Sunday, March 13, 2016

சென்னை பெரம்பூரில் மக்கள் நலக் கூட்டணியின் 4 ஆம் கட்டப் மாற்று அரசியல் எழுச்சி பிரசாரப் பொதுக்கூட்டம்!

மக்கள் நலக் கூட்டணியின் 4 ஆம் கட்டப் மாற்று அரசியல் எழுச்சி பிரசாரப் பொதுக்கூட்டம், சென்னை பெரம்பூரில் காலை 11 மணி அளவில் நடைபெற்றது.

4 தலைவர்களும் மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சந்தித்து பேசிய பின்னர் நிகழ்ச்சி மேடைக்கு வருகை தந்தனர்.ப்போது 4 தலைவர்களுக்கும் மாலை அணிவித்து, வீரவாள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

அப்போது பேசிய இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு செயலாளர், திமுக-வின் கனவுகளைக் கலைக்க முடிவு செய்துள்ளது மக்கள் நலக் கூட்டணி. எந்தவித ரகசியம் இல்லாத வெளிப்படையான அணி மக்கள் நலக் கூட்டணி. தவறு செய்யும் முதல்வரை நீக்குவதற்குதான் இந்த கூட்டணி என உணர்ச்சி பொங்க பேசினார்.

தொடர்ந்து பேசிய விடுதலை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள், தொடர் பணிகளால் தென் மாவட்ட சுற்றுபயணம் திட்டமிட படவில்லை. விரைவில் தென் மாவட்டங்களுக்கும் வருவோம். இந்த கூட்டணி நீடித்து விடக்கூடாது என்று ஊடகங்கள் திட்டமிட்டு செய்தி பரப்புகின்றன. குடிசை வாழ் மக்களுக்கு சென்னையிலேயே வீடு கட்டி தருவோம். கூட்டணிக்காக யாருக்கும் காத்து கிடக்க வில்லை என பேசினார்.

மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு செயலாளர் ஜி.ஆர் பேசுகையில், தினகரன் கலைஞர் தொலைக்காட்சி உள்ளிட்டோர் மனநல மருத்துவமனைக்கு செல்ல வேண்டியவர்கள். மக்கள் நலக் கூட்டணி, கொள்கையால் உருவாக்கப்பட்ட கூட்டணி. திராவிட கொள்கையில் உறுதியாக இருக்கும் மதிமுக இயக்கத்தை பாராட்டுகிறோம் என்றார்.

அந்த மேடையில் குழந்தை ஒன்றுக்கு மதிவதினி என் பெயர் சூட்டி மகிழ்வித்தார் தலைவர் வைகோ அவர்கள்.

இறுதி உரை நிகழ்த்திய மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ அவர்கள் பேசும்போது, மக்கள் நலக் கூட்டணி உடைகிறது என்று பொய்ச் செய்தி பரப்பும் கலைஞர் அவர்களே, பொய் செய்திகளால் தான் திமுக அணிக்கு பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. கட்சி இரண்டாக உடையும் நிலை ஏற்பட்டிருக்கிறது என நாங்கள் பொய் செய்தி பரப்பினால் எப்படி இருக்கும் என கேள்வி எழுப்பினார்.

கோனி புளுகன் கோயபல்ஸ் விட மோசமான பொய்களை திமுக அவிழ்த்து விடுகிறது என் பொற்கைப் பாண்டியன் வரலாற்றை சொல்லி விளக்கினார்.

போட்டி மக்கள் நலக் கூட்டணிக்கும், அதிமுகவுக்கும் தான். திமுக முடிந்து போய்விட்டது என பேசினார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள்.

இந்த நிகழ்வில் மதிமுக, விசிக, சிபிஎம், சிபிஐ ஆகிய கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு களப் பணியாற்றினார்கள்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment