Monday, November 2, 2015

நவம்பர் 1ல் தர்மபுரியில் மதிமுக மாணவர்கள் நடத்திய முப்பெரும் விழா!

தருமபுரி மாவட்ட மறுமலர்ச்சி மாணவர் மன்றம் சார்பில் தருமபுரி மாவட்டம் 50 ஆம் ஆண்டு பொன்விழா, மொழிவாரி தமிழகம் உருவான நாள், கழகத்தில் புதிய மாணவர்கள் இணைதல் - முப்பெரும் விழா நேற்று 01-11-20015 நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மறுமலர்ச்சி மாணவர் மன்ற மாநில அமைப்பாளர் சசிகுமார், மதிமுக மாநில மாணவரணி அமைப்பாளர் தி.மு.ராஜேந்திரன், கழக வழக்கறிஞர் ஆவடி அந்தரிதாஸ் உள்ளிட்ட மாணவர் மன்ற பொறுப்பாளர்கள், மதிமுகழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 100 க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் கழகத்தில் இனைந்தனர். கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம் 1 :
தருமபுரி மாவட்டம் உருவாகி 50 வது ஆண்டு தொடங்கும் பொன்விழாவை ஒட்டி மறுமலர்ச்சி தி.மு.க வின் மறுமலர்ச்சி மாணவர் மன்றம் சார்பில், பொதுமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதோடு, தமிழகத்திலேயே மிகவும் பின்தங்கிய மாவட்டமான தருமபுரி மாவட்டத்தின் ஒட்டுமொத்த கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் கல்வி, பொருளாதார சமநிலையை உருவாக்குவதற்கும், முழுமையான அமைதி மாவட்டத்தில் நிலவுவதற்கும் தமிழக அரசு ரூபாய் ஆயிரம் கோடியிலான பொன்விழா சிறப்பு நிதி திட்டத்தை அறிவித்திட வேண்டும் எனவும், தமிழக அரசு ஊராட்சிகள், நகராட்சி வட்டங்கள் தோறும் பொன்விழா ஆண்டை வெகு சிறப்பாக நடத்துவதற்கு முன்வர வேண்டும் என்றும் இக்கூட்டம் தமிழக அரசை வலியுறுத்துகின்றது.

தீர்மானம் 2 :
மொழிவாரி தமிழகம் உருவான திருநாளை கொண்டாடும் இத்தருணத்தில் இந்தியாவின் ஆட்சி அலுவல் மொழியாகவும், உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாகவும் தமிழ் மொழியை கொண்டுவர வேண்டும் எனவும், உலகச் சமூகத்திற்கு வாழ்வியலை போதிக்கும் உன்னத நூலான திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்றும் இந்திய அரசை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் 3 :
தமிழக காவிரி எல்லைப் பகுதியான ஒக்கேனக்கலின் மறுகரையில் உள்ள தமிழர் குடும்பங்களை வெளியேற்ற கர்நாடக அரசு தொடர்ந்து தனது அக்கிரம போக்கை அரங்கேற்றி, வீடுகளை தீ வைத்து கொளுத்தி விடுவோமென தமிழ் மக்களை அச்சுறுத்துகின்றது. மக்கள் தலைவர் வைகோ அவர்கள் கர்நாடக அரசின் பாசிச போக்கிற்கு கண்டனம் தெரிவித்து மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மறுமலர்ச்சி திமுக சார்பில் தனது கோரிக்கையை ஐந்து மாதங்களுக்கு முன்பு முன்வைத்தார். அக்கோரிக்கையை இக்கூட்டம் வழிமொழிவதோடு, அம்மக்களுக்கான வாழ்வுரிமையை உறுதி செய்திடும் வகையில் தமிழக அரசு, மத்திய அரசுக்கும், கர்நாடக அரசுக்கும் அழுத்தம் கொடுத்து போர்கால அடிப்படையில் பிரச்னையை தீர்த்து வைக்க வேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் 4 :
தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சேலம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் ஏராளமான மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கான குடும்ப அட்டைகள், சாதி சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை போன்ற எந்த அடிப்படை உரிமங்களும் பெற முடியாத சூழல் நிலவுவதால், அம்மக்கள் பெரும்வேதனையில் தவிக்கின்றனர். ஆகையால் மேற்கண்ட அனைத்து மாவட்டங்களிலும் வாழும் மலைவாழ் பழங்குடி மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் சலுகைகளை தமிழக அரசு மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மூலமாக வழங்கிட விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வேண்டும் என இக்கூட்டம் தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 5 :
மறுமலர்ச்சி மாணவர் மன்றத்தில் ஒரு லட்சம் மாணவர்களை இணைத்திட தீர்மானிக்கப்பட்டு உள்ள நிலையில், தருமபுரி மாவட்டத்தில் 1500 மாணவர்களை இன்று முதல் தொடர்ந்து டிசம்பர் 15 க்குள் இணைத்திட இக்கூட்டம் தீர்மானிக்கின்றது.

