Tuesday, August 25, 2015

வள்ளுவர் கோட்டம் உண்ணாவிரத மேடையை பார்வையிட்டார் வைகோ!

ஏப்ரல் 7 ஆம் தேதி, 20 தமிழர்கள் ஆந்திர மாநிலம் சேசாசலம் வனப்பகுதியில் ஆந்திர மாநில வனத்துறை சிறப்புக் காவல்படையினரால் கொடூரமாகச் சித்திரவதை செய்யப்பட்டு, சுட்டுக்கொல்லப்பட்டு, அந்தச் சடலங்களை காட்டுக்குள் கொண்டுபோய் வீசி எறிந்து குடோனில் வைக்கப்பட்டிருந்த பழைய செம்மரக் கட்டைகளை எடுத்து பக்கத்தில் போட்டுவிட்டு, தமிழர்கள் கள்ளத் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களோடு காவல்துறையினரை தாக்கியதாகவும், அந்த மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் அப்பட்டமான பொய்யான கட்டுக்கதையை ஆந்திர அரசு செய்தியாக்கியது. 

இந்த அப்பட்டமான படுகொலையை கண்டித்து பல போராட்டங்கள் நடத்திய பிறகும் நீதி கிடைக்கவில்லை. எனவே நாளை சென்னை "வள்ளுவர்கோட்டத்தில் நாளை ஆகஸ்டு 26 ல் உண்ணாவிரத அறப்போராட்டம் நடைபெறவுள்ளது.

அதற்காக அமைக்கப்பட்டுள்ள உண்ணாவிரத மேடை மற்றும் பந்தலை சற்றுமுன் தலைவா் வைகோ அவா்கள் பாா்வையிட்டு ஆலோசனை வழங்கினாா்.

பொதுமக்கள், கழக கண்மணிகள், கூட்டியக்க தோழர்கள் என அனைவரும் கலந்துகொண்டு உண்ணாவிரத அறப்போரட்டத்தை வெற்றி பெற செய்யுமாறு ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment