Sunday, September 27, 2015

26-09-2015 ல் ஓமன் மதிமுக இணையதள அணி செயல்வீரர்கள் கூட்டம்!

ஓமனில் வாழுகின்ற மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தை சார்ந்த கழக தொண்டர்கள் ஒருங்கிணைப்பில் இயங்கி வருகின்ற ஓமன் இணையதள அணியின் செயல் வீரர்கள் கூட்டமானது மஸ்கட் நவீன் ஹாலில் 26-09-2015 ல் நடைபெற்றது.

இதில் ஓமன் மதிமுக இணையதள அணி உறுப்பினர்கள் ஆவலுடன் பங்கேற்றனர். மேலும் பல கழகத்திற்கு ஆதரவான நண்பர்களும் கலந்துகொண்டனர். இதில் வருகிற கழக தேர்தல், அடிப்படை கட்டமைப்பு, ஏனைய கட்சி பிரமுகர்களின் விமர்சனங்களுக்கு நேரத்தை செலவிடாமல், தலைவர் வைகோவை பற்றிய அனைத்து காரியங்களை இணையத்தின் மூலமாக மக்களுக்கு எடுத்து செல்லுதல் போன்றன விவாதிக்கப்பட்டன.

இந்த நிகழ்விற்கு, மறுமலர்ச்சி மைக்கேல் தலைமை வகித்தார், நவநீத கிருஸ்ணன் முன்னிலை வகித்தார். சத்திய பிரகாஷ், விஸ்வநாதன் உட்பட நண்பர்கள் ஒருங்கிணைத்திருந்தனர்.

இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு,

தீர்மானம் - 1:-

நடந்து முடிந்த செப்டம்பர் 15 அண்ணாவின் 107 ஆவது பிறந்த நாள் விழா, திராவிட இயக்க நூற்றாண்டு விழா மாநாட்டை சிறந்த உள் அலங்காரத்துடன் பிரமாண்டமாக அமைத்த திருப்பூர் மாவட்ட மதிமுக செயலாளர் ஆர்.டி.மாரியப்பன் அவர்களுக்கும், மாவட்ட கழக அனைத்து அமைப்பினருக்கும் நன்றி கலந்த பாராட்டுக்கள். மானாட்டு சிறப்பு பேருரை நிகழ்த்திய ஈழத்தமிழர்களுக்கு நாடு கிடைக்க இடைவிடாது முயன்றுகொண்டிருக்கும் மலேசிய நாட்டின் பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி அவர்களுக்கும் நன்றி. அனைத்து காரியங்களையும் கண்காணித்து, எங்கள் அனைவரையும் வழி நடத்துவதற்காக, தமிழின முதல்வர் நம் கழக பொதுச்செயலாளர் தலைவர் வைகோ அவர்களுக்கும் நன்றி.

தீர்மானம் - 2:-

2015 ஆகஸ்டு மாதம் 28 ஆம் தேதி நடந்த ஓமன் மதிமுக இணையதள அணியின் செயல் வீரர்கள் கூட்ட தீர்மானத்தின் படி, மதுரை பன்னாட்டு விமான நிலையத்திற்கு வளைகுடா நாடுகளில் இருந்து விமான சேவை தொடங்குதல் தொடர்பான விண்ணப்பத்திற்கு ஒமனில் வாழும் தமிழர்களிடத்தில் கையெழுத்து வேட்டை செப்டம்பர் 25 ஆம் தேதி நடந்த தமிழர் சங்கமம் மஸ்கட் ஈத் பெரு நாள் விழாவிலிருந்து தொடங்கப்பட்டது. இதற்கு ஆதரவளித்த தமிழ் அமைப்புகளுக்கும், திறம்பட செயலாற்றிய கழக கண்மணிகளுக்கும் நன்றி தெரிவிப்பதோடு தொடர்ந்து, பல பகுதிகளாக பிரிக்கப்பட்டும், அந்தந்த பகுதிகளில் வாழும் தமிழர்களிடத்தில் கையெழுத்து வாங்கவும் தீர்மானிக்கப்பட்டு செயல்படுத்தபடும்.

தீர்மானம் - 3:-

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக தொண்டர்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஊடகம் தொடங்க பொதுச்செயலாளர் வைகோ அவர்களிடத்தில் இந்த செயல் வீரகள் கூட்டத்தின் வாயிலாக அனுமதி கோருகிறோம். இந்த ஊடகம் கழகத்தினரால் ஆரம்பிக்கப்பட்டு, கழக தொலைக்காட்சியாக இல்லாமல் நடு நிலையாக செயல்படும் விதமாக, இருட்டடிக்கப்படும் கழக செய்திகளை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும்படியாக இருக்கும் படி உருவாக்க திட்டமிடப்படும். இதற்கு இணையதள அணி நண்பர்களின் உதவியையும், கழகத்தின் அனைத்து அமைப்பின் தொண்டர்களையும், நிர்வாகிகளையும் தலைவர் அனுமதித்தால் நாடுவதெனவும் முடிவு செய்யப்பட்டது.

தீர்மானம் - 4:-

கழக கட்டமைப்பை, கழக தேர்தலுக்கு முன்பாகவே ஆராய்ந்து, பூத் வாரியாக சிறு அமைப்புகளையும் உருவாக்கி அனைத்து அமைப்புகளுக்கும் எந்த வித வெற்றிடமுமில்லாமல், சிறிய பதவிகளையாவது நியமனம் செய்து அமைப்புகளை உருவாக்கவும், கழகத்திற்கு வலு சேர்க்க, கல்லூரியில் பயிலும் பெரும்பாலான இளைஞர்களை உறுப்பினர்களாக சேர்க்க, மறுமலர்ச்சி மாணவர் மன்றம், மதிமுக மாணவரணி போன்ற அமைப்புகளுக்கு ஓமன் மதிமுக இணையதள அணி வேண்டுகோள் விடுப்பதோடு,  தலைமை கழகமும் இதை வலியுறுத்தி வலுசேர்க்குமாறு ஓமன் மதிமுக இணையதள அணி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறது.

ஓமன் மதிமுக இணையதள அணி, செயல்வீரர்கள் கூட்டத்தில்,

1. மறுமலர்ச்சி மைக்கேல்
2. சத்திய பிரகாஷ்
3. நவநீத கிருஷ்ணன்
4. கோவிந்தராஜ்
5. விஸ்வநாதன்
6. செந்தில் குமார்
7. சுலைமான் மாஹீன்
8. ராஜேஷ்
9. கண்ணன்
10.ஜெயசேகர்
11. தேசபந்து தாஸ்

உள்ளிட்ட ஓமன் மதிமுக இணையதள அணி உறுபினர்கள், ஆதரவாளர்களென பல  நண்பர்கள் கலந்துகொண்டனர்.

மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்

1 comment:

  1. ''ஓமன் மதிமுக இணையதள '' அணியின் சார்பாக நடந்த இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்த இளம் வேங்கைகள் அனைவருக்கும் நன்றி ''...!!!

    ReplyDelete