Friday, November 27, 2015

"தாமிரபரணி நதியை பாதுகாக்க 30.11.15 திருநெல்வேலியில் மாபெரும் போராட்டம்!

கடந்த (16.11.15) திங்கள் அன்று 20 அமைப்புகள் ("வணிகர் சங்கங்களின் பேரவை வெள்ளையன்) - நெல்லை மாவட்ட வர்த்தகர் கழக பேரவை செயலாளர் ராமகிருஷ்ணன்", எழுத்தாளர் நாறும்பூநாதன், மதிமுக, தேமுதிக, 2 கம்யுனிஸ்ட் கட்சிகள், மற்றும் பொது நல அமைப்புகள், முற்போக்கு எழுத்தாளர் சங்கம் போன்றவைகள் ஓன்று கூடி தாமிரபரணியை "பன்னாட்டு திருடர்களான" "பெப்சி மற்றும் கோக்" போன்ற நிறுவனங்களிடம் இருந்து பாதுக்காக்க, திருநெல்வேலி மாவட்ட ஆட்சி தலைவரிடம் முன் அனுமதி பெற்று மனு அளிக்க சென்றனர்.

ஆனால் இவர்கள் செல்வதற்கு முன்னரே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை விட்டு சென்று விட்டார். பின்னர் மனுவை DRO விடம் அளித்துவிட்டு, கலெக்டர் ஓடி சென்றதற்கு "தங்களது" கடும் எதிர்ப்பையும் தெரிவித்து விட்டு வந்தனர்.

இந்நிலையில் அடுத்த கட்ட "பெரும் மக்கள் போராட்டமாக" நெல்லையில் வரும் (30.11.15) திங்கள் கிழமை அன்று, "பெப்சி & கோக் எதிர்ப்பு குழு" என்ற பொது அமைப்பின் மூலம், மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இருக்கிறது.

இதில் முக்கிய வேண்டுகோள் எந்த ஒரு அமைப்பினரும் தங்களது கட்சி கொடிகளை கொண்டு வர வேண்டாம். "பெப்சி - கோக் எதிர்ப்பு குழு" என்ற ஒரே பேனர் மட்டுமே இடம் பெரும் & இடம் பெற வேண்டும்.

இதில் இந்த 20 அமைப்பினர் தவிர, "மக்கள் நலத்தில், சுற்று சூழலில் உண்மையான" அக்கறை உள்ள அமைப்புகள் கலந்து கொள்ளலாம். இந்த போராட்ட குழு ஒருங்கிணைப்பு அமைப்பாளராக & தலைவராக திரு K G பாஸ்கரன் (கம்யுனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர்) தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளார். பங்கு பெற விருப்பமுள்ளவர்கள் இவரின் அலைபேசி எண் - "9442328184 " தொடர்பு கொண்டு, மற்ற தகவல்களை பெற்று கொள்ளலாம்.

மாநில அளவில் வணிகர் சங்க தலைவர் திரு வெள்ளையன் அவர்கள் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்து உள்ளார். மற்ற கட்சி & அமைப்புகளின் மாநில & தேசிய தலைவர்கள் கலந்து கொண்டால் போராட்டம் இன்னும் வலுபெற்று வெற்றி கிடைக்கும். 

எனவே பொதுமக்கள் ஏராளமாக கலந்துகொண்டு தென் தமிழகத்தின் நீர் ஆதாரமாக விளங்கும் தாமிரபரணியை பாதுகாக்க வேண்டி போராடி வெற்றி கிடைக்க வழிவகை செய்யவேண்டுமென்று அன்புடன் ஓமன் மதிமுக இணையதள அணி சார்பாக கேட்டுகொள்கிறோம்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment