Saturday, March 5, 2016

செங்கல்பட்டு நகரில் திரண்ட மக்கள் வெள்ளம் தேர்தலுக்கு கட்டியம் கூறும்படி அமைந்ததோ!

இந்த செங்கல்பட்டு இடம் ஒரு சரித்திரப் பிரசித்தி பெற்ற இடம்.சற்று தூரத்தில் நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டிருகின்றது. வங்கத்துப் போரில் இறந்த டாக்டர் முரளி அவர்களின் நினைவுத் தூணுக்கு அருகில் அமைந்துள்ள மைதானம். நாம் யுத்தக் களத்துக்கு தயாரிக்கிக் கொண்டிருக்கின்ற நேரம். கவனம் சிதறக் கூடாது.

1964 ஆம் ஆண்டு அலைபாயும் வங்க கடலோரம்,மலேசியப் பயணம் சுற்றுப்பயணம் முடித்து விட்டு வந்த பொழுது மகாபாரதக் கதையைக் கூறினார்.

உலகத்தில் எங்கே தமிழனுக்கு துன்பம் என்றாலும் இரத்தம் கொதிக்க பாடுபட்டவன் என்ற தகுதியோடு,இந்த மண்ணின் ஊழியன் என்ற தகுதியோடு இந்த செங்கை மாநகரில் கேட்கின்றேன்.எனக்கு எந்தப் பதவி ஆசையும் இல்லை. 19 மாதம் சிறைவாசத்தை விட்டு வெளியே வந்த போதும் போட்டியிடவில்லை.நாங்கள் இதுவரை சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைத்ததில்லை.ஒரேயொரு முறை அதிமுகவுடன்.நான் அந்த தவறை ஒப்புக் கொள்கின்றேன்.

எங்கள் குழந்தைகளை கொன்று குவித்தவன் பதவியேற்புக்கு வந்த பொழுது ஜந்தர் மந்தரில் கருப்புக் கொடி காட்டிக் கைதானவன்.

இதுவே சந்தர்ப்பம்.இதுவே தருணம்.இருவருமே கூண்டில் நிறுத்தப்பட வேண்டியவர்கள்.உங்கள் பிள்ளைகளின் வருங்காலம் பத்திரமாக இருக்க வேண்டும் என்பதற்காக மக்கள் நலக் கூட்டணிக்கு வாக்களியுங்கள்.நான் சாதிகளுக்கு அப்பாற்பட்டவன். ச சிபெருமாள் நான் மதிக்கின்ற வன்னிய சமூகத்தைச் சேர்ந்தவர்.நானும் திருமாவளவனும் அவரது உடலை அடக்கம் செய்தோம்.ஜனநாயகத்தைக் காக்க மக்கள் நலக் கூட்டியக்கத்தை முன்னெடுக்கின்றோம்.

என் வாழ்க்கையே ஒரு போராட்டம்.காண்டேகர் சொன்னது போல புயல் இல்லாத கடல் இல்லை.தீ இல்லாத வேள்வி இல்லை.என் மீது கொலைப்பழி சுமத்திய பொழுது என் எதிரிக்கும் இந்த நிலைமை வரக் கூடாது என்றேன்.நான் சாகும் வரை எனக்கு அந்த உணர்வு இருக்கும்.

20 தமிழர்கள் கொல்லப்பட்ட பொழுது ஜெயலலிதா கண்டன அறிக்கை கொடுத்தாரா ? அந்தப் பதவிக்கு அருகதையற்றவர் ஜெயலலிதா.

நாங்கள் ஆட்சிக்கு வருவோம், டாஸ்மாக் கடைகள் அகற்றப்படும். தமிழகத்தில் ஊழல் ஆட்சி இல்லாத அரசாங்கத்தை கொடுப்போம்.

நாங்கள் ஆட்சிக்கு வருவோம், சாதி மத மோதல்கள் இருக்காது. சகாயம் போன்ற நேர்மையாளர்கள் முக்கியப் பதவியில் அமர்த்தப்படுவார்கள். வாரிசு அரசியல் அறவே இருக்காது. 

நாங்கள் ஆட்சிக்கு வருவோம். வி.ஐ.பி.க்கள் வருகைக்காக காவல்துறை அதிகாரிகள் கால்கடுக்க கடும் வெயிலில் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது.

வாரிசு அரசியலுக்கு இங்கு இடமில்லை. என் குடும்பத்தார் என் கட்சி அலுவலகம் கூட வந்தது கிடையாது.

வயிற்றெரிச்சல்.இந்தக் கூட்டணி நீடிக்காது என்று.எதிரிகள் என்ன வழியில் வருகின்றார்களோ அதைத் தடுப்போம். பத்திரிக்கையாளர்களே,உங்கள் நம்பகத்தன்மை தரைமட்டமாகி விடும். நம்ப தம்பிங்க சமூக வலைத்தளங்களில் பின்னி எடுக்குறாங்க. செய்திகளை பரப்புங்கள்.இளைய தலைமுறை நீங்கள் தான் தீர்மானிக்கின்றீர்கள்.

இளம் தலைமுறையினரே! உங்கள் கையில்தான் தமிழ்நாட்டின் எதிர்காலம் இருக்கிறது. நீங்கள்தான் இந்தத் தேர்தலைத் தீர்மானிக்கப் போகிறவர்கள் என பேசினார்.

பத்திரிக்கைகள் மீது எனக்கு எந்தக் கோபமும் இல்லை. வெற்றி விழாவில் வந்து ரொம்ப நேரம் பேசுறேன்.இணைந்து பணியாற்றுகின்றீர்கள். தேர்தல் விதிமுறைகளைப் பின்பற்றி மிகச்சரியாக 10:00 மணிக்கு கூட்டத்தை நிறைவு செய்தார் வைகோ.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment