தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகளுக்கு அருகில் 500 மீட்டருக்குள் இருக்கின்ற மதுபானக் கடைகளை மூட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி, காரணம்பேட்டையில் இருந்து கருமத்தம்பட்டி செல்கின்ற மாநில நெடுஞ்சாலையில், சாமளாபுரத்தில் இருந்த மதுக்கடை மூடப்பட்டது. அந்தக் கடையை மீண்டும் சாமளாபுரம் குடியிருப்புப் பகுதியில் திறப்பதற்கு நடவடிக்கை எடுத்த காரணத்தினால், அந்தக் கிராமத்தைச் சார்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் இன்று மாலை 4 மணி முதல் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். அவர்கள் மீது, மாலை 5.30 மணிக்கு காவல்துறையினர் கண்மூடித்தனமாகத் தடியடி நடத்தியதால் பல பெண்கள் காயம் அடைந்துள்ளனர்.
இந்தத் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவிப்பதுடன், பெண்களைத் தாக்கிய காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அந்த இடத்தில் மீண்டும் மதுக்கடையை திறக்கக்கூடாது என்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன் என மதிமுக அவை தலைவர் திருப்பூர் சு. துரைசாமி அவர்கள் இன்றைய 11-04-2017 அறிக்கையில் தெரிவித்துள்ளார்கள்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment