Monday, November 23, 2015

திமுகவுக்கு சொம்படிக்கும் தினமல( ). மக்கள் அரவணைப்பில் மக்கள் நலக்கூட்டணி!

தமிழ் நாட்டின்,பத்திரிக்கைகள் தங்கள் ஆட்டத்தை தொடங்கி விட்டன. ஏசி அறையில் அமர்ந்து கொண்டு, வெட்கமே இல்லாமல் தமிழ்நாட்டு அரசியல் இப்படி போகும்,அப்படி ஆகும் என்று அளக்கிறார்கள். திமுக தலைமையில் மகா கூட்டணி அமைய வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தாபானர்ஜி, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், லாலுபிரசாத் யாதவ்,சரத் யாதவ் ஆகியோர் ஸடாலினுடன் பேசியதாக "கப்சா" செய்தியை தினமல( ), இன்று முதல் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

நிதீஷ் குமார் தமது பதவி ஏற்பு விழாவுக்கு ,திமுகவிற்கு மட்டும் அழைப்பு அனுப்பியது போன்று செய்தி வெளியிடுகிறார்கள். தலைவர் வைகோ வுக்கும் அழைப்பு வந்தது. ஆனால் மலேசிய பயணம் இருமாதங்களுக்கு முன்பே முடிவானதால் ,பீகார் செல்ல இயல வில்லை.

தமிழ் நாட்டில் பா.ஜ.க வுக்கு எந்த செல்வாக்கும் இல்லை என்பதை நாடாளுமன்றத் தேர்தல் காட்டியிருக்கிறது. தமிழ் நாட்டின் எல்லா சீரழிவுகளுக்கும் காரணமான அதிமுக,திமுக இரு கட்சிகளுக்கு மாற்றாக அணி உருவாக வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். மக்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப, தலைவர் வைகோ தலைமையில் மக்கள் நலக்கூட்டணி உருவாகிவிட்டது.இந்த அணி மேலும் வலுப்பெற்று மக்கள் ஆதரவை பெறும் என்ற சூழல் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.

இதை கண்டு பொறுக்க முடியாமல்,2011 இல் எந்த ஊழல் கட்சி ஆட்சியை தூக்கி எறிய வேண்டும். குடும்ப அரசியல்,அராஜக ஆட்சி ஒழிய வேண்டும் என்று வரிந்து கட்டிக் கொண்டு எழுதினார்களோ அதே ஆட்சி வர வேண்டும் என்று தினமல( ), விகடன் போன்றவை எழுதி வருவதற்கு எந்த தார்மீக அறுகதையும் இல்லை. இவர்கள் எந்த கூப்பாடு போட்டாலும் குடும்பக் கட்சியுடனும்,மன்னார்குடி மாஃபியா குடும்ப ஆதிக்க கட்சியுடனும் இங்கு எவரும் கூட்டணி சேர தயாராக இல்லை.மாற்றத்தை தரும் தகுதி மக்கள் நலக் கூட்டணிக்கு மட்டுமே உள்ளது.

கருத்து: மு.செந்திலதிபன்-அரசியல் ஆய்வு மைய செயலாளர் மதிமுக

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment