Saturday, August 29, 2015

ஆகஸ்டு 28ல் ஓமன் மதிமுக இணையதள அணி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் இணையதள அணி பல நாடுகளில் இயங்கி வருகின்றன. ஓமன் நாட்டில் இயங்கி கொண்டிருக்கின்ற "மதிமுக இணையதள அணி - ஓமன்" கலந்தாய்வு கூட்டமானது 28-08-2015 வெள்ளி காலை 10 மணி அளவில் நடைபெற்றது.

இந்த கலந்தாய்வு கூட்டத்தை மறுமலர்ச்சி மைக்கேல் ஒருங்கிணைத்திருந்தார். அதற்கான ஏற்பாடுகளை மஸ்கட்டில் வசிக்கும் இணையதள அணியின் நண்பர்கள் செய்திருந்தார்கள்.

இந்த கலந்தாய்வானது வருகை பதிவேட்டில் பதிவிட்டு, கையொப்பமிட்டு பின்னர் ஆரம்பமானது. இணையதள அணி உறுப்பினராக சேர நண்பர்கள் மிகுந்த ஆர்வமாக இருந்தது கழகத்திற்கு நன்மையை ஏற்ப்படுத்தும் என புத்துணர்வை தந்தது. நண்பர்கள் ஓமன் மதிமுக இணையதள அணியில் உறுப்பினர் படிவத்தை விவரங்களுடன் நிரப்பினார்கள்.

கலந்தாய்வில் கழகத்தின் முன்னேற்றத்திற்காக, குறிப்பாக தலைவர் வைகோவை அரியணையில் அமர்த்த ஓமன் மதிமுக இணையதள அணி என்ன நடவடிக்கைகளை மேற்கொள்வது பற்றியும், ஓமன் நாட்டில் வாழும் தமிழக மக்களுக்கு, ஓமன் இணையதள அணியின் மூலமாக என்ன பயன் கிடைக்க செய்யலாம் என்பது பற்றியும்  விவாதிக்கப்பட்டது.

இதில் மூன்று முக்கிய தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. அவை பின்வருமாறு,

1. வருகிற செப்டம்பர் 15 ஆம் தேதி, தமிழகத்தில் திருப்புமுனையயை ஏற்ப்படுத்த போகின்ற, திருப்பூர் பல்லடத்தில் நடைபெற இருக்கின்ற திராவிட கழக நூற்றாண்டு விழா, 107 ஆவது அண்ணா பிறந்த நாள் விழா மதிமுக மாநாட்டில், அந்த மாநாட்டு வளாகத்தில், ஓமன் மதிமுக இணையதள அணி சார்பாக பிளக்ஸ் போர்டு வைப்பது.

2. ஓமன், குவைத், ஐக்கிய அரபு நாடுகள், கத்தார் மற்றும் ஏனைய வளைகுடா நாடுகளில் வாழும் தென்மாவட்டங்களைச் சார்ந்த மக்களின் விமான பயண வசதிக்காக, மதுரை பன்னாட்டு விமான நிலையத்திற்கு, வளைகுடா நாடுகளிலிருந்தோ அல்லது வளைகுடா நாடுகளான ஓமன், குவைத், ஐக்கிய அரபு நாடுகள், கத்தார் வழியாகவோ (Via-Connecting flight) விமான சேவை தொடங்க, மத்திய அரசை (இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம்) வலியுறுத்தி தமிழகத்தின் தென் மாவட்ட மக்களிடம் கையெழுத்து வேட்டை தொடங்கி தீவிரமாக முன்னெடுப்பது.

3. மறுமலர்ச்சி திமு கழகத்தில் வாழ்நாள் உறுப்பினர் சேர்ப்பது.


இந்த கலந்தாய்வில்,

1. மறுமலர்ச்சி மைக்கேல்
2. வெங்கட் ராமன்
3. ராதாகிருஷ்ணன்
4. ராஜ குரு
5. சத்திய பிரகாஷ்
6. செந்தில் குமார்
7. நவநீத கிருஷ்ணன்
8. கோவிந்தராஜ்
9. விஸ்வநாதன்,
உள்ளிட்ட ஓமன் மதிமுக இணையதள அணி நண்பர்கள் கலந்துகொண்டனர்.

இதில் பல நண்பர்கள் மறுமலர்ச்சி திமு கழகத்தில் வாழ்நாள் உறுப்பினர்களாகவும் விண்ணபித்துள்ளனர் என்பது மகிழ்ச்சிக்குரியது.

மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன் 

No comments:

Post a Comment