2009 ஆம் ஆண்டு விடுதலை புலிகளை ஆதரித்து, தமிழீழ மக்களை கொன்றது இந்திய அரசு கூட்டு குற்றவாளி என நான் குற்றம் சாட்டுகிறேன் என்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசியதற்காக, அன்றைய கருணாநிதி அரசு விடுதலை புலிகளை ஆதரிப்பது தேசதுரோக குற்றம் என கூறி வழக்கு தொடர்ந்தது.
அந்த வழக்கு 7 ஆண்டுகளாக நிலுவையில் வைக்கப்பட்டிருந்தது. அதனால் வைகோவின் பாஸ்போர்ட்டும் முடக்கப்பட்டு ஒவ்வொரு மாதமும் புதுப்பிக்க வேண்டியிருந்தது. இதனால் வைகோ அவர்களே முன் வந்து என்னை கைது செய்யுங்கள், இல்லையேல் இதிலிருந்து விடுவியுங்கள் என்று சொன்னதற்கிணங்க, நீதிபதி அவர்கள், 15 நாட்கள் வைகோவை காவலில் வைக்கலாம் என உத்தரவிட்டு, வைகோ விரும்பினால், உடனே ஜாமீன் பெறலாம் எனவும் கூறினார். ஜாமீனை மறுத்த வைகோ சிறையிலடைக்கப்பட்டார்.
கடந்த 15 நாட்களாக வைகோ சிறையில் அடைக்கப்பட்டிருந்த வைகோ நேற்று 17-04-2017 அல்லிகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, மேலும் 10 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டதோடு, இப்போதும் ஜாமீன் பெறலாம் என நீதிபதி கேட்க, வைகோ மறுத்துவிட்டார்.
இதனால் விடுதலை புலிகளை ஆதரித்ததற்காக தொடர்ந்து தண்டனை பெற்று வருகிறார். அவருக்கு, 27.04.2017 வரை மீண்டும் சிறைக்காவல் நீட்டிக்கப்படுகிறது.
இந்நிலையில், நீதிமன்ற வளாகத்திலிருந்து, சிறை செல்லும் முன் பேட்டியளித்த வைகோ அவர்கள்,
பிரதமர் மோடி, தமிழக விவசாயிகளை சந்தித்து அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.
விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.நிவாரணத்திற்கு தமிழகத்திற்கு உரிய தொகையை வழங்க வேண்டும்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில், கர்நாடகத்திற்கு சாதகமாகவும், தமிழ்நாட்டிற்கு வஞ்சகமாகவும் செயல்படுகிறார் என நான் ஆதாரங்களுடம் குற்றம் சாட்டுகிறேன்.
மேகதாட்டுவில் அணைகட்ட வேலை ஆரம்பமாகிவிட்டது. கட்டிமுடிக்கப்பட்டால், பெருமழை பெய்தாலும் தமிழ்நாட்டு மேட்டூர் அணைக்கு சொட்டு தண்ணீர் வராது.
நதிகள் இணைப்புக்கு ஒரெ ஒரு முறைதான் விவாதம் நடந்திருக்கிறது. அதுவும் நான்தான் கொண்டு வந்தேன்.
மீத்தேனுக்கு கையெழுத்து போட்டுவிட்டு, இன்றைக்கு எதிர்க்கிறோம் என்று சொல்வது எல்லோரையும் ஏமாற்ற முடியாது. நிச்சயமாக ஹைட்ரோ ஹார்பனை வர விடமாட்டோம்.
காவல்துறை எஸ்பி பாண்டியராஜன் ஒரு சகோதரியை அடித்து காது கேட்கவில்லை. ஏன் அன்றைக்கே அவரி சஸ்பன்ட் செய்யவில்லை?
விவசாயிகள் நலனை காக்கவும், நிலத்தடி நீரை காக்கவும், தமிழகம் எங்கும் சீமைகருவேலம் மரங்களை அழித்து வருகிறார்கள்.
கழக கண்மணிகளுக்கு நான் கடிதம் எழுதி தமிழகத்தின் நலனை எப்படி பாதுகாக்கவேண்டும் என்றும் அனுப்பியிருக்கிறேன்.
25 ஆம் தேதி போராட்டத்திற்கு ஆதரவுமில்லை, எதிர்ப்புமில்லை என கூறி செய்தியாளர்கள் சந்திப்பை நிறவு செய்துவிட்டு சிறை சென்றார்.
வைகோ வருவதையறிந்த மதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் என ஆயிரக்கணக்கானோர் அல்லிகுளம் நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்தது குறிப்பிடத்தக்கது.
வைகோ வருவதையறிந்த மதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் என ஆயிரக்கணக்கானோர் அல்லிகுளம் நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment