2009 ல் குற்றம் சாட்டுகிறேன் என்ற நூல் வெளியீட்டு விழாவில் விடுதலைபுலிகளுக்கு ஆதரவாக பேசியதற்கு அன்றைக்கு முதலமைச்சராக இருந்த கருணாநிதி ஆட்சி காலத்தில், சம்பவம் நடந்த 6 மாதம் கழித்து வழக்கு தொடர்தார்.
அந்த வழக்கு இன்று 03-04-2017 விசாரணைக்கு வந்த போது தனது கடவு சீட்டை முடக்கி வைக்கப்படுகிறது. எனவே இந்த வழக்கை முடியுங்கள், இல்லையே சிறையில் அடையுங்கள் என்று ஒரு மனுவை தாக்கல் செய்தார் வைகோ.
இதனால் நீதிபதி அவர்கள் 15 நாள் காவலில் எடுக்கிறேன் என சொன்னதோடு, உடனே நீங்கள் ஜாமீனும் எடுக்கலாம் எனவும் வேண்டுகோள் வைத்தார். ஆனால் ஜாமீனை வைகோ மறுத்துவிட்டார்.
அதனால் கைதாவதற்கு முன்னர் மதிமுகவினருக்கு, ஆர்ப்பாட்டம், போராட்டம் எதுவும் கூடாது எனவும், சிறையில் சந்திக்க வேண்டாம் எனவும், உங்களது வேலைகளை கருவேலம் மரங்களை அகற்றுமாறும் வேண்டுகோள் விடுத்தார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment