் மாற்றத்திற்கான அடையாளமாக திகழும் மக்கள் நலக்கூட்டணி குறைந்தபட்ச செயல்திட்டத்தினை வெளியிட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக, அதிமுக தான் மாறிமாறி ஆட்சி அமைக்கும் என்ற பார்மூலா எங்களால் இனி உடைபட்டுவிடும். வரும் 2016ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி மகத்தான வெற்றிபெறும் என்றார்.

ஆர்ப்பாட்டத்தில், மதிமுக நிர்வாகிகள் காசிராஜன், நிஜாம், ராசேந்திரன், எரிமலைவரதன், தனபால்ராஜ், வரதராஜன், சிவஞானவேல், வி.சி.நிர்வாகிகள்
தமிழ்இனியன், பூலான்பாண்டியன், செல்வகுமார், கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் ராஜா, பேச்சிமுத்து, சங்கரன், பெருமாள், ரவீந்திரன், முத்து, பூமயில் உட்பட மக்கள் நலக்கூட்டணியின் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் திரளாக கலந்துகொண்டனர்.

தகவல்: எம்.பார்த்திபன் சங்கர் தூத்துக்குடி

ஓமன் மதிமுக இணையதள அணி

தூத்துக்குடி வெள்ள சேதங்களை பார்வையிட்டார் வைகோ!

தூத்துக்குடி மாவட்டத்தில் மழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட வெள்ள சேதங்களை பார்வையிட்டார் தலைவர் வைகோ. மக்களிடம் குறைகளையும் கேட்டறிந்தார். இன்றளவும் தண்ணீரின் அளவு குறையாமல் இருக்கிறது. தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை தண்ணீரை அகற்ற. தலைவர் வைகோ அவர்கள் மற்றும் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஜோயல் அவர்கள் மற்றும் கழகத்தினர் முழங்கால் தண்ணீரில் நடந்து சென்று பார்வையிட்டு மக்களுக்கு ஆறுதல் கூற்னார்கள்.

ஓமன் மதிமுக இணையதள அணி

Friday, November 27, 2015

வடசென்னை மதிமுக சார்பில் மாவீரர் நாள் கூட்டம் வைகோ வீர உரை!

தமிழீழ வீரர்களை இறந்தவர்களை நினை கூறும் தினமானது மாவீரர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. அனைத்தும், தமிழின முதல்வர் தலைமையில் படை நடத்த தயாராக இருந்தது. செங்காந்தள் மலரோடு வீர வணக்கம் செலுத்த தமிழ்வாளர்கள்.

ஓவியர் வீர.சந்தானம் மற்றும் தோழர் வே.பொன்னையன் வருகை புரிந்தார்கள். அப்போது ஜீவன் அவர்கள் ஐயா சந்தானம் அவர்களின் உடல் நலனை விசாரித்தார்கள்.

துணைப் பொதுச் செயலாளருடன் இயக்குநர் கவுதமன்.ஐயா பெ.மணியரசன் ஆகியோர் வருகைபுரிந்தனர்.

பினர் தலைவர் வைகோ மற்றும் புலமைப்பித்தன் அவர்கள் வருகை புரிந்தார்கள். ஜீவன் அவர்கள் சென்று வரவேற்றார். பின்னர் கூட்ட ஏற்பாட்டை பார்வையிட்டார் தலைவர். 

தலைவர்கள் கைகளில் கார்த்திகை பூ கொடுக்கப்பட்டது. மெழுகுவர்த்தியும் கொடுத்து, பின்னர் மாவீரர் ஜோதி ஏற்றப்பட்டது. தலைவர்கள் பின்னால் தொண்டர்களும், இணையதள அணியினரும் ஜோதி ஏற்றினர். பின்னர் தலைவர் வைகோ அவர்கள், உறுதி ஏற்போம், உறுதி ஏற்போம், தமிழீழத்தை நிர்மாணிக்க உறுதி ஏற்போம், உறுதி ஏற்போம், வீர வணக்கம், வீர வணக்கம் மாவீரர்களுக்கு வீரவணக்கம் என வீர முழக்கமிட்டனர்.

ஆவடி அந்தரிதாஸ் தொகுத்து வழங்க, தொடர்ந்து பேசிய விவசாய அமைப்பு பொன்னையன் அவர்கள், தடைகளை உடைத்து இந்த மாவீரர் நாள் நிகழ்வை நடத்தும் உங்களை (வைகோ) பாராட்டுகிறோம் என்றார். 

தொடர்ந்து தமிழ்ப் புலிகள் நாகை.திருவள்ளுவன் அவர்கள் வீர வணக்க உரையாற்றினார்.

அன்னை மாரியம்மாள் அவர்கள் வைகோவிற்கு அன்னை மட்டுமல்ல, எனக்கும் அவர்கள் அன்னைதான், என உணர்ச்சியுடன் உரை துவக்கினார் கவிஞர் புலமைப்பித்தன் அவர்கள். 

போர் வீரரை பெற்றெடுத்த அன்னை மாரியம்மாள் அவர்களுக்கு வீர வணக்கம். எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் அன்னை வளர்க்கையிலே! என்பதற்கேற்ப வளர்த்த புயல் இங்கே அமர்ந்திருக்கிறது என தலைவரை சுட்டிகாட்டினார்.

பிரான்சில் 130 பேருக்காக கொதித்தெழுந்த சமுதாயம் ஒன்றரை லட்சம் தமிழ் உறவுகள் அமைதி காத்தது ஏன் என கேள்வியும் எழுப்பினார்

இயக்குநர் கவுதமன் பேசுகையில், இப்போது 14 ஆண்டுகளுக்கு பிறகு நீர் எப்படி மீண்டும் தன் இடத்தை அடைந்ததோ, அது போலவே ஈழத்திலும் நடக்கும் என்றார். 

விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமா அவர்கள் மாவீரர் நாள் நிகழ்வுக்கு வருகை புரிந்தார்.

எழிலுற மாவீரர் மேடை அமைத்த தோழர் ராஜேஷ் அவர்களுக்கு தலைவர் வைகோ பொன்னாடை அணிவித்து பாராட்டினார்.

புலிச்சட்டை போட்டிருந்ததால் தலைவர் வைகோவுக்கு பினாங்கு செல்ல சிங்களவன் தடை விதிக்க பார்த்தது. தமிழின துரோகம் செய்த கட்சிக்கு பழி தீர்க்க வேண்டிய தேர்தல் 2016. உன் தலைமைக்காக எம்மினத்தை அழித்தவர்களை விடக்கூடாது என சந்தானம் பேசினார்.

தமிழ் தேசிய இயக்கத் தலைவர் பெ.மணியரசன் அவர்கள் வீர வணக்க உரை நிகழ்த்தினார். 

அன்னை பார்வதி அம்மாள், அன்னை மாரி அம்மாள், செந்தூரன் மற்றும் மாவீரர்கள் மறைவுக்கு ஒரு நிமிடம் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

பின்னர் பேசிய திருமாவளவன் அவர்கள் தடை தாண்டி இந்த மாவீரர் நாள் நடத்துவதற்கு தலைவர் வைகோ அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன் என உரை துவக்குகினார்.

தமிழின உணர்வாளர்களை ஒருங்கிணைக்க அண்ணன் வைகோ அவர்கள் உலகம் முழுவதும் சுற்று பயணம் செய்து உலகத்தமிழர்களை ஒன்றிணைக்க வேண்டும் என வேண்டுகோள் வைத்தார்.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றே தமிழீழம் சாத்தியப்படும். அதற்கு தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும். அதை ஒருங்கிணைக்க கூடிய தகுதியும் திறமையும் அண்ணன் வைகோ அவர்களுக்கு உண்டு. அந்த பொறுப்பை அண்ணன் ஏற்க வேண்டும் எனவும் கூறினார்.

தமிழின முதல்வர் மாவீரர் நாள் உரை டொடங்கி பேசியவர், தடை என்றாலும் தாயகத்தில் இந்த விழா நடந்திருக்கும். ஆஸ்லோ மாநாட்டிற்கு நான் செல்ல வேண்டும் என பிரபாகரன் ஆசைப்பட்டார். கலைஞர் கருணாநிதி அவர்களின் ஈழத்தமிழர் துரோகத்தை மன்னிக்க முடியாது. மக்கள் எனக்கு எந்த பதவியை தரவில்லையென்றாலும் ரோட்டில் வைத்தாலும் அங்கு நின்று தமிழர்களுக்காக பாடுபடுவேன்.

அன்னை மாரியம்மாள் நினைவுடன் அன்னை பார்வதி அம்மாள் நினைவுகளோடு ஒப்பிடும்படியாக நினைவு கூர்ந்தார். 

சுதந்திர தமிழீழத்திற்கு ஒரே தீர்வு பொது வாக்கெடுப்பு என்று ப்ரேசல்ஸ் மாநாட்டில் முன் எடுத்ததைதான் என் வாழ்நாள் சாதனையாக கருதுகிறேன், அது நடக்கும். 

மனிதன் லட்சியங்களுக்காக வாழ வேண்டும். மனிதனுக்கு மரணம் உண்டு. லட்சியங்களுக்கு மரணமில்லை. பதவி வகித்தவர்கள் இன்று நீதிமன்ற படிக்கட்டுகளில் ஏறுகிறார்கள் என பேசினார்.

ஓமன் மதிமுக இணையதள அணி