தீர்மானம் 6 :
தமிழகத்தில் துணைவேந்தர்கள் நியமனங்கள் பணத்தை அளவுகோலாக கொண்டு தீர்மானிக்கப்படுவது பெரும் வேதனைக்கு உரியதாகும். இதனால் முழுமையாக பாதிக்கப்படுவது மாணவச் சமூகம் தான். பல பல்கலை கழகங்களில் குறிப்பாக மதுரை காமராஜ், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார், காரைக்குடி அழகப்பா உள்ளிட்ட பல்கலை கழகங்களில் துணைவேந்தர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன. நூறு சதவிகிதம் தகுதியும், திறமையும் கொண்டவர்களை மாத்திரமே துணைவேந்தராக நியமித்திட வேண்டும் என்றும், காலி பணியிடம் ஏற்படுவதற்கு முன்பே புதிய துணைவேந்தர் நியமன முறையை பின்பற்ற வேண்டும் என்றும் இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 7:
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு அருகே அரசு நூலகம் செயல்பட்டு வருகிறது. இதன் அருகே டாஸ்மாக் கடை உள்ளதால் நூலகத்திற்கு வருவோருக்கு சிரமங்கள் ஏற்படுகின்றது. எனவே பென்னாகரம் நூலகத்திற்கு அருகில் உள்ள மதுமானக் கடையை (டாஸ்மாக்) உடனடியாக அகற்றி நூலகம் முறையாக இயங்கிட வழிவகை செய்திட வேண்டுமென தமிழக அரசை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

இந்த முப்பெரும் விழாவிற்கு முந்தின நாள் இரவு நேரத்தில், அருமை சகோதரர்கள் சசிகுமார், முகேஷ் ஈழவன், தர்மபுரி சிலம்பரசன் மற்றும் கழக நண்பர்கள் சுவரொட்டி ஒட்டிக்கொண்டிருந்தார்கள். அந்த சமயத்தில் கையில் இருந்த சுவரொட்டிகள் தீர்ந்து விட்டது. மண்டபத்தின் வெளியில் வைத்திருந்த மீதி சுவரொட்டிகளை எடுக்க வந்த போது வரும் வழியில், இரவெல்லாம் கண்விழித்து சிரமப்பட்டு ஒட்டியிருந்த அனைத்து சுவரொட்டிகளும் அங்கிருந்த இடத்தில் இல்லை. காணாமல் போய்விட்டது.

எதிரே தான் நமக்கு நாமமே‬ குழுதான் முகாம் இட்டு இருந்தார்கள். ஸ்டாலின் தங்குவதற்கான மண்டபமும் அங்குதான் இருந்தது. இந்த இழிவு செயலை அவங்கதான் பாத்துட்டானுங்களோ அப்படிங்கற சந்தேகம் மட்டும் இன்னும் நீங்கவில்லை‬. அடுத்தவன் முன்னேற்றத்தை தடை செய்கிற அந்த கூட்டம் வாழட்டும்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment