Saturday, September 19, 2015

உயர்நிலை கூட்டம், தொண்டர்கள் குவிந்தனர்! பத்திரிகையாளர் சந்திப்பு!

மதிமுக உயர் நிலை குழு கூட்டமானது இன்று மாலை 3 மணி அளவில் தாயகத்தில் நடந்தது. தங்க தலைவனை தங்கள் இதய சிம்மாசனத்தில் வைத்து தாங்க தன்னலமற்ற தொண்டர்கள் தயார் நிலையிலிருந்தனர்.

சோரம் போகும் தொண்டர்கள் அல்ல, வீரம் பேசும் தலைவனின் மனத்தில் ஆரமாய் விழும் உன்னத தொண்டர்கள் என நிரூபிக்க திரண்டனர் தொண்டர்கள். விழுந்து மறையும் பனித்துளி அல்ல, எழுந்து பறக்கும் பீனிக்ஸ் பறவை என தொண்டர்கள் திரண்டனர். 

தலைவர் வரும்போது தொண்டர்கள் "புரட்சித்தான் வைகோ, வைகோதான் புரட்சி" என உரிமைக்குரல் எழுப்பினர்.

உயர்நிலைக் குழு உறுப்பினர்கள் தாயகத்தில் வந்திருந்தனர். விழுப்புரம் மாவட்ட செயலாளர் அண்ணன் ஏ.கே.மணி அவர்களை கட்டி பிடித்து தலைவர் கண்கள் பனித்தன

பினாங்கு துணை முதல்வர் திரு.ராமசாமி அவர்கள் தாயகம் வருகை புரிந்தார். அப்போது நிர்வாகிகளுட பேசிக்கொண்டிருந்த ராமசாமி, அதிமுகவும் திமுகவிலிருந்து போனதுதானே, அங்கிருந்து ஆட்களை இழுக்க வேண்டியதுதானே என வேடிக்கையாக தெரிவித்தார். 

பினாங்கு துணை முதல்வர் திரு.ராமசாமி அவர்களுடன் இணையதளத் தோழர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். 

உயர்நிலை குழு கூட்டம் மற்றும் பத்திரிகையாளர்களை சந்தித்த வைகோ, தோழர்கள் யாரும் கழக நிர்வாகிகளை பற்றிய எந்த சந்தேகங்களையும் வதந்திகளையும் பரப்பாதீர்கள். கழக வளர்ச்சிக்கு நாம் உதவ வேண்டுமே தவிர நிர்வாகிகளுக்கு சங்கடத்தை உண்டு பண்ணக் கூடாது.

உயர்நிலைக் கூட்டத்திலும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திலும் எடுத்த முடிவுகளைத்தான் மாநாட்டில் பேசினேன் என கூறினார். மாவட்ட செயலாளர் கூட்டத்தில் யாரையும் பேச மறுக்கவில்லை. நான் ஒருபோதும் திமுக வுடன் கூட்டு என கூறவில்லை. அதிமுக வுடன் கூட்டு வேண்டும் என வலியுறுத்தியவர்கள் எல்ஜி கண்ணப்பன் திருநாவுக்கரசு போன்றோர். 1460 பொதுக்குழு உறுப்பினர்களில் 1380 உறுப்பினர்கள் எங்களுடனே இருந்தனர் எல்ஜி பிரிந்த போது.
பலமாக இருக்கும் திமுக எங்களை ஏன் இழுக்க வேண்டும். எல்ஜி மூலம் கட்சியை உடைக்க முயற்சித்தது திமுக எனவும் தெரிவித்தார்.

எனக்கு கொள்கையில் தலைமை பண்பு இருக்கிறது. அதுதான் மதிமுக வின் வலிமை. வைகோ இல்லாமல் கூட்டணி இல்லை என்பதில் வாஜ்பாய் உறுதியாய் இருந்தார். எனக்காக இந்த கூட்டணியை விட்டு போகாதீர்கள் என்றார் வாஜ்பாய். 

கட்சிக்கு ஆபத்து என்றால் தொண்டர்கள் வருவார்கள். அப்படித்தான் இன்றும் வந்தார்கள். ஆனால் அவர்கள் பட்டம் பதவி கேட்டு வரமாட்டார்கள். அவர்கள்தான் இந்த கட்சியை காப்பாற்றுவார்கள். 

9 ஆண்டுகளுக்கு பிறகு போனில் கல்யாணத்திற்கு முதலில் அழைத்தவர் கருணாநிதி அவர்கள்தான். திருப்பூர் மதிமுக தொழிற்சங்க கட்டடத்தை அதிகாரத்தை பயன்படுத்தி மோசடி செய்து கைப்பற்றியது திமுக. இப்பவே இந்த வேலை செய்கிறார்களே, இவர்களுடன் கூட்டு வைத்து வெற்றி பெற்றால் வெற்றி பெற்றவர்களையும் இழுக்க முயற்சிக்கும் திமுக.

மதிமுக மாவட்ட செயலாளர்களிடம் ஒன்றரை மாதத்திற்கு முன்பே ஸ்டாலின் பேசி வந்தார்.கூட்டணி இல்லை என்றால் பிரிக்க திட்டமிட்டார் ஸ்டாலின். ஈழத்தமிழர் பிரச்னைக்கு முக்கிய காரணம் மத்திய அரசு. ஆயுதம் கொடுக்க கூடாது என்பதில் திமுக தலைவர் உறுதியாக இருந்திருந்தால் முள்ளிவாய்க்கால் படுகொலையே நடந்திருக்காது. மத்திய அரசை கண்டித்து அப்போது ராமதாஸ் ஒரு அளிக்கை வெளியிட்டாரா, அன்புமணி மந்திரிசபை கூட்டத்தில் பேசி இருப்பாரா  எனவும் வைகோ கேள்வி எழுப்பினார். திமுக எப்படியோ அப்படித்தான் பாமக வும்.

திமுக அதிமுக செய்த தவறுகளால் ஒட்டு மொத்த திராவிட இயக்கத்தையே குறை சொல்லும் நிலைமை இன்று வந்திருக்கிறது. அதிமுக ஊழல் மயமாகி போனது. முன்பை விட இப்போது அதிமுக ஆட்சியில் ஊழல் அதிகமாகி போனது. நாங்கள் நேர்மையானவர்கள். எங்களுக்கு பயமில்லை. பணம், இலவசம் இரண்டையும் மட்டுமே நம்புகிறது திமுக,அதிமுக. 

மக்களுக்கு எங்கள் மேல் ஒரு அனுதாபம் வந்து இருக்கிறது. சகாயம் அவர்களை பாராட்டினார். சரியான விசாரணை வேண்டும் .டி.எஸ்.பி.தற்கொலையில் எனவும் கூறினார். 

இந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில், புதிய மகளிரணி செயலாளர், மதுரை, சேலம், விழுப்புரம், காஞ்சி மாவட்டத்திற்கு புதிய செயலாளர்களையும் அறிவித்தார் தலைவர் வைகோ அவர்கள்.

இந்த நிகழ்வில் திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து மாணவர்கள் 50 பேர் கழகத்தில் இன்று இணைந்தனர்.

பின்னர் பினாங்கு துணை முதல்வர் திரு.ராமசாமி அவர்கள் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடந்தது. 

அப்போது அறிமுக உரை நிகழ்த்திய வைகோ, 2003 களில் விடுதலை புலிகளுக்கு பொருளாதார பாடபயிற்சி கொடுக்க திரு ராமசாமி அவர்கள் சென்றிருக்கிறார். அவர்களுக்கு ஆலோசகராகவும் இருந்து வந்திருக்கிறார். எட்டு ஆண்டுகளாக துணை முதல்வராக இருந்து வருகிறார்கள் என தெரிவித்தார். 

பின்னர் பேசிய மலேசிய நாட்டின் பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி அவர்கள், தமிழீழத்திற்காக விடாமல் குரல் கொடுப்பவர் வைகோ அவர்கள். 2009 க்கு பிறகு 7-8 முறை ஈழத்திற்கு சென்று வந்திருக்கிறேன். 

ஐநா அறிக்கை ஒட்டு மொத்த அளவில் பார்த்தால் நல்ல அறிக்கை. ஆனால் உள்நாட்டு விசாரணையை ஏற்க மாட்டோம். பன்னாட்டு விசாரணை மட்டுமே தீர்வு என ராமசாமி தெரிவித்தார். வரும் நவம்பரில் பினாங்கில் தமிழீழத்திற்கான ஒரு பட்டறை நடத்தப்படும். அதில் வைகோ கலந்து கொள்வார் எனவு ராமசாமி தெரிவித்தார். 

நிகழ்ச்சி முடிந்ததும் தலைவர் வைகோ உள்ளிட்ட அனைவரும் விடை பெற்றனர்.

மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்

No comments:

Post a Comment