Monday, May 25, 2015

வைகோவை வரவேற்க வெள்ளை சட்டை, கட்சி கொடி தாங்கிய வேட்டி தயார்!

நாகர்கோயிலுக்கு வருகை தரும் தலைவர் வைகோவை காவல்கிணறு என்னும் இடத்தில் வரவேற்க வெள்ளை சட்டை, கட்சி கொடி தாங்கிய வேட்டி தயார். ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் மறுமலர்ச்சி மைக்கேல் கலந்துகொள்கிறார்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

எழில் கொஞ்சும் குமரிக்கு வருகிறார் வைகோ!

தமிழகத்தின் தலைவன் மாசற்ற மாணிக்கம் மக்கள் தலைவர் வைகோ அவர்கள் குமரி மாவட்டமான நாஞ்சில் நாட்டிற்கு வருகை தருகிறார்.  தலைவர் வைகோவை குமரி மாவட்ட மதிமுக நிர்வாகிகளுடன் ஓமன் மதிமுக இணையதள அணியினரும் கலந்துகொண்டு வரவேற்கின்றனர். மதியம் 2 மணி அளவில் குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்திருக்கும் இடத்திற்கு அருகாமையிலுள்ள  PD.பிள்ளை திருமணமண்டபத்தில் மதிமுக கலந்தாய்வு கூட்டத்தில் கலந்துகொண்டு தின செய்தி பத்திரிகையின் வருட சந்தாவினை தலைவர் வைகோ பெற்றுக்கொள்கிறார். மாலையில் மார்த்தாண்டம் அப்பாவு நாடார் ஜவுளிகடை உரிமையாளர் இல்ல திருமண நிகழ்வில் கலந்து கொள்கிறார்.

மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி -  ஓமன்

Wednesday, May 13, 2015

ஓமன் மதிமுக இணையதள அணி நண்பர் வாழ்வில் ஒளியேற்றுக!

எனது அன்பிற்கினிய மதிமுக இணையதள அணி நண்பர்களே வணக்கம்!

தமிழகத்தின் வாழ்வாதாரங்களை, வருங்கால தலைமுறைகளை பாதுகாக்க எந்நாளும் சிறுதும் ஓய்வில்லாமல் போராடிக்கொண்டிருக்கும், ஆதாயம் தேடாத ஆகாயம், நம்முடைய இதயத்திலும் உணர்விலும் நீங்கா இடம்பெற்றிருக்கும், மக்கள் தலைவர் நமது கழக பொதுச்செயலாளர் வைகோ அவர்களை மதிமுக தொடங்கிய நாளிலிருந்தே தலைவரின் கொள்கைகளை பின்பற்றியும், கழகத்தின் கண்மணிகளுடன் கழக தொடக்கம் முதல் இன்று வரை உறுதியோடு பணியாற்றிக்கொண்டிருக்கும், கழகத்தின் வாழ்நாள் உறுப்பினர், ஓமன் மதிமுக இணையதள அணியின் தலைமை உறுப்பினர் ஆருயிர் சகோதரர் ஜகுபர் அலி அவர்கள் ஓமன் நாட்டின், டுக்கும் என்னும் இடத்திலே பணியாற்றிகொண்டிருக்கிறார். 

அண்ணன் ஜகுபர் அலி அவர்கள் "STRABAG"  (Construction Company) என்னும் நிறுவனத்தில் (Concrete Section Labour)  கான்கிரீட் பிரிவில் வேலை செய்து வருகிறார். அவருக்கு இந்த கான்கிரீட் நிறுவனத்தில் வேலை பார்ப்பதால் அவரது உடல் முழுக்க படர்ந்த புண் ஏற்படுகிறது. அந்த புண்ணானது கை, கால், மற்றும் உடலின் அனைத்து பாகங்களிலும் காணப்படுகிறது. இதன் புகைப்படத்தையும் இணைத்துள்ளேன். சில உடல் பாகங்களின் புகைப்படங்களை இணைக்க முடியாது. அப்படி பட்ட அனைத்து இடங்களிலும் படர்ந்து புண் காணப்படுகிறது. அந்த புண் அவருக்கு அரிப்பை ஏற்படுத்துகிறது. அதனால் அவர் அரிப்பு ஏற்படுகின்ற இடத்தில் தடவும் போது (சொறியும்போது) இரத்த கசிவு ஏற்படுகிறது. இதனை நிர்வாகம் கவனித்து வருவதால் சுற்றியிருப்பவர்களின் ஆரோக்கியத்திற்கும் நல்லதல்ல என எண்ணுகின்றனர். ஏனென்றால் இந்த புண்ணானது வெளிப்புறத்திலும் தெரிகிறது. இதை சரிபடுத்த தனது உடல் நிலையை சரி செய்வதற்காக சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, வீரமங்கலம் ஊராட்சியின், முள்ளியான் வயல் என்னும் கிராமத்திற்கு சிகிச்சைக்காக சென்று வந்துகொண்டிருந்தார். ஆனால் அவரது நோயும் தீர்ந்தபாடில்லை, வேலை செய்யும் பணத்தை கொண்டு இங்கு மருந்து வாங்க கூட இயலாத நிலைமை ஏற்படுகிறது. அவர் பணியாற்றுகின்ற நிர்வாகமும் அவரை சொந்த நாட்டிற்கு அனுப்ப திட்டம் செய்துகொண்டிருக்கிறது. 

ஓமன் நாட்டை பொறுத்தவரை இப்போதைய விதிகளின் படி, ஒருவர் வேலையை இழந்தால் மீண்டும் ஓமன் நாட்டிற்கு 2 வருடத்திற்கு நுளைய இயலாது. எனவே அண்ணன் ஜகுபர் அலி அவர்கள் வருகிற ஆகஸ்ட் மாதம் விசா காலாவதி ஆகும் போது அவர் பணி செய்யும் நிர்வாகம், அவரது விசாவை புதுப்பிக்காது. அந்த நிலையில் அவர் கட்டாயமாக இந்தியா அனுப்பபடுவார். ஒருவேளை விசா கால அவதி முடிவதற்கு முன்பாகவும் தாயகம் அனுப்பபடுவார். 

அவர் தாயகம் சென்றால் அவரது உடலின் வெளிபாகங்களில் தெரியும் புண்களால், அவர் சிறு வேலை கூட செய்ய முடியாத சூழ்நிலை, அவரின் மருத்துவ செலவிற்காக செலவிட்ட ஏகப்பட்ட கடன் தொல்லைகள், குடும்ப செலவு என அனைத்திற்கும் மத்தியில் தனியாக ஓமனில் போராடிக்கொண்டிருக்கிறார். 

அண்ணன் ஜகுபர் அலி அவர்களுக்கு சொந்த கிராமத்திலும் அவருக்கு உதவி செய்ய ஆளில்லை என தெரிவித்தார். ஏனென்றால் அவரது குடும்பங்களும் அன்றாடம் வேலை செய்து குடும்பம் நடத்த சூழ்நிலையில் இருக்கிறார்கள். அண்ண ஜகுபர் அலி அவர்களுக்கு மனைவியும், 2 பெண் குழந்தைகளும் இருக்கின்றனர். இளைய குழந்தை 4.1/2 வயது. மூத்த பிள்ளை 10 வயதானவள் பள்ளிக்கு செல்கிறாள். படிப்பில் கெட்டிகாரி. மூத்தப் பெண்பிள்ளையின் பெயர் தலால் ஆஸ்மின். இந்த பெயர் வைத்ததற்கு காரணம் தலைவர் வைகோ அவர்களின் மீதான் பற்றும் நம்பிக்கையும்தான். 

தலால் ஆஸ்மின் என்பது குவைத் நாட்டை சார்ந்த அரபு குடும்பத்தை சார்ந்த ஒரு பணக்கார வீட்டு பெண். அந்த வீட்டிற்கு நமது ஆந்திராவை சார்ந்த காதர் பாட்சா என்னும் இளைஞர் ஓட்டுனர் வேலைக்காக சென்றார். அப்போது அவர்கள் இருவரும் காதல் வயப்பட்டு அந்த குவைத் பெண் கர்ப்பமானார். இந்நிலையில்தான் அந்த குவைத் நாட்டுப்பெண் அங்கு பணி செய்யும் இந்திய இந்திய பெண்ணின் கடவுசீட்டை பயன்படுத்தி(இரு பெண்ணின் தோற்றம் ஏறக்குறைய ஒரே மாதிரி இருந்ததால்), காதர் பாட்சாவுடன் இந்தியாவிற்குள் நுளைந்தார். ஆந்திரா செல்ல சென்னை விமான நிலையத்தில் வந்தடைந்தார்கள். அப்போது அவர்கள் கடவு சீட்டை சோதனையிட்டு போலீசார் குவைத் நாட்டு பெண் தலால் ஆஸ்மினை கைது செய்தனர். 

அப்போது தலைவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். அப்போது குவைத் நாட்டினர் அந்த பெண்னை திரும்ப குவைத்திற்கே அழைத்து செல்ல இந்திய அரசிடம் பேசினர். ஆனால் தலால் ஆஸ்மின் குவைத் போக மறுத்து தனது கணவர் காதர் பாட்சாவுடனே வாழ விரும்பினார். அந்த பெண்னை குவைத்திற்கு அழைத்து சென்றால் அந்த நாட்டு சட்டத்தின் படி தலால் ஆஸ்மினை கல்லால் அடித்தே கொலை செய்வார்கள். இந்த நிலையில் தான் பாராளுமன்றத்திலே இந்த தலால் ஆஸ்மின் விவகாரத்திலே, தலைவர் வைகோ அவர்கள் உணர்ச்சிகரமான வாதங்களை எடுத்து வைத்தார். அப்போது பெருமதிப்பிற்குரிய வாஜ்பாய் அவர்கள் தான் பிரதமர். குவைத் பெண்ணின் வயிற்றில் வளர்வது ஒரு இந்திய நாட்டின் குழந்தை, அது இந்தியனாக பிறக்கும். எனவே அந்த பெண் தலால் ஆஸ்மினை இந்திய திருநாட்டில் குடும்பம் நடத்த அனுமதிக்க வேண்டும் என வாதிட்டார். அப்படிபட்ட மனிதநேயமிக்க தலைவரின் வாதத்தினால்தான், தலைவரின் மேல் மட்டற்ற அன்பை கொண்டிருந்த அண்ணன் ஜகுபர் அலி, அந்த குவைத் பெண்ணின் பெயரை தனக்கு பிறந்த முதல் குழந்தைக்கு தலால் ஆஸ்மின் என பெயரை சூட்டினார். அந்த பெண் தலால் ஆஸ்மின் இப்போது ஆந்திராவில் வசித்துக்கொண்டிருக்கிறார்.

மதிமுக தொடங்கிய நாளிலிருந்தே தலைவரின் மீதும், கழகத்தின் மீதும் மிகுந்த மரியாதையை வைத்திருந்தார். சென்னையில் தேனீர் கடையில் வேலை பார்க்கும்போது, தலைவரின் நடைபயணம், தலைவரின் பொதுக்கூட்டங்கள் என அனைத்திலும் பங்கு பெற்றவர். பத்து வருடத்திற்கும் மேலாக சென்னையில் கழகத்திற்காக பணியாற்றியவர், இப்போதும் தலைவரின் சிந்தனைகளை தாங்கியே காலத்தை கடத்துகிறார். இப்படிபட்ட அண்ணனுக்கு இப்படிபட்ட கழகத்தின் கண்மணிக்கு இப்போது சோதனையான காலமாக அமைந்திருக்கிறது. 

மேலே கூறியபடி அண்ணன் தாயகம் சென்றால் குடும்ப சூழலில் வேலை செய்ய முடியாமலும், குடிம்பத்தை காப்பாற்ற முடியாமலும், குழந்தைகளின் எதிர்காலத்தை தீர்மானிக்க முடியாமலும் திணறிக்கொண்டிருக்கிறார். நான் பேசியபோது அவருக்கு தானி (ஆட்டோ ரிக்க்ஷா) ஓட்ட தெரியும் என்று கூறினார். அவரது உடல் நலம் சார்ந்த பிரச்சினைகளால் வெளியில் வேலை செய்ய முடியாததால், தாயகம் திரும்பியதும், அவர் குடும்பம் தழைக்க, அவர் சேமிக்கும் பணத்தையும், மதிமுக இணைய நண்பர்கள் எதாவது உதவி செய்தால் அவர் ஒரு தானி (ஆட்டோ) வாங்கி, கழகத்தின் கண்மணிகளின் கருணையால் தனது குடும்பத்தை செழுமைப்படுத்துவார். 

எனவே கழகத்தின் கண்மணிகளே, மதிமுக இணையதள நண்பர்களே! அண்ணன் ஜகுபர் அலி வாழ்வில் ஒளியேற்ற, தங்களால் இயன்ற உதவியை செய்தால் ஒரு குடும்பத்தை தழைக்க செய்த மகிழ்ச்சியும், மன நிறைவும் நம் அனைவருக்கும் இருக்கும். அண்ணன் ஜகுபர் அலியும் தொடர்ந்து கழகத்திற்காக பணியாற்ற அவருக்கும் நாம் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்ததாக இருக்கும். தங்களால் முடிந்த ₹100, ₹200, ₹500, ₹1000 ரூபாயோ, எவ்வளவாக இருந்தாலும் தங்களால் ஆனதை கொடையளிக்குமாறு ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் மதிமுக இணையதள அணி நண்பர்களான உங்கள் அனைவரையும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன். மேலும் இந்த பதிவை அனைத்து நாடுகளில் வாழும் மதிமுக இணையதள அணி நண்பர்களுக்கும் பகிருமாறு அன்போடு கேட்டுகொள்கிறேன்.

நண்பர்களே! கழகத்தினர் என்று பாராமல் இருந்தாலும் மனிதநேயத்தோடு அண்ணன் ஜகுபர் அலிக்கு உதவுமாறு அன்பாய் கேட்டுகொள்கிறேன்.

கொடையளிக்கும் வங்கி கணக்கு இதில் இணைத்துள்ளேன்.
J.JAGAR BANU, A/C NO : 872589740, AVADAYAR KOVIL-1414, INDIAN BANK, PUDUKKOTTAI DISTRICT, TAMILNAADU

இந்த வங்கி கணக்கானது அண்ணன் ஜகுபர் அலி அவர்களின் துணைவியார் பெயரில் இருக்கிறது என்பதையும் அன்போடு தெரிவித்துகொண்டு அண்ணன் ஜகுபர் அலி வாழ்வில் ஒளியேற்ற நாமும் ஒரு காரணமாயிருப்போம். 

இந்தியாவில் பணம் அனுப்ப இயலாதவர்கள் அண்ணன் ஜகுபர் அலியை தொடர்புகொள்ளலாம். என்னையும் தொடர்புகொள்ளலாம். 

ஜகுபர் அலி அலைபேசி இலக்கம்: +968-98713845

நன்றி!

மறுமலர்ச்சி மைக்கேல்
அலைபேசி இலக்கம்: +968-95484987
மதிமுக இணையதள அணி - ஓமன்

கர்நாடக அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும் வைகோ!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் 11 ஆம் தேதி வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து நான் எந்தக் கருத்தும் கூறவில்லை. இந்தத் தீர்ப்பு முன்னைய தீர்ப்பை தலைகீழாக மாற்றிப்போட்டுவிட்டதால், தீர்ப்பின் முழு விவரத்தையும் அறிந்த பின்னரே கருத்துத் தெரிவிக்க முடிவு செய்தேன். உலக செவிலியர்கள் நாளை முன்னிட்டு, செவிலியர்களுக்கு நான் வாழ்த்துத் தெரிவித்தது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது.

நீதிபதி குமாரசாமி அவர்கள் தந்த தீர்ப்பில், நீதிபதி சொத்துக் கணக்கிட்டதில் இமாலய தவறு நேர்ந்து இருக்கிறது என்பது மிகவும் அதிர்ச்சி தருகிறது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் அவர்கள் பல்வேறு வங்கிகளில் வாங்கிய கடன்களை எல்லாம் அவரது வருமானமாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும் எனக்கூறி, அந்த கூட்டுத் தொகை 24 கோடியே 14 இலட்சத்து 31 ஆயிரத்து 274 ரூபாய் என்றும், எனவே வருவாய்க்கும் சொத்துகளுக்கும் இடையிலான வேறுபாடு 2.82 கோடிதான் என்றும், இது வருவாயை விட 8.12 சதவீதம் மட்டும்தான் என்றும், 10 சதவீதம் வரை சொத்து மதிப்பு அதிகம் இருந்தாலும் வழக்கை தள்ளுபடி செய்யலாம் என்று உச்ச நீதிமன்றத்தின் ஒரு தீர்ப்பை நீதிபதி குமாரசாமி சுட்டிக்காட்டி உள்ளார்.

ஆனால் ஜெயலலிதா அவர்களின் வருமானத்தைவிட சொத்து மதிப்பு 76.75 சதவீதம் என்பதால், நீதிபதி இதுகுறித்து கணக்கிட்டது மிகப்பெரிய பிழை என்றும், தீர்ப்பின் அடிப்படையே தகர்ந்துவிட்டது என்றும், இந்தப் பிழையை நீக்கினாலே குற்றம் சாட்டப்பட்டவர்கள் உறுதியாக தண்டனைக்கு உள்ளாவார்கள் என்றும், மிகச் சிறந்த வழக்கறிஞரான பி.வி.ஆச்சார்யா ஆணித்தரமாகச் சொல்லியுள்ளார். உண்மைக்கும் நீதிபதி குமாரசாமி கூறியதற்கும் மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடு உள்ளதால், தீர்ப்பே முற்றிலும் கேள்விக்குறியாகி விட்டது.

எனவே உண்மை வெளிச்சத்துக்கு வரவும், நீதி நிலைக்கவும் கர்நாடக அரசு இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது ஒன்றுதான் சரியான நடவடிக்கையாக அமையும்.

பேரறிஞர் அண்ணா அவர்கள் தந்த ‘நீதிதேவன் மயக்கம்’ என்ற சொற்றொடரைத்தான் 11 ஆம் தேதி தீர்ப்பு நினைவூட்டுகிறது என வைகோ தனது அறிக்கையில் வெளியிட்டுள்ளார்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

Tuesday, May 12, 2015

இயற்கையோடு இளைப்பாறிய தலைவர் வைகோ !

ஆறுகள், நீர் நிலைகள், குளம், குட்டைகள், வாய்க்கால்-வரப்புகள், செடி-கொடிகள், மரங்கள் என்று மரகத கம்பளம் விரித்தாற்போல் இயற்கை வளத்திற்கு மற்ற மாவட்டங்களை ஒப்பிடுகையில் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் குறைவில்லை என்றே சொல்லலாம். தலைவர் அவர்களின் பரபரப்பான பயணத்தில் இயற்கையோடு இயைந்து இயற்கையை கொஞ்சும் தலைவரின் அழகை பார்க்க, காண கண் கோடி வேண்டும் அல்லவா! ஆம் நடந்தது. 

நாகை மாவட்டத்தில் மீத்தேன் எதிர்ப்பு பிரசார பயணத்தில் குத்தாலம் ஒன்றியம் கற்கத்தி, நச்சினார்குடி என்ற கிராமங்களுக்கு இடையில் ஆற்றின் ஓரம், பச்சை பசேல் என்ற பசுமைகளின் நடுவில் கயிற்றால் கட்டப்பட்ட மாட்டின் அருகில் மெல்ல சென்று இயற்கையோடு கொஞ்சும் தலைவரின் அழகை பாரீர். கத்திரிமூலை, பழையகூடலூர் என்ற கிராமங்களுக்கு இடையில் அமைந்துள்ள வீர சோழன் ஆற்றின் பாலத்தில் அமர்ந்து குளிர்ந்த காற்றை சுவாசிக்கும் அழகையும் பாரீர். 

ஏசி அறைக்குள் தன் வாழ்நாள் முழுவதையும் கழிக்கும் அரசியல் தலைவர்களுக்கு மத்தியில், மக்களோடு மக்களாக, இயற்கையோடு இளைப்பாறும் தலைவரை காண முடியுமா? ஆம் அவர்தான் இயற்கை வளங்களின் பாதுகாவலன் வைகோ !

(செய்தி சேகரிப்பு: ஆசைத்தம்பி முக நூலிலிருந்து)

மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்

Monday, May 11, 2015

மே - 12 : உலக செவிலியர்கள் தினம் வைகோ வாழ்த்து!

‘உற்றான் தீர்ப்பான் மருந்துழைச் செல்வான் என்று அப்பால் நால் கூற்றே மருந்து!

மருத்துவம் என்பது நோயாளி, மருத்துவர், மருந்து, அம்மருந்தை அருகிலிருந்து முறையாக வழங்கும் தாதி என்ற நான்கு கூறுகளைக் கொண்டது என்று உலகப் பொதுமறையைத் தந்த அய்யன் திருவள்ளுவர் போதிக்கின்றார்.

செவிலியர் பணி என்பது தொழில் அல்ல தொண்டு. ஊதியத்திற்கு அப்பாற்பட்டு தாய்க்கு நிகரான பரிவையும், சகிப்புத் தன்மையும் கொண்டு மனித அசிங்கங்களை கூட பொருட்படுத்தாமல் ஆற்றும் மகத்தான சேவை, இராணுவம், காவல்துறை போன்று செவிலியர்களும் சீருடைப் பணியாளர்கள் இதை நினைவு கூற வேண்டியது நமது சமூகக் கடமை.

இங்கிலாந்தின் செல்வ செழிப்பு மிக்க குடும்பத்தைச் சேர்ந்த வில்லியம் எட்வர்ட் நைட்டிங்கேல், பிரான்சிஸ் தம்பதியர் இத்தாலி நாட்டின் புளோரன்ஸ் நகரில் பணியாற்றியபோது 12.5.1820 ஆம் ஆண்டு பிறந்த பெண் குழந்தைக்கு அந்நகரின் நினைவாகவும், தங்கள் குடும்பப் பெயரான நைட்டிங்கேல்லையும் இணைத்து புளோரன்ஸ் நைட்டிங்கேல் என்று பெயர் வைத்து அழைத்தனர். இறையருளால் தனக்கு இடப்பட்ட பணியாகவே செவிலியர் சேவையை பெற்றோரின் விருப்பத்திற்கு மாறாக அப்பணியில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டு நவீன தாதியியல் முறையை உருவாக்கி செவிலியர் பயிற்சிப் பள்ளியைத் துவக்கி உலகத்தின் ஒளிச்சுடராய் விளங்கிய புளோரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த மே 12 உலக செவிலியர் தினமாகும்.

1854 - 56 ஆம் ஆண்டுகளில் ரஷ்யப் பேரரசிற்கும், பிரான்ஸ் கூட்டணி நாடுகளுக்கும் இங்கிலாந்து ஓட்டோமான் பேரரசுக்கும் இடையே கிரிமியரில் நடைபெற்ற போரில் காயம்பட்டு குற்றுயிரும், குலை உயிருமாகப் போராடிக் கொண்டிருந்த இராணுவ வீரர்களுக்குச் சிகிச்சை அளித்த புரோரன்ஸ் நைட்டிங்கேல் தலைமையில் 38 பேர் கொண்ட குழு ஒன்று கிரிமிய போர்முனைக்கு அனுப்பப்பட்டனர்.

தங்கள் நாட்டுப் படையைச் சூழ்ந்த எதிரி நாட்டுப் படைகளைத் திணற அடித்த வீரன் போரில் காயப்பட்டு ஊனமாகிப் போனபின் தன் முகத்தில் மொய்க்கும் ஈக்களைக் கூட விரட்டச் சக்தியற்றுக் கிடப்பதையும், யுத்தக் களத்தில் இரண்டு நிமிடங்களில் கூடாரத்தை அமைத்து ஒரு நிமிடத்தில் மின்னல் வேகத்தில் அதைப் பிரித்து அப்புறப்படுத்திய வீரன் இன்று ஒரு மணி நேரமாகிறது படுக்கையிலிருந்து எழுந்து உட்காருவதற்கு. இவற்றைக் கண்ணுற்ற நைட்டிங்கேல் இடைவிடாது இரவு பகல் பாராமல் அவர்களுக்குச் சிகிச்சை அளித்து ஆறுதல் மொழி பேசி தேற்றி வந்தார். இரவு நேரங்களில் வலி தாங்க முடியாமல் துடித்துக் கொண்டிருந்தவர்களைக் கையில் இராந்தல் விளக்கை எடுத்துக் கொண்டு சுகம் விசாரித்து அவர்களின் வலிக்கு நிவாரணம் வழங்கி அவர்களைப் பற்றிய தகவல்களைத் திரட்டி அவர்தம் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்து அவர்களின் மனச் சுமையைப் போக்கி இராணுவ வீரர்களை விரைந்து குணப்படுத்தினார். இதனைக் கண்ட இராணுவ வீரர்கள் தங்களைக் காக்க விண்ணுலகிலிருந்து தேவதையொன்று மண்ணுலகிற்கு கையில் இராந்தல் விளக்குடன் வந்துள்ளது என்று புகழ்ந்து பாராட்டினார்கள். ‘விளக்கேந்திய பெருமாட்டி’ (Lady with the lamp) என்று வர்ணித்தனர். போருக்குப் பின் நாடு திரும்பிய புளோரன்ஸ் நைட்டிங்கேல் விக்கோரியா மகாராணிக்கு அடுத்தபடியாக அறியப்பட்டவராக பி.பி.சி. அறிவித்தது.

புளோரன்ஸ் நைட்டிங்கேலின் யுத்த காலப் பணிகளைப் பாராட்டி 1856 ஜனவரியில் விக்டோரியா மகாராணி தன் கைப்பட கடிதம் எழுதிப் பாராட்டினார். அதில், “அன்புள்ள நைட்டிங்கேல், நாட்டின் நலன் கருதி மிகப் பயங்கரமான இந்தப் போரில் உயிரைத் துச்சமென மதித்துப் போரிட்ட எனது சாம்ராஜ்யத்தின் போர் வீரர்களுக்குச் சமமாகவே நீங்கள் செய்த சேவையையும் காட்டிய கருணையையும் மனமாற மதிக்கிறேன். மெச்சத் தகுந்ததும் அருள் நிறைந்ததுமான உங்கள் சேவையைப் பாராட்டுமுகத்தான் இத்துடன் நான் அனுப்பியிருக்கும் அரசு முத்திரை பதித்த தங்கப் பதக்கத்தை உங்களுடைய அரசியாரின் பரிசாக ஏற்றுக் கொள்ள வேண்டுகிறேன்,” என்று புகழ்ந்து எழுதியுள்ளார். அதைத் தொடர்ந்து 1883+ஆம் ஆண்டு புளோரன்ஸ் நைட்டிங்கேலின் பணியைப் பாராட்டி செஞ்சிலுவைச் சங்க விருதும், 1907-ஆம் ஆண்டு புளோரன்சின் 84-ஆவது பிறந்ததினப் பரிசாக பிரித்தானிய மன்னர் ஏழாம் எட்வர்ட்டின் ‘ஆர்டர் ஆஃப் மெரிட்’ என்னும் உயரிய விருதைப் பெற்ற முதல் பெண்மணியாகக் கௌரவிக்கப்பட்டார்.

போரில் காயம்பட்டு சாவின் விளிம்பில் இருந்து பலரைக் காப்பாற்றிய உலகப் புகழ்பெற்ற மருத்துவத் தாயாக நோயுற்றவர்களின் கருணையே வடிவமாகத் திகழ்ந்து சீர்கெட்ட மருத்துவத் துறையைச் செப்பனிட்ட சீர்திருத்தவாதியாகத் திகழ்ந்த நைட்டிங்கேல் தன் வாழ்நாளின் அந்திமக் காலங்களில், “இன்னும் என் வாழ்நாளில் நான் பார்க்காதது ஒன்றே ஒன்றுதான் மிகுதி. ஒரே முறையாகவும் முடிவாகவும் பார்க்கக் கூடிய அபூர்வ நண்பன் மரணம். அதை எதிர்பார்த்தே நான் காத்துக் கொண்டிருக்கிறேன்,” என்று கூறி வந்த புளோரன்ஸ் நைட்டிங்கேல் 13.08.1910-ஆம் ஆண்டு தனது 90-ஆவது வயதில் உலக வாழ்க்கையைத் துண்டித்து அமைதியான முறையில் கண்களை மூடிவிட்டார். அவரது நினைவாக அவரின் தன்னலமற்ற பணியை நினைவுகூர ஆண்டுதோறும் அவர் பிறந்த மே 12-இல் இலண்டனில் உள்ள வெஸ்ட் மினிஸ்டர் அபேயில் உள்ள மாளிகையில் விளக்கு ஒளி ஏற்றி அந்நாளில் உலகத்தின் பல நாடுகளிலிருந்து அங்கு வருகைதரும் செவிலியர்கள் ஒவ்வொருவராலும் கைமாற்றப்பட்டு மாற்றப்பட்டு அந்த மாளிகையின் உயர்ந்த பீடத்தில் வைக்கப்படும். இது ஓர் உன்னதமான உணர்வுபூர்வமான தருணமாகும். ஒரு செவிலியரிலிருந்து மற்றொருவருக்குத் தமது அறிவையும், அனுபவத்தையும், மனித நேயத்தையும் தோள் மாற்றம் செய்வதாகும்.

புளோரன்ஸ் நைட்டிங்கேல் வழியில் தொடர்ந்து தொண்டாற்றி வரும் செவிலியர்களை மாவட்டங்கள்தோறும் இனம்கண்டு நைட்டிங்கேல் விருதுகளை மே 12-இல் வழங்க வேண்டும். இதில் தேர்வு செய்யப்படுபவர்களில் சிலரை தேர்வு செய்து மாநில அளவிலும், மாநில அளவில் மெச்சத் தகுந்த பணியாற்றியவர்களை அடையாளங்கண்டு தேர்வு செய்து மத்திய அரசின் சார்பில் நாட்டின் சுதந்திரத் தினத்தன்று பாராட்டி விருதுகளை வழங்கிட வேண்டும். இதுவே நாம் வழங்கும் நன்றிக் கடனாகும்.
செவிலியர் பணி என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அவர்களின் பணிப் பாதுகாப்பை உறுதி செய்து ஊதிய உயர்வுகளை முறையாக வழங்கி அவர்களைக் கண்ணியப்படுத்திட வேண்டும்.

வஞ்சமற நஞ்சறுத்த மருத்துவிச்சிக் கூலி, மகாநோவு தனைதீர்த்த மருத்துவன் கூலி
இன்சொல்லுடன் வலி கொடாடி பேரை ஏதேது செய்வானே....


குழந்தையின் நஞ்சுக் கொடியை அறுத்த மருத்துவச்சி (தாதி) ஊதியத்தையும், தீர்க்க முடியாத நோயைக் குணப்படுத்திய மருத்துவரின் ஊதியத்தையும் இன்சொல்லுடன் மனமகிழ்ச்சியோடு கொடுக்க வேண்டும் என்பது தமிழர்களின் உலக நியதி.

உலகச் சுகாதார நில நிறுவனம் (WHO), இந்திய நர்சிங் கவுன்சில் (INC ) வழிகாட்டுதலின் அடிப்படையில் பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ உதவியாளர்களின் பணி நியமனம் செய்திட வேண்டும்.

மக்கள் தொகையின் அடிப்படையில் தமிழகத்திற்கு 50 ஆயிரம் செவிலியர் பற்றாக்குறை உள்ளது. மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஒரு நோயாளிக்கு ஒரு செவிலியர், மூன்று குழந்தை நோயாளிகளுக்கு ஒரு செவிலியர், ஐந்து நோயாளிகளுக்கு ஒரு செவிலியர், ஆரம்ப சுகாதார நிலையங்களில் குறைந்தபட்சம் ஐந்து செவிலியர் பணி நியமனம் செய்யப்பட வேண்டும். இந்த விகிதாச்சாரத்தில் தமிழகத்தில் அரசு பொது மருத்துவமனைகள் இயங்குகின்றனவா என்பது பதில் காண வேண்டிய மிகப் பெரிய கேள்விக் குறி.

சித்திரை மாதக் கோடை கத்திரி வெயிலின் தாக்கத்தால் குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இக்கால கட்டத்தில் அனைத்து அரசுப் பொது மருத்துவமனைகளிலும் தடுப்பூசி மருந்துகளும், நவீன மருத்துவக் கருவிகளும் இருப்பில் வைத்திருக்க ஆவன செய்திட வேண்டுகிறேன்.

புனிதமான செவிலியர் சேவையில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திப் பணியாற்றிக் கொண்டு வரும் செவிலியர் சகோதரிகள் அனைவருக்கும் என் நெஞ்சம் நிறைந்த மே 12 உலக செவிலியர்கள் தின நல்வாழ்த்துகளை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் உரித்தாக்குகிறேன்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

Sunday, May 10, 2015

அடுப்பங்கரையில் கூனி குறுகப் போகும் சம்பத்துக்கு கடுங்கண்டனம்!

கடந்த வாரம் வெளியான குமுதம் இதழில், மதிமுகவிற்கு துரோகம் செய்துவிட்டு சென்ற நாஞ்சில் சம்பத்,  தலைவர் வைகோவை பற்றி குமுதம் நிருபர் "வைகோவும் ஆந்திர போலீசின் துப்பாக்கி சூடு விவகாரத்தில் தமிழக அரசை குறை கூறுகிறாரே?" என்று கேட்ட கேள்விக்கு... 

சம்பத்தின் பதில்: 

மதிமுக என்கிற இயக்கம், வைகோ கண் முன்னாடியே கரைந்துகொண்டிருக்கிறது. அது பற்றி வைகோவுக்கு கவலையில்லை. கட்சி தழைக்க இல்லை, பிழைக்கவே வழியில்லாத நிலைமையில்தான் இருக்கிறது. அதுபற்றியும் அவருக்கு கவலை இல்லை. அழையா விருந்தாளியாக, டெல்லிக்கும், கொல்கத்தாவிற்கும் போய், அங்குள்ள தலைவர்களுடன் நின்று போட்டோ எடுத்து வருகிறார். தினம் தினம் ஏதாவது அறிக்கை விட்டுகொண்டே இருக்கிறார். அவர் ஒரு எமோக்ஷனல் லீடர் வேறென்ன சொல்ல...

என தனது வக்கிரத்தை வெளிப்படுத்தியுள்ளார் அதிமுகவின் நாஞ்சில் சம்பத் 

என்னருமை தோழர்களே!

கண்ணுக்கு எட்டுகின்ற தூரத்தில் மலைகளும், கடல்களும், அருவிகளும், ஆறுகளும், வயல்களும் நிறைந்த நாஞ்சில் நாடு என அன்போடு அழைக்கப்படும், என்னை பெற்றெடுத்து தாலாட்டி, சீராட்டுகின்ற எழில் கொஞ்சும் குமரி மாவட்டத்தில் பிறந்தவர்தான் எங்கள் மாவட்டத்தின் அன்பு மொழியை அடைமொழியாக வைத்திருக்கும் சம்பத். மதிமுகவின் பொதுச்செயலாளருக்கு அடுத்த வரிசையில் இரண்டாம் தலைவராக வலம் வந்தவர். தனது இலக்கிய நடை கலந்த பேச்சால், தமிழகத்தை தன் பக்கம் கட்டி போட்டவர். ஆனால் அவர் கருணாக்களுக்கு ஒப்பானவரானார். 

ஆம்... வசதியில்லாதவர்களுக்கெல்லாம் வாய்ப்பளித்து பசியாற்றும் எங்கள் மாவட்டத்தில் அனேகமாக இரக்க குணமுடையவர்களை காண முடியும். நாலு பேருக்கு நல்லதையே செய்ய விரும்புவார்கள். அப்படிபட்ட மாவட்டத்திலே பிறந்து, தன்மான தமிழர்களின் மத்தியில் நெஞ்சை நிமிர்த்து வலம் வந்திருக்கிறது ஒரு கருநாகம். 

துரோகிகள் எல்லோருமே முதல் தமைமைக்கு அடுத்து இருக்க கூடிய இரண்டாம் இடத்தில் பணியாற்றிய கரு நாகங்கள் தான். தமிழர்களின் தாயகமான தமிழீழத்தை அழிக்க பணத்திற்காகவும், பதவிகளுக்காகவும், வக்கிரங்களுக்காகவும் துரோகம் செய்தவன் கருணா அம்மன். 

தமிழீழ இறுதி போர் நடைபெற்ற காலங்களில், உலக தமிழர்களெல்லாம் இந்திய திருநாட்டை போரை நிறுத்துங்கள் என்று கூக்குரலிட்டபோது, தன் குடும்பத்திற்காகவும், பணத்திற்காகவும் இந்திய திருநாட்டை ஆண்ட அமைச்சரவையிலே இரண்டாம் நிலையில் அங்கம் வகித்த கலைஞர் கருணாநிதி என்ற கொடிய கருநாகம் அமைச்சரவையை விட்டு வெளியில் வராமல், உண்ணாவிரத மகா பொய் பித்தலாட்ட நாடகம் ஒன்றை ஒன்றரை மணி நேரம் நடத்தி முள்ளிவாய்க்காலிலே 175000 தமிழர்களை ரசாயன குண்டுகளாலும், கொலை செய்தும், தாய்மார்களை கற்பழித்தும் தமிழர்களை கொன்று திட்டமிட்ட இனப்படுகொலைக்கு காரணமாக இருந்து உலக தமிழருக்கே துரோகத்தை இழைத்தார்.

இந்த நாஞ்சில் சம்பத் இழைத்த துரோகமோ தமிழினத்தை அழிக்கும், ஸ்டெர்லை நாசகார ஆலையிலிருந்து வெளியாகும் நச்சு காற்றினால், அதன் சுற்று வட்டார பகுதி மக்கள் காச நோயாலும், புற்று நோயாலும் தினம் தோறும் அல்லல் படுவதை தடுக்க, அந்த ஆலையை மூடி தமிழகத்தை காக்க 18 வருடமாக தன்து சொந்த காசை செலவழித்து நீதிமன்றத்தில் போராடிய, இன்னும் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கின்ற தமிழின தலைவர், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களுக்கு தெரியாமல், ஸ்டெர்லைட் வழக்கை தோற்கடிக்க ஸ்டெர்லை ஆலை உரிமையாளரிடம் இருந்து பணத்திற்காக பேரம்பேசிய, பணத்தாசை பிடித்த நாஞ்சில் சம்பத், தலைவர் வைகோவின் கூடவே இருந்து குழிபறிக்க நினைத்தார். இதை கண்டு பிடித்த மாத்திரத்திலே கட்சியிலிருந்து வெளியேறி தலைவர் அவர்களை சாரைப்பாம்பு என்று ஊடகத்திலே பேட்டியளித்தார். அப்படிபட்ட சம்பத் மதிமுக விலே நெஞ்சை நிமிர்த்து வலம் வந்த காலத்தில்தான், ஜெயலலிதாவை பார்த்து அவர் ஒரு சர்வதேச விபச்சாரி என்று சொன்னார். அப்போது ஜெயலலிதாவால் ஒன்றும் செய்ய முடியவில்லை சம்பத்தை. ஏனென்றால் வைகோ அவருக்கு அரணாக இருந்தார். 

இந்நிலையில் துரோகமிழைத்து மதிமுக நமக்கில்லை என்றானவுடன், தன்னை காப்பாற்றி கொள்ள ஜெயலலிதாவின் காலடியில் விழுந்து நக்கி பிழைக்க தொடங்கினார்.

இப்போது, தமிழருக்கு துரோகம் செய்த சம்பத் தலைவர் வைகோவை பற்றியும், கழகத்தை பற்றியும் அவதூறாக பேட்டி கொடுத்துள்ளார். இதை ஓமன் மதிமுக இணையதள அணி வன்மையாக கண்டிக்கிறது. 

தலைவர் வைகோ பொடா சிறையிலே இருந்த போது கழகத்தின் கண்மணிகளுக்கு அன்புக் கட்டளையிட்டு வீதிவீதியாக பணம் வசூலித்து இடித்து தரைமட்டமாக்கப்பட்ட தன் வீட்டிற்கு பதிலாக புதிய வீட்டை கட்டி கொடுக்க கோடியை கொடுத்தோமே! வீடு கட்டிபோக மீதமிருந்த பணத்தையும் பெருந்தன்மையோடு தங்கள் செலவிற்காக கொடுத்தோமே! அந்த வீட்டில்தானே இன்றளவும் தங்கள் குடும்ப வாழ்கிறது என்பது தங்களுக்கு மறந்து போய்விட்டதா சம்பத் அவர்களே! 

நிறை குடம் கூத்தாடாது என்பது போல தலைவர் அமைதியாக இருக்கிறார். ஆனால் குறை குடம் கூத்தாடும் என்பதை நீங்கள் நிரூபித்துக்கொண்டிருக்கிறீர்கள் உங்கள் துரோகத்தாலும், ஏளன பேச்சுக்களாலும். 

தலைவர் வைகோ கண் அசைத்தால் அகிலமே அதிரும்படியாக தங்கள் படைபலத்தை உபயோகிக்க மதிமுக தொண்டர்கள் தயங்கமாட்டார்கள் என தங்களுக்கு சொல்லிதர வேண்டியதில்லை. எனவே மறுமடியும் இதுபோன்ற வசைபாடல் வேண்டாமென எனது மாவட்டத்தின் குடிமகன் என்ற முறையில் கேட்டுகொள்கிறேன்.

மதிமுக கழக கண்மணிகள் செய்யவேண்டிய பணிகள் ஏராளம் உள்ளன... சூரியனை பார்த்து மன நலம் சரியில்லாத, தெரு நாய் குரைப்பது போலதான் உங்களது நிலைமையும். மதிமுக என்பது தமிழகத்திற்கான சூரியன். எங்களால்தான் வெளிச்சத்தை கொடுக்க முடியும் என்பதை மக்கள் உணர்ந்துள்ளார்கள். மதிமுக வளர் பிறை என்பதை நீங்கள் கண் குளிர பார்க்கத்தான் போகிறீர்கள். அப்போது அரசரவையில் இருக்க வேண்டிய நான், அண்டி ஒடுங்கி அடுப்பங்கரையிலே இருக்கிறேனே என்று எண்ணி குன்றி கூனி குறுகி போகும் காலம் வெகு தூரத்தில் இல்லை எனவும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். 

கால சக்கரம் சுழல ஆரம்பித்திருக்கிறது. எங்கள் ஆட்சி நடைபெறும், நீங்கள் துக்கி எறியப்படுவீர்கள் என எங்கள் கழக கண்மணிகள் நன்கு அறிவர். எனவே கழகத்தின் கண்மணிகளே! தேவை இல்லாதவற்றிற்காக நமது நேரத்தை விரயமாக்காமல், நமது மக்கள் பணிகள் மூலம் நாம் வீறுகொண்டெழுவோம், வெற்றிக் கொடியேற்றுவோம்.

மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்

அன்னையர் தினத்தில் தமிழீழத்து தாய்மார்களுக்கு விடிவு வருமா!

உலகம் முழுதும் அன்னையர் தினம் திறப்பாக கொண்டாடப்பட்டுவருகிறது. தன்னை பெற்ற தாய்க்கு சிறப்பு பிரார்த்தனைகளை பிள்ளைகள் ஏறெடுக்கிறார்கள். தாய் பயன்படுத்த சிறப்பு வாய்ந்த ஆடைகளை ஆச்சரியமடைய வைப்பார்கள். குடும்பத்தில் சந்தோசமாக புது வகையான இனிப்புகளை தாயார் கையினாலே செய்து, பிள்ளைகள் உண்பதை தாய் கண்டு மகிழ செய்வார்கள்.

தாயின் அன்பினாலே தாய்மடியில் பிள்ளைகள் தலைவைத்து உறங்குவதுமுண்டு. அப்படிபட்ட தாய்மார்களுக்கு தமிழீழத்திலே கொடுமைகள் நடந்தேறியுள்ளது. அதை உலக நாடுகள் கண்டுகொள்ளாமல் இன்றளவும் வேடிக்கை பார்க்கின்றன. பெற்ற பிள்ளைகளை இழந்து ஈழத்து தாய்மார்கள் வாடுகின்றனர். அனேக தாய்மார்கள் பிள்ளைகளை தேடி அலைகின்றனர். 

80 ஆயிரம் தாய்மார்கள் ஈழத்திலே விதவைகளாக வாழ்கின்றனர். அந்த தாய்மார்களுக்கு ஆறுதல் கூற ஆள் இல்லாமல் அனுதினமும் நரக வேதனைகளை அனுபவிக்கின்றனர். இவ்வளவு கொடுமைகள் தமிழீழத்திலே நடந்த பிறகும் தமிழனுக்கென்று தனி நாடு இல்லை. கடந்த 60 ஆண்டுகளாக ஈழத்திலே அடிமைகளாகவும், வெளி நாடுகளிலே அகதிகளாகவும் அன்னையர்கள் வாழ்கின்றனர். எனவே தமிழீழ நாடு அமைத்து, தமிழீழத்தின் விடியலுக்காக பிள்ளைகளை, கணவன்களை இழந்து வாடும் அன்னையர்க்கு சிறிது மகிழ்ச்சி கிடைக்க தமிழீழம் அமைப்பது ஒன்றே தீர்வு என அன்னையர் தினத்திலே சபதம் ஏற்பதோடு ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் அன்னையர் தின நல் வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறோம்.


மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்

வீடியோ முருகன் புதுமனையை வைகோ திறந்து வைத்தார்!

மறுமலர்ச்சி திமு கழகத்தின் தொண்டர் வீடியோ முருகன் புதிதாக கட்டிய வீட்டு கிரக பிரவேசத்தில் மதிமுக பொதுச்செயலாளர், மக்கள் தலைவர் வைகோ அவர்கள் கலந்துகொண்டு, புது இல்லத்தை திறந்து வைத்தார். இதில் கழகத்தினர் கலந்துகொண்டனர். 

தலைவரின் வருகைக்காக ஏராளமான கட் அவுட்டுகளும், போஸ்டர்களும், கழக கொடிகளும் ஆங்காங்கே பரவசமாக காட்சியளித்தன. புதுமனைக்கு செல்லும் நுழைவு வாயிலானது கழகத்தின் மூவர்ண கொடியை போன்று பலூன்களால் வடிவமைக்கப்பட்டிருந்தது.

மதிமுக இணையதள அணி - ஓமன்

தென்றல் நிசார் இல்ல திருமண விழா, வைகோ வாழ்த்துரை!

மறுமலர்ச்சி திமு கழகத்தின் எழும்பூர் பகுதி செயலாளர், கழகத்தின் போராட்டங்களுக்கு உயிரையும் துச்சமாக நினைத்து மக்களுக்காக போராடும் கழகத்தின் கண்மணி, ஆருயிர் அண்ணன் தென்றல் நிசார் அவர்களின் மகளின் திருமணம் தலைவர் வைகோ முன்னிலையில் இனிதே நடந்தேறியது.

தியாக தொண்டர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட மதிமுக, ஜாதி மதம்  பாராத இயக்கம் என்பதை இன்று தலைவர் அவர்கள் நிரூபித்தார். திருமணத்திற்கு பின்னர் தலைவர் வைகோ அவர்கள் துணைவியாருடன் மணமக்களுக்கு புத்தக பரிசு வழங்கி வாழ்த்தினார்கள். தொடர்ந்து வைகோ அவர்கள் வழ்த்துரை முழக்கம் அரங்கேறியது. 

இதில் மதிமுக முன்னணி நிர்வாகிகள், கழகத்தின் கண்மணிகள், மதிமுக இணையதள அணியின் நண்பர்கள், உறவினர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். 

மணமக்களுக்கு ஓமன் மதிமுக இணையதள அணி சார்பாகவும் திருமண வாழ்த்துதலை தெரிவிப்பதோடு, மணமக்கள் ஒருவரையொருவர் புரிந்து, இல்லறத்தில் நல்லறம் கண்டு, குழந்தை செல்வங்களோடு மகிழ்ச்சியோடு வாழ வாழ்த்துகிறோம்.

(படங்கள் : மதிமுக இணையதள நேரலை அம்மாபேட்டை கருணாகரன் முகநூலிலிருந்து)

மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்