Saturday, November 21, 2015

ஈழத்தமிழருக்கான உலகளாவிய கருத்தரங்கு தொடங்கியது மலேசியாவில். வைகோ துவக்க உரை நிகழ்த்தினார்!

இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்த உலகளாவிய கருத்தரங்கு மலேசியா நாட்டில் பினாங்கு மா நகரில் ஹோட்டல் ஜென் னில் பினாங்கு துணைமுதல்வர் திரு.ராமசாமி அவர்கள் தலைமையில் 21-11-2012 இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. இநிகழ்வில் பினாங்கு முதல்வர் டத்தோ LIm Guan Eng .அவர்கள் பங்கெற்று உள்ளார்கள். பினாங்கு துணை முதலமைச்சர் பேராசிரியர் ராமசாமி தலைமை வகிக்கிறார். தமிழீழத்திலிருந்து வட மாகாண சபை உறுப்பினர் ஆனந்தி சசிதரன், ரணிலை எதிர்த்து போட்டியிட்ட சிவாஜி லிங்கம் ஆகியோரும், தமிழகத்திலிருந்து விடுதலை புலிகளுக்கு 3 ஆண்டுகளுக்கும் மேலாக தனது சொந்த நிலத்தில் விடுதலை புலிகளுக்கு பாசறை அமைத்து 2000 விடுதலை புலிகளை தங்க வைத்து உணவிட்ட கொளத்தூர் மணி உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த கருத்தரங்கில் பேசிய பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பி ராமசாமி உரை நிகழ்த்தும்போது, எங்கள் வைகோ வருவதற்கா தடை! அதை உடைப்போம் என உணர்ச்சிபூர்வமாக பேசினார். தொடர்ந்து பேசிய மதிமுக செயலாளர் தமிழின முதல்வர் வைகோ அவர்கள் துவக்க உரை நிகழ்த்தினார்கள்.

கருத்துபட்டறை நிகழ்வில் கழகத்தின் சார்பில்பங்கு பெற்றுள்ள கழக குமார் மற்றும் ரெட்சன் அம்பிகாபதி, வழக்கறிஞர் தங்கவேல், மதிமுக இணையதள நண்பர்களான வைகோ கார்த்திக், ராஜ் மோகன், சிங்கப்பூர் மதிமுக இணையதள அணி சார்பில் துவார் சுப்பையா, கரிகாலன் உள்ளிட்ட தோழர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment