Sunday, November 15, 2015

இயக்குநர் திலகம் கே.எஸ். கோபாலகிருஷ்ணன் மறைவிற்கு வைகோ இரங்கல்!

பாடல் ஆசிரியராக, கதை வசனகர்த்தாவாகத் தன் கலையுலக வாழ்வைத் தொடங்கி, தலைசிறந்த திரைப்பட இயக்குநராகப் பிரகாசித்தவர் இயக்குநர் திலகம் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் ஆவார்.

இல்லற வாழ்வில் கணவனும் மனைவியும் மேற்கொள்ளும் உன்னதமான தியாக உணர்வை அற்புதமாகச் சித்தரித்த சாரதா திரைப்படத்தின் மூலம், தான் ஒரு சிறந்த படைப்பாளி என்பதை நிரூபித்தார். அதனைத் தொடர்ந்து கற்பகம், கை கொடுத்த தெய்வம், பணமா? பசமா? என 70 படங்களை இயக்கி உள்ளார்.

எழுத்தாளர் மகரிஷியின் பனிமலை நாவலை, என்னதான் முடிவு? எனும் அற்புதக் காவியமாக அவர் இயக்கினார்; அந்தப் படம் வர்த்தக அடிப்படையில் தோல்வியுற்றபோதும், குற்றம் புரிந்தவன் அதனை உணர்ந்து மனசாட்சியின் தாக்குதலால் துடிப்பதை அத்திரைப்படத்தில் நடிகர் டி.எஸ். பாலையா அவர்கள் மூலம் விவரித்தார்.

காலத்தால் அழியாத நல்ல திரைப்படங்களை வழங்கிய இயக்குநர் திலகத்தின் மறைவால் துயரத்தில் தவிக்கும் அன்னாரின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என வைகோ தெரிவித்துள்ளார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment