Friday, May 1, 2015

தாயகத்தில் மதிமுக தொழிற்சங்க கொடியேற்றி வைகோ உரை!

உழைக்கும் மக்களின் பெருவிழாவான ‘மே தின’ விழா, மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணியின் சார்பில் இன்று 2015, மே 1 வெள்ளிக்கிழமை காலை 10.45 மணி அளவில் தலைமைக் கழகம் ‘தாயக’த்தில் கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணியின் கொடியினை ஏற்றி வைத்து மாியாதை செலுத்தினாா். பின்பு அனைவருக்கும் இனிப்பு வழங்கி சிறப்பித்தாா்.

தொடர்ந்து தாயகத்தில் நடந்த மேதின நிகழ்ச்சியில் தலைவர் வைகோ சிறப்புரையாற்றினார். உரையில் மே 6 மதிமுக வின் உதயதின விழாவிற்கு அழைப்பு விடுத்து உரை முடித்தார் தலைவர் வைகோ. இந்நிகழ்ச்சியில், கழக அவைத் தலைவரும், மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணியின் பொதுச்செயலாளருமான திருப்பூர் சு.துரைசாமி, மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணியின் தலைவர் திரு செ.முத்து, மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணியின் நிர்வாகிகள், மாநிலச் செயலாளர்கள், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டக் கவுன்சில் செயலாளர்கள், முன்னணியின் இணைப்புச் சங்க நிர்வாகிகள்,பகுதிக்கழக - வட்டக் கழகங்களின் செயலாளர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட ஏராளமான கழகத் தோழர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

மே 1 ஆம் தியதி தொழிலாளர் தினத்தையொட்டி இந்திய திருநாட்டின் அனைத்து அலுவலகங்களுக்கும், நாடாளுமன்றத்தில் தனி நபர் மசோதா மூலம் சட்டம் நிறைவேற்றி தொழிலாளர்களுக்கு விடுமுறை வாங்கி தந்தவர் நமது மறுமலர்ச்சி திமு கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் என்பது நம் கழகத்திற்கும், கழகத்தினருக்கும் பெருமையே!

மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment