Wednesday, August 26, 2015

20 தமிழர்கள் நீதி உண்ணாவிரதத்தில் உச்சநீதிமன்ற கண்காணிப்பு விசாரனை தேவை என வைகோ பேச்சு!

20 தமிழர் நீதிவேண்டி, ஆந்திர மாநில அரசையும், தமிழக அரசையும் கண்டித்து மக்கள் நலம் காக்கும் கூட்டமைப்பின் "மாபெரும் உண்ணாநிலை அறப்போர்" வள்ளுவர் கோட்டத்தில் பெருந்திரளான மக்களுடன் நடந்தது. இப்போராட்டத்தில் மதிமுக, விசிக, இடதுசாரிகள், மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் பங்கேற்றுள்ளன.

பாதிக்கப்பட்ட இருபது தமிழர் குடும்பங்கள் உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டனர்.

ஆந்திர அரசிற்கு உதவும் விதமாக தமிழக அரசு செயல்படுவது கண்டிக்கதக்கது. செம்மரக் கடத்தலில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த அப்பாவி கூலித் தமிழர்கள் 20 பேரை ஆந்திர மாநில அரசு துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்தது.

உண்ணாவிரதம் நடைபெற்றுக்கொண்டிருந்த போது பந்தலுக்குள் 20 தமிழர்களின் குடும்பம் இருக்கும் இடம் நோக்கி வந்தார் தலைவர் வைகோ. அச்சமயம் பாதிக்கப்பட்ட இருபது குடும்பத்தினா் கண்ணீருடன் கோரிக்கை மனு அளித்து தமிழின முதல்வர் வைகோவிடம் முறையிட்டார்கள். குழந்தைகள் 20 பேரின் மனைவி மக்கள் அழுது கண்ணீர் விட்டது அனைவரையும் உணர்ச்சி மிகுதியால் கவலையடைய வைத்தது. கணவன்மார்கள், தந்தைமார்கள் இல்லாமல் மனைவிகளும், குழந்தைகளும் என்ன செய்வார்கள். அரசாங்கம் ஏன் இன்னும் அவர்களுக்கு ஆதரவு கரம் நீட்டவிலை. தமிழர்களே சிந்தியுங்கள். தொடர்ந்து போராடுவோம். நிவாரணம் வாங்கி கொடுப்போம்.

தலைவர் வைகோ அவா்களின் முன்னுரையுடன் 20 தமிழர் படுகொலை தொடர்பான நீதி விசாரணை வேண்டி உண்ணாவிரத அறப்போர் துவங்கியது. பல தலைவர்கள் தொடர்ந்து ஒருவரை அடுத்து ஒருவர் உரையாற்றிக்கொண்டிருந்தனர்.

காலையில் ஜி.ராமகிருஸ்ணன், இயக்குனர் கவுதமன், புகழேந்தி தங்கராஜ் உட்பட பலர் உரையாற்றினர்.  

புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஸ்ணசாமி வருகையை தொடர்ந்து தலைவர்கள் உரையாற்றிக் கொண்டிருந்தனர்.

என்கவுண்டரே நடக்கவில்லை என அறிக்கை தயாரித்த தோழர் தியாகு அவர்கள் உண்ணாவிரத பந்தலில் விளக்கை உரை நிகழ்த்தினார். தூக்கு கயிற்றை ஒதுக்கி வைத்து விட்டு துப்பாக்கியை வைத்து கொண்டு விளையாடுகிறது போலீஸ் என கூறினார் தோழர் தியாகு.

புதிய தமிழகம் எம்.எல்.ஏ.கிருஷ்ணசாமி அவர்கள் போராட்டத்தில் உரையாற்றினார். 

மீண்டும் பேட்டி எடுக்க வந்த ஊடகத்தினரிடம் all are equal எனக் கூறி விடுதலைக்கட்சி திருமாவளவன் அவர்களை ஊடகத்திற்கு பேட்டி கொடுக்க செய்தார் தலைவர் வைகோ அவர்கள். இதுதான் கூட்டியக்கம் சார்ந்த தலைவனின் பண்பு.

கறுப்புக் கொடி காட்டிய பிரதமரே வைகோ அவர்களை சந்தித்தார். ஆனால் அனுமதி கேட்டும் தமிழக முதல்வர் பார்க்க நேரம் ஒதுக்க வில்லை என்றால் இந்த ஜனநாயகத்தை என்னவென்று சொல்வது என தமிழ் தேசிய பேரியக்க தலைவர் பெ.மணியரசன் தனது உரையின் போது கேள்வி எழுப்பினார்.

வைஷ்ணவா கல்லூரி மாணவிகள் தமிழின முதல்வர் வைகோ அவர்களை சந்தித்து உரையாடினார்கள். பின்னர் அந்த மாணவிகள் நடக்கின்ற நிகழ்வை குறிப்பெடுத்தனர்.

ஒருவரை தவறாக பேசியதற்காக நாடு கொந்தளிக்கிற அதிமுகவே! 20 தமிழர்கள் சுட்டு கொல்லப்பட்டு இருக்கிறார்களே! ஒரு கண்டன அறிக்கை உண்டா? என தமிழ்ப்புலிகள் நாகை திருவள்ளுவன் கேள்வி எழுப்பினார்.

உமர் முக்தாரில் ஓர் குழந்தை புரட்சியை கையிலெடுப்பது போல இங்கேயும் பாதிக்கப்பட்ட குடும்பத்தில் இருந்து ஒரு குழந்தை அவ்வப்போது மேடை ஏறுகிறது. ஓர் போராளி இப்படித்தான் உருவாகிறான் என இந்தியகம்யூ. வீர பாண்டியன் தனது உரையில் தெரிவித்தார்.

அன்புமணிக்கு கீழே வேலை பார்த்த அதிகாரியின் வீட்டில் இருந்து டன் கணக்கில் தங்கம் எடுக்கிறார்கள். இவர்கள் ஊழல் இல்லாத ஆட்சியை கொடுப்பார்களாம். நாங்கள் முதல்வரை நிச்சயம் அறிவிக்க வேண்டிய நேரத்தில் அறிவிப்போம் என இ.கம்யூ. முத்தரசன் சொன்னவுடன் அண்ணன் திருமா கைதட்டி வரவேற்றார்.

மாற்றி மாற்றி ஆதரவு கொடுத்து இதுவரை இளிச்சவாய்த்தனமாக இருந்தது போதும். அந்த தப்பை இனி நாங்கள் செய்ய மாட்டோம். அந்த வாய்ப்பை இனி கொடுக்க மாட்டோம் எனவும் இ.கம்யூ. செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.

மமக பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்கள் உரை நிகழ்த்தினார்.

தோழர் திருமாவளவன் அவர்கள் விளக்கவுரையாற்றும்போது அண்ணன் வைகோ தலைமைக்கு கை கொடுப்போம் என தெரிவித்தார்.

வணிகர் சங்க தலைவர் வெள்ளையன் பேசுகையில் உலக வர்த்தக ஒப்பந்தத்தை எதிர்க்கும் அணிக்கே ஆதரவு என அறிவித்தார். முன்னதாக வைகோ, ராமகிருஸ்ணன், திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்களுக்கு கதர் போர்வை அணிவித்து மாலையணிவித்து கவுரவித்தார்.

தலைவா் வைகோ அவா்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவா் தொல் திருமாவளவன் அவா்கள் பொன்னாடை அணிவித்து சிறப்பித்தார்.

தமிழின முதல்வர், மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் பேசுகையில், ஆந்திர அரசிற்கு உதவும் விதமாக தமிழக அரசு செயல்படுவது கண்டிக்கதக்கது - உச்சநீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை வேண்டும். இந்த சம்பவத்திற்கு யார் காரணம் என கண்டறிய வேண்டும் என்று கூறினார்.

பெட்ரோலை விட வேகமாக தீ பிடிப்பது ஜாதி. பாமகவின் ஒவ்வோரு அறிவிப்பும் சாதி கலவரம் தூண்டுவதாக இருக்கிறது. அதில் உள்நோக்கம் இருக்கிறது.

தன்னை தாக்க வந்தவர்களை அழையுங்கள். அவர்களிடம் பேசுவோம் என திருமா என்னிடம் கூறினார் என கூறிய வைகோ சாதீய சிந்தனையை வளர விட மாட்டோம் எனவும் திட்டவட்டமாக கூறினார்.

20பேர் கொன்றவர்களை சும்மா விட மாட்டோம். மூன்று பேர் தூக்கு தண்டனையையே காப்பாற்றினோம். நீதி கிடைக்க வேண்டும் என உரையாற்றினார் வைகோ.

உண்ணாவிரதம் நிறைவாக திரு.வெள்ளையன் அவர்கள் பழச்சாறு அளித்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.

இந்த உண்ணாவிரதத்தில் மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட்டு கட்சி தமிழ்மாநிலச் செயலாளர் ஜி.இராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜவாஹிருல்லா, பெ.மணியரசன், தியாகு, நாகை திருவள்ளுவன், இயக்குநர் கௌதமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மதிமுக மகிளிரணி துனை செயலாலர் மல்லிகா தயாளன் மற்றும் கழக மகளிர் அணியினா் உண்ணாவிரத பந்தலில் கலந்துகொண்டனர். குவைத் தோழர் செம்பை வைகோ விஜயன், சவுதி தோழர் சாஹுல் ஹமீது ஆகியோர் சென்னை தோழர்களுடன் உண்ணாவிரத பந்தலில் கலந்துகொண்டார். மேலும் கழக முன்னணி நிர்வாகிகள் மற்றும் கழக கண்மணிகள் அனைவரும், மேலும் கூட்டியக்க  நிர்வாகிகள் மற்றும் தோழர்களும் கலந்துகொண்டனர்.

மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி – ஓமன்

No comments:

Post a Comment