Wednesday, September 16, 2015

மதிமுக மாநாடு வெற்றி பெற்றது! அரண்டது அதிமுகவும் திமுகவும்!

நேற்று நடந்த மதிமுகவின் 107 ஆவது அண்ணா பிறந்த நாள் விழா, திராவிட இயக்க நூற்றாண்டு விழா மாநாடு வெற்றியடைந்தது. லட்சகணக்கான மக்கள் பெருவெள்ளத்தால் மூழ்கியிருந்தது பந்தல் சிவாவின் மாநாட்டு அரங்கம். தியாவிட இயக்க கண்காட்சி இடம்பெற்றிருந்தது. இலங்கையில் நடந்த இனப்படுகொலை சார்ந்த புகைப்பட கண்காட்சியும் நடைபெற்றது. புகைப்படங்களை பார்த்த தாய்மார்கள் பெரியவர்கள் கண்ணீர் வடிக்கும் நிலையில் இருந்தார்கள்.

இந்த தமிழீழ இனப்படுகொலை கண்காட்சியில் தமிழீழத்திற்கு ஒரே தீர்வு பொது வாக்கெடுப்பு என்பதை வலியுறுத்தும் வகையில், மாதிரி பொதுவாக்கெடுப்பு நடந்தது. இதில் மாநாட்டில் கலந்துகொண்ட ஓரளவு அனைத்து மக்களும் வாக்களித்தனர். புகைப்பட கண்காட்சி பந்தல் எப்போதுமே மக்கள் வெள்ளத்தால் நிறைந்ததாகவே காணப்பட்டது.

பொதுவாக்கெடுப்பிற்கென தனியாக வாக்குசீட்டுகள் அச்சிடப்பட்டு வெற்றிகரமாக நடத்தப்பட்டிருந்தது. இதை மதிமுக இணையதள அணியினர் சிறப்பாகவே செய்து காட்டியிருந்தனர்.

தலைவர் வைகோ பேசும்போது தமிழீழ மக்களின் அவல நிலை பற்றி பேசியதால் மலேசிய பினாங்கு மாநில துணை முதல்வர் ராமசாமியை 5 ஆண்டுகள் இந்தியாவில் அனுமதிக்கவில்லை. அவருக்கு விசா வழங்க அனுமதிக்கவில்லை. அதற்கு காரணம் முன்னாள் முதல்வர் கருணாநிதி தான் என வைகோ தெரிவித்தார்.

மாநாட்டிற்கு வந்த அனைத்து மக்களும் தலைவர் வைகோவை அரியணையில் ஏற்றவேண்டும் என்ற சபதம் எடுத்தவாறே மாநாட்டு வளாகத்தை விட்டு வெளியேறினர். ஒவ்வொருவரின் நெஞ்சிலும் தலைவர் வைகோ அவர்கள் பசுமரத்தாணி போல பதிந்துவிட்டார். 

வருகிற காலம் வைகோவின் காலமாக இருக்க வேண்டும். அதற்காக இப்போதே உழைக்க வேண்டும். மாநாட்டு பந்தல் பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. அனைத்து வசதிகளுடன் இருந்தது. மக்கள் வெள்ளம் தமிழீழத்திற்கு ஆதரவாக இருந்தது பேராசிரியர் ராமசாமி மற்றும் தலைவர் வைகோ அவர்கள் பேசும்ப்போது வெளிபட்டது மக்களின் கை ஓசையால்.

அனைத்து வாகனங்களும் திட்டமிட்டபடி வரிசையாக வாகனம் நிறுத்துமிடத்தில் முழு வருகை பதிவேற்றத்துடன் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. மக்கள் வெள்ளத்தால் மாநாடு வெற்றி பெற்றிருந்தது. இதை கண்டு அதிமுகவும் திமுகவும் அரண்டு போயிருக்கிறது. 

வேகமாக உழைபோம். திட்டமிட்டு செயல்படுத்துவோம். அரியணையை தலைவருக்கு பரிசளிப்போம்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment