Saturday, November 14, 2015

கொட்டும் மழையிலும், காட்டாறு போன்ற வெள்ளத்திலும் மக்கள் நலனில் வைகோ!

ம.தி.மு.க பொதுச்செயலாளரும், மக்கள் நல கூட்டணியின் ஒருங்கிணைப்பாளருமான வை.கோ மக்கள் நலனிற்காக பல நல்ல பணிகளை செய்து வரும் நிலையில் அவரது தாயார் மாரியம்மாள், கடந்த சில தினங்களுக்கு முன்னர் உடல் நிலை சரியில்லாமல் இறந்து விட்டார். இருப்பினும் தாய் இறந்த துக்கம் தாங்காமல் இருக்கும் நிலையிலும் கடலூரில் பெய்து வரும் தொடர்மழையால் அங்கு வசிக்கு மக்களை கொஞ்சம் கூட நினைக்காமல் ஊடகங்கள் வழியாக வெறும் அறிக்கை மட்டுமே விடும் அரசியல் வாதிகள் மத்தியில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வை.கோ நேற்று (13-11-15) மாலை 6 மணி முதல் இரவு 12.10 மணி வரை மக்களை ஆங்காங்கே கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் அவர்கள் படும் துயரங்களையும் கேட்டறிந்து அவர்களுக்கு மிக்க ஆறுதல் கூறினார். மேலும் இந்நிலையில் இரண்டாவது நாளாக இன்று (14-11-15) ஆய்வு நடத்தி வருகிறார். மக்களோடு மக்களாக, மக்கள் நலனில் பாடுபட்டு வரும் இவர், வெறும் அறிக்கைகள் மூலமாகவே மக்களை சந்திக்காமல், அரசியல் நடத்தும் அரசியல் வாதிகள் மத்தியில் தலைவர் வை.கோ நல்ல மனிதர் என்கின்றனர் கடலூர் பகுதி மக்கள்.

கடலூர் மாவட்டத்திற்கு வெள்ள நிவாரணம் வழங்க வந்த அதிமுக அமைச்சர்கள் வெள்ளை வேட்டியில் அழுக்குப் படாமல், மக்கள் தங்கவைக்கப்பட்டிருந்த முகாம்களிலேயே தங்கள் பணிகளை முடித்துக்கொள்ள வைகோவோ, விடிய விடிய கொட்டும் மழையிலும், பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்டும், மக்கள் இருப்பிடங்களுக்கே சென்றும் ஆறுதல் கூறிவருகிறார். ஆட்சியும் அதிகாரமும் இருப்பவர்கள் மக்களிடமிருந்து ஒதுங்கிநிற்க, எந்தப் பதவியிலும் இல்லாத இவரோ மக்களோடு ஒன்றி நிற்கிறார்.

இனியாகிலும் சிந்தியுங்கள் தமிழர்களே, அதிமுக, திமுக ஆட்சி வேண்டுமா? மக்கள் நலக் கூட்டணி ஆட்சி வேண்டுமா என்று. ஆராய்ந்து பாருங்கள் உங்களுக்கே புரியும். மக்கள் நலக்கூட்டணியே ஆட்சியை பிடிக்க வேண்டுமென்று...

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment