Friday, November 20, 2015

மலேசிய துணை பிரதமரின் விசேட அதிகாரத்தால் மலேசியா நுழைந்தார் வைகோ!

"இலங்கை தமிழர்கள்" வாழ்வில் மறுவாழ்வு ஏற்பட, இலங்கைத்தமிழின படுகொலையை கண்டித்து ஐ.நா மன்றத்தில் தமிழின அழிவுக்கு நீதிகிடைக்க "மலேசியாவில்" பினாங்கு துணைமுதல்வர் "பேராசிரியர்" திரு. இராமசாமி அவர்கள் தலைமையில் நடைபெறும் மாநாட்டில் சிறப்புவிருந்தினராக கலந்துகொண்டு மக்கள் தலைவர், தமிழின முதல்வர் வைகோ 21.11.2015 அன்று சிறப்புரையாற்ற உள்ளார்.

இந்நிலையில் மலேசிய குடிநுழைவுத்துறை வைகோவிற்கு விசா வழங்க மறுப்பு தெரிவித்தது. உடனே குடிநுழைவுத்துறையின் முடிவை பரிசிலனை செய்யுமாறு கடிதம் எழுதி, சுற்றுலா அமைச்சரிடமும் பேசினார் பினாங்கு மாநில துணை முதலமைச்சர் பேராசிரியர் இராமசாமி. அமைச்சரின் சிறப்பு அதிகாரத்தின் மூலம் துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜாஹிட் ஹமிடி அவர்கள், பினாங்கு மனித உரிமை கருத்தரங்கில் கலந்துக்கொள்ள வரவுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களுக்கு மலேசியாவிற்குள் நுழைய அனுமதி மறுத்த குடிநுழைவுத்துறையின் முடிவை நிராகரித்து, உடனடியாக உள்துறை அமைச்சரின் அதிகாரத்தின் படி, வைகோ அவர்களுக்கு குடிநுழைவு அனுமதியை அளித்தார். இதனால் சில மணி நேரங்களில், சென்னை இந்திய துணை தூதரகத்தின் வழி வைகோ அவர்களுக்கு மலேசியாவிற்குள் நுழைய அனுமதி பத்திரம் (விசா) வழங்கப்பட்டது.

இதனால் வைகோ அவர்கள் நேற்று இரவு மலேசிய செல்ல சென்னை விமான நிலையத்திற்கு வருகை தந்து மலேசியா புறப்பட்டு சென்றார். தலைவர் வைகோ அவர்களை மதிமுக முக்கிய நிர்வாகிகள் தொண்டர்களுடன் பயணம் வெற்றியடைய மலேசியா செல்ல வழியனுப்பி வைத்தனர். இன்று காலை மலேசியா பினாங்கு சென்றடைந்த வைகோ மற்றும் வைகோவின் துணைவியார் ரேணுகா தேவி அம்மையார் அவர்களை பினாங்கு துணை முதலமைச்சர் பேராசிரியர் திரு.ராமசாமி உள்ளிட்ட நிர்வாகிகள், மற்றும் ஏற்கனவே மலேசியா சென்றிருந்த சென்னை மதிமுக இணையதள அணியினர், மதிமுக மாநில நிர்வாகிகள், சிங்கப்பூர் மதிமுகவினர் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் தலைவர் வைகோ அவர்கள் ஹோட்டல் ஜென்னில் சென்றார். அங்கும் கழகத்தினர் சந்தித்து பேசினார்கள்.

கடல் கடந்தும் ஈழத்தமிழருக்கான கண்ணீருக்கு உரிமைக் குரல் கொடுக்க தமிழின முதல்வர் வைகோ அவர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்த மலேசிய துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜாஹிட் ஹமிடி அவர்களுக்கும், இதற்கு உதவியாய் இருந்து அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் தெரிவித்துக்கொள்கிறோம்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment