Monday, August 17, 2015

கூட்டணி ஆட்சி கொள்கை மாநாட்டில் மக்கள் நலன் காக்கும் கூட்டியக்கத்தின் அனைத்து தலைவர்களும் கலந்துகொண்டனர்!

கூட்டணி ஆட்சி கொள்கை மாநாடு இன்று மாலை தேனாம்பேட்டையிலே நடந்தது. அந்த அரங்கில் தலைவர்கள் திருமாவளவன், வைகோ, நல்லகண்ணு, ராமகிருஸ்ணன், தமிமு அன்சாரி மற்றும் மறுமலர்ச்சி திமுக கழகத்தின் முன்னோடிகளான மல்லை சத்யா, பாலவாக்கம் சோமு,  வேளச்சேரி மணிமாறன், ரெட்சன் அம்பிகாபதி, ஆயிரம் விளக்கு பகுதி செயலாளர் திரு.தங்கவேல் அவர்கள், அண்ணன் தென்றல் நிசார், MLF ஜார்ஜ், இணையதள அணி நண்பர்களான, ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் வழங்கிய மதிமுக இணையதள நேரலை என பட்டத்திற்கு சொந்தகாரரான அம்மாபேட்டை கருணாகரன், ஆருயிர் சகோதரன் தீபன் மற்றும் கழகத்தின் முன்னோடிகள் கலந்துகொண்டனர். 

மேலும் கம்யுனிஸ்டுகள், மனிதநேய மக்கள் கட்சியினர், விடுதலை சிறுத்தைகள் ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். 

இந்த மாநாட்டிற்கு தலைவர் வைகோ வருகை தந்தார்கள். பின்னர் இந்த பட்டிமன்ற தலைவர்களில் ஒருவரான பேராசிரியர் திரு.அப்துல் காதர் அவர்களுடன் தலைவர் வைகோ அவர்கள் பேசிக்கொண்டிருந்தார். பின்னர் மமக-வின் தமிமும் அன்சாரி அவர்களுடன் தலைவர் கலந்துரையாடினார்.

பிறந்த நாள் காணும் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் அவர்கள் வருகை புரிந்தார்கள். தலைவர் வாழ்த்து தெரிவித்தார். அனைத்து தலைவர்களும் அண்ணன் திருமாவளவனுக்கு வாழ்த்து தெரிவித்தனர். 

தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி புத்தகம் தலைவர் வைகோ கையில் கொடுக்கபட்டு பின்னர் அனைத்து தலைவர்களுக்கும் வழங்கப்பட்டது. 

நமது கழக தோழர்களின் மனதில், இன்றைக்கு தலைவர் கூட்டணி ஆட்சி புத்தகம் வைத்திருக்கிறார், நாளை கூட்டணி ஆட்சியே தலைவர் வைகோ கையில் வைத்திருப்பார் என்னும் உண்மையை பேசிக்கொண்டனர்.

பின்னர் மாநாட்டில் தலைவர் வைகோ அவர்கள் திருமாவளவனுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்தும் தெரிவித்தார்.  தொடர்ந்து மக்கள் நலன் காக்கும் கூட்டியத்தின் அனைத்து தலைவர்களும் ஒன்றோடொன்று கை கோர்த்து உயர்த்தி பிடித்து வெற்றி கூட்டணியை பறைசாற்றினர். அனைத்து தலவர்களும்  கூட்டணி ஆட்சி பற்றிய புத்தகத்தை வெளியிட்டனர். தொடர்ந்து வருகிற காலங்களை எப்படி கூட்டாக சேர்ந்து பயணிப்பது என தலைவர்கள் உரையாற்றினார்கள்.

சமயம் கிடைத்த நேரத்தில் தமிழின முதல்வர் வைகோ அவர்களிடம், மதிமுக இணையதள நேரலை, அனைவரிடத்திலும் அன்பை அருவியாக கொட்டும் அண்ணன் அம்மாபேட்டை கருணாகரன் அவர்கள், திருப்பூர் மாநாட்டில் ஈழத்தில் இனக்கொலை புகைப்பட கண்காட்சி குழுவில் தன்னை இணைத்ததற்காக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டார். இது இணையதள அணியினருக்கு ஒரு பெரிய அங்கிகாரமாகும். அப்போது கருணாகரன் அவர்களிடம் வடசென்னை செல்வா அவர்களின் உடல் நலம் குறித்து அக்கரையுடன் விசாரித்தார் நம் மனித நேயத் தலைவர் வைகோ. தொண்டர்களின் வலியையும் அறிந்த தலைவர் அல்லவா!!!

மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment