Friday, August 21, 2015

நாகர்கோயிலில் கூட்டியக்க கண்டன பொதுக்கூட்டம் - மல்லை சத்யா முழக்கம்!

நேற்று (20/08/15) மாலை 6:30 மணியளவில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் அருகில், தமிழக அரசின் அராஜக போக்கை கண்டித்தும், மது விலக்கு போராட்டகாரர்கள் மீது தடியடி நடத்தும் காவல்துறையினரை கண்டித்தும், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தியும் மக்கள் நலன் காக்கும் கூட்டு இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இதில் சிறப்பு அழைபாளராக மதிமுக துணைப்பொதுசெயலாளர் மல்லை சத்யா அவர்கள் கலந்துகொண்டு அடடா தமிழா எடடா படை நீ என்று வீரமுழக்கத்தோடு தனது உரையை தொடங்கி சிறப்புரையாற்றினார். மதுவிலக்கிற்காக போராடி உயிரிழந்த சசிபெருமாள் அவர்களின் தியாகத்தால் மதுவிலக்கு போராட்டம் வீரியமடைவதயும், முழு மதுவிலக்கு கட்டாயம் தமிழகத்தில் கொண்டுவரவேண்டுமெனவும், காவல்துறையின் அராஜக போக்கை கண்டித்தும் உரை நிகழ்த்தினார். மக்கள் வெள்ளம் திரளாக காணப்பட்டது. அனைவரும் இறுதிவரை பேச்சை கேட்டனர்.

பின்னர் இந்த கண்டன பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் முருகேசன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் இசக்கிமுத்து ஆகியோர் உரையாற்றினார். 

கண்டன பொதுக்கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் பகலவன் உரை நிகழ்த்தினார். 

மனித நேய மக்கள் கட்சியின் திரு.ஒயாஸ் அவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினார்கள்.

மதிமுக கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் தில்லை செல்வம், ஆட்சிமன்ற உறுப்பினர் ஜெயராஜ், தக்கலை ஒன்றிய மதிமுக செயலாளர் JP சிங் மற்றும் பலர் உரை நிகழ்த்தினார்கள்

இந்த கண்டன பொதுக்கூட்டத்திற்கு மதிமுக ஆட்சி மன்ற குழு உறுப்பினர் அ.ஜெயராஜ் தலைமை தாங்கினார். குமரி மாவட்ட செயலாளர் தில்லை செல்வம், மாநில சட்டதுறை செயலாளர் வெற்றிவேல், நாகர்கோயில் நகர செயலாளர் ஜெரால்டு, தக்கலை ஒன்றிய செயலாளர் JP சிங், மதிமுக பொதுக்குழு உறுப்பினர் ஆனந்த ராஜன், குமரி மாவட்ட இளைஞரணி செயலாளர் பள்ளியாடி குமார், குமரி மாவட்ட மாணவரணி அமைப்பாளர் சாஜி, குருந்தன்கோடு ஒன்றிய செயலாளரும், கன்னியாகுமரி கூட்டுறவு சங்க தலைவருமான வழக்கறிஞர் சம்பத் சந்திரா, குமரி மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் சுரேஷ் குமார் மற்றும் கழக முன்னோடிகள், தொண்டர்கள், கூடியக்க நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். 

மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment