Monday, August 31, 2015

குவைத் மதிமுக வைகோ பாசறை அமைப்பாளரை போல மகனின் பொது சேவை!

மதிமுக வைகோ பாசறை குவைத்தில் இயங்கி வருகிறது. இதன் அமைபாளராக கழகத்தின் தொடக்க காலத்திலிருந்தே ஈரெழுத்தின் சொல்லுக்காக கட்டுப்பட்டு கழகத்தில் ஓயாமல் இயங்கிக்கொண்டிருக்கும் அன்பிற்குரிய அண்ணன், பின்னலூர் மணிகண்டணன் அவர்களின் மகன் பிரபா ( எ)  ம.தினகரன் அவர்கள், வடலூர் ஜேயின் மேரி மெட்ரிக்குலேசன் உயர் நிலை பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த முக்கியமான வகுப்பின் படிப்பிற்கு இடையிலும், அந்த பள்ளி மாணவர்கள், புற்றுநோய் ஒழிப்பு பிரச்சாரம் மேற்கொண்டு அதன் மூலம் நிதி வசூல் செய்தனர். 

இதில் அதிகமாக நிதி வசூலித்து முதலிடம் பிடித்தது, பின்னலூர் மணிகண்டணன் அவர்களின் மகன் பிரபா (எ)  ம.தினகரன் அவர்கள். எனவே பிரபா (எ)  ம.தினகரனை பாராட்டி பள்ளியில் பதக்கமும் சான்றிதளும் வழங்கி கவுரவித்தார்கள். சிறு வயதிலே தலைவர் வைகோ அவர்களின் பாசத்தை பெற்று, தலைவரின் செயல்களை பார்த்து வளரும் பிள்ளை அல்லவா, அதனால் சமூக சேவை என்பது தனது ரத்தத்தில் பாய்ச்சப்பட்டிருக்கிறது.

மேலும், அன்பு தம்பி பிரபா (எ)  ம.தினகரன், தான் வாங்கிய பதக்கத்தையும் சான்றிதளையும், வடலூர் அரிமா சங்கத்தின் தலைவர் ஞானசேகரன் அவர்களிடம் காண்பித்தார். அவர் பாராட்டியும், வாழ்த்தியும் ஊக்கப்படுத்தினார்.

தகப்பனாரை போலவே மகனும் சிறு வயதிலே பொது சேவையில் மிகுந்த ஈடுபாட்டோடு செயல்படுவது அனைவரையும் மெய் சிலிர்க்க வைக்கிறது. எனவே அன்பு தம்பி பிரபா ( எ)  ம.தினகரன் அவர்களுக்கு ஓமன் மதிமுக இணையதள அணியின் பாராட்டுதலை தெரிவிப்பதோடு, மேலும் பல பொது நலன்களுக்கான சேவைகளை செய்து தமிழக மக்களுக்கு பயன்படுமாறும் அன்போடு வாழ்த்துகிறோம்.

மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்

2 comments:

  1. விளையும் பயிரின் வீரியம் என்பது
    தலையைப் பார்த்தால் சரியாய்த் தெரியும்!
    இனப்பயிர் வளர்க்கும் இனமான வீரர்
    மனமெலாம் வைகோ மலர்பூத்த மணிகண்டர்
    வாசனை அவர்தம் வளர்ப்பினில் தெரிவதை
    எண்ணும் போது இதயம் பனிக்கிறது!
    இதுபோல் வளரும் எழுச்சிக் குழந்தைகள்
    மெதுவாய் வளர்ந்து மேதைகள் ஆவர்!
    பாதைகள் சமைப்பர் : பலரும் போற்றத்
    தீதுகள் அழிப்பர் : தீயென நிமிர்ந்து
    சூதுகள் சுட்டுத் தூய்மைகள் வளர்ப்பர்!
    பருவத் தேநற் பயிர்வளர்க் கின்ற
    கருவம் கொள்ளலாம் குவைத்மணி கண்டனார்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா.. உங்கள் கவிநயமிக்க வார்த்தைகள் குழந்தையை வளமாக்கட்டும்.

      Delete