Sunday, August 23, 2015

வல்லக்கோட்டை திராவிட இயக்க கருத்துப்பட்டறை நிறைவு நாளில் வைகோ இறுதி உரை நிகழ்த்தி சான்றிதள் வழங்கினார்!

திராவிட இயக்க கருத்துப்பட்டறையானது காஞ்சிபுரம் மாவட்டம் திருபெரும்பதூர் வல்லக்கோட்டையில்  இரண்டாவது நாளான நிறைவு நாள் இன்று காலையில் தொடங்கியது. 

கருத்துப் பட்டறை நிகழ்விற்குவந்த தோழர்கள் தங்கள் விபரங்களை பதிவு செய்தார்கள். கருத்துப்பட்டறை ஆரம்பிக்கும் முன் பேச்சு பயிற்சி பட்டறையாக பொம்பூர் பாண்டியன் தோழர் பாலமுருகன் உரை நிகழ்த்தினார். தொடர்ந்து பொறியியல் கல்லூரி மாணவர் சசிகுமார் உரையாற்ற பயிற்சி பெற்றார். 

இன்று இணையதள தோழர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட தலைவர் வைகோ அவர்கள் மாநாட்டு அழைப்பு குறுஞ்செய்தி வெளியிடும் நிகழ்வை முகநூலில் பார்த்து இன்று கருத்துப் பட்டறை நிகழ்வக்கு வருகை தந்த தோழர் திருப்பூர் மாணிக்கவாசகம் வெங்கட்ராமன் அவர்களுடன் நம் இணையதள அணி சொந்தங்கள் அன்பு பரிமாறிக்கொண்டனர். 

பின்னர் இறுதி நாள் கருத்துப் பட்டறை நிகழ்வுகள் ஆரம்பமானது. மாநில மாணவரணி துணை அமைப்பாளர் திரு.மணவை தமிழ் மாணிக்கம் அவர்கள் வரவேற்றார். 

திராவிட இயக்கத்தின் கொடை என்னும் தலைப்பில் பேராசிரியர் நெடுஞ்செழியன் அவர்கள் உரையாற்றினார். பேராசிரியர் ஆற்றும் உரையை கேட்க இளைய உள்ளங்கள் ஆவலாக இருந்தனர். உரை நிகழ்த்திய பேராசிரியர் அவர்கள், அலர்ஜிக்கு முன்பெல்லாம் காணாங்கடி என்ற பெயர் இருந்து வந்தது. கையில் கட்டும் கயிறு மற்றவர் தீட்டு, நம்மை தீண்ட கூடாது என்ற மூடநம்பிக்கையில் வந்தது. சட்டையை கழற்றும் பழக்கம் பார்த்த மாத்திரத்திலேயே இவன் தீண்டத்தகாதவன் என தெரிந்து கொள்ளவே ஏற்பட்டது என பேராசிரியர் நெடுஞ்செழியன் விளக்கமளித்தார்.

அசோக மரம் கற்பின் குறியீடு. அதனால்தான் ராவணன் சீதையின் கற்புக்கு எந்தவித பங்கமும் ஏற்படாது என உலகுக்கு உணர்த்தவே அசோக வனத்தில் சிறை வைத்தான். ஆனால் ஏகபத்தினி ராமன் சீதையை தீக்குண்டத்தில் இறங்க சொன்னான். இதில் யார் யோக்யன். இதை பகுத்தறிவால் கேள்விகேட்க செய்ததுதான் திராவிட இயக்கம் என கருத்துப் பட்டறையில் பேராசிரியர் கூறினார். ஆரிய படை கடந்த நெடுஞ்செழியன் தான் பார்ப்பனீயத்தை ஒழித்து திராவிடம் வளர காரணமானவர். வைதீக முறை பூஜைகளை மாற்றி காட்டவே எல்லை தெய்வம் அய்யனார் தோன்றினார் எனவும் பேராசிரியர் நெடுஞ்செழியன் கூறினார்.

சூத்திரனாக இருந்தால் திருமணம் செய்ய தகுதி இல்லை. எனவே ஒரு மந்திரம் சொல்லி ஒன்றரை மணி நேரமே இருக்க கூடிய அந்த மந்திரத்தை சொல்லி பூநூல் போட்டு பார்ப்பனனாக மாற்றி நமக்கு திருமணம் செய்து வைத்தது ஆரியம். இதை மாற்றியது திராவிடம். தமிழ் சமூகத்தில் தாய் மாமனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவது தாய்வழி சமூகம் தமிழ் சமூகம்தான் என மெய்பிக்கவே என தெரிவித்தார். 

2ஆம் நாள் நிகழ்வுக்கு தலைவர் வருகை புரிந்தார். வரும் போதே காலதாமதமாக வந்ததிற்கு மன்னிப்பு கேட்டு கொண்டே வந்தார். வந்தவுடன் குறிப்பு புத்தகத்துடன் அமர்ந்து சக மாணவர்களோடு குறிப்பெடுத்தார் தலைவர். கருத்தரங்கில் ஓர் பார்வையாளராகவும் அமர்ந்து உரையாற்றும் பேராசிரியரிடம் விளக்கம் கேட்டார் கும் தலைவர் வைகோ.

அருமையான உரை நிகழ்த்திய பேராசிரியருக்கு தலைவர் வைகோ பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். தொடர்ந்து உரையாற்றிய தலைவர், பட்டறைகள்தான் வாட்களை தயாரிக்கும், வாட்கள்தான் கோட்டையை பாதுகாக்கும். இது திராவிடத்தை காக்கும் கருத்து பட்டறை என கூறினார் தமிழின முதல்வர் வைகோ. 

கயமை என்னும் திருக்குறள் அதிகாரத்தை பற்றி உரை நிகழ்த்தி பேசிய தலைவர் உள்ளுக்குள் கள்ளம் இருந்தால் கண் காட்டி கொடுத்து விடும். மனிதனை போலவே கயவனும் இருப்பார் என கூறினார். இப்போது இருக்கிற நம் கொள்கை விளக்க செயலாளரிடம் உண்மை ஒழுக்கம் நேர்மை தியாகம் இருக்கிறது என அண்ணன் அழகு சுந்தரம் அவர்களை பாராட்டி பேசினார் தலைவர் வைகோ. 

மாலை நேர நிகழ்வுகள் திரு.அருணகிரி அவர்கள் நடத்தும் வினாடி வினா நிகழ்ச்சியுடன் ஆரம்பமானது. மதிய இடைவேளையில் கழகத்தின் தொண்டர் வீடுக்கு துக்கம் விசாரிக்க சென்றிருந்த தலைவர் கேள்வி நேரத்தின் போது வந்தார்.

தமிழ் ஈழம் ஏன் என்ற தலைப்பில் உரையாற்றினார் மதிமுக கொள்கை விளக்க செயலாளர், தியாக வேங்கை பொடா அழகு சுந்தரம் அவர்கள்.

பின்னர் மதிமுக இணையதள தோழர்கள் சார்பாக ஒரு லட்சம் மாநாட்டு குறுஞ்செய்தி அனுப்பும் நிகழ்வை தலைவர் வைகோ அவர்கள் தொடங்கி வைத்தார். அப்போது இணையதள நண்பர்கள் தலைவர் வைகோவுடன் இருந்தனர். 

தொடர்ந்து தலைவர் வைகோ அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப் பட்டது. தலைவர் அவர்கள் பாலவாக்கம் சோமு அவர்களுக்கும் முக்கிய பங்காற்றியவர்களுக்கும் நினைவு பரிசை வழங்கினார். 

பின்னர் கடைசி நாளான கருத்துப் பட்டறையில் தலைவர் வைகோ நிறைவுரை நிகழ்த்தினார்கள்.

அப்போது பேசிய தலைவர் நாம் சேர்த்து வைத்திருக்கும் நம்பகத்தன்மை மட்டுமே நமது அரண் என பேசினார். 39 MLA வைத்திருந்த மூப்பனாரும் 29 MLA வைத்திருக்கும் விஜயகாந்த்ம் ஆட்சியில் அமர்ந்திட முடிந்ததா? என வைகோ

எனது ஒவ்வொரு தொண்டனும் ஒரு கோடிக்கு சமம். என் தொண்டனை ஒரு போதும் தலை குனிய விடமாட்டேன். தண்ணீரையாவது இனம் கண்டு பிரிக்கலாம். வைகோவை கண்டு பிடிக்க முடியாது என விளக்கமளித்தார் வைகோ.


இறுதியாக திராவிட இயக்க கருத்துப் பட்டறையில் பட்டை தீட்டப்பட்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் தலைவர் சான்றிதள் வழங்கி பராட்டினார்.

மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்











































No comments:

Post a Comment