மாணவர்களும், இளைஞர்களும்
திராவிட இயக்கம் குறித்து அறிந்து கொள்ளும் வகையில், மறுமலர்ச்சி
திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், திராவிட
இயக்கக் கருத்துப்பட்டறைகள் நடத்தப்படுகின்றன. முதல் கருத்துப்பட்டறை ஆகஸ்ட் 08,
09 ஆகிய நாள்களில் ஈரோட்டில் சிறப்பாக நடைபெற்றது.
இரண்டாவது கருத்துப் பட்டறை, காஞ்சிபுரம்
மாவட்டம் திருப்பெரும்புதூர் அருகில் உள்ள வல்லக்கோட்டை ஐஸ்வர்யா மகால்
மண்டபத்தில், 2015 ஆகஸ்ட் 22,
23 சனி,ஞாயிறு ஆகிய இரண்டு நாள்கள் நடைபெறுகிறது. வடசென்னை, மத்திய
சென்னை, தென்சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்
ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பங்கு பெறலாம்.
இந்தக் கருத்துப்பட்டறையில்
பயிற்சி பெறுவதற்குத் தகுதியானவர்களைத் தேர்வு செய்யும் விபரம்:
இடம்: தாயகம், எழும்பூர்
- சென்னை; நாள்: 16.08.2015 ஞாயிற்றுக்கிழமை
காலை 9 மணி
முதல் 11 மணி வரை வடசென்னை
காலை 11 மணி
முதல் 1 மணி வரை மத்திய சென்னை
பிற்பகல் 2 மணி
முதல் 4 மணி வரை தென்சென்னை
மாலை 4 மணி
முதல் 6 மணி வரை திருவள்ளூர்
மாலை 6 மணி
முதல் 8 மணி வரை காஞ்சிபுரம்
இளைஞர் அணி, மாணவர்
அணியின் பகுதி, ஒன்றிய, மாவட்ட
அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், பேரூர்
அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், மாநில
துணைச் செயலாளர்கள் மற்றும் மறுமலர்ச்சி மாணவர் மன்றத்தினரை இத்தேர்வுக்கு அழைத்து
வருமாறும், இவர்கள் தவிர மேற்கண்ட மாவட்டங்களில் ஆர்வமிக்க,
25 வயதுக்கு உட்பட்ட கல்லூரி மாணவர்கள், மாணவியர்கள்
மற்றும் இளைஞர்களையும் தேர்வுக்கு அழைத்து வருமாறும் தொடர்புடைய மாவட்டச்
செயலாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
கழக இளைஞர் அணிச் செயலாளர் வே.ஈஸ்வரன், மாணவர்
அணிச் செயலாளர் தி.மு.இராசேந்திரன் ஆகியோரால் தேர்வு செய்யப்படுகின்ற
பயிற்சியாளர்கள், திராவிட இயக்கக் கருத்துப்பட்டறையில் பங்கேற்க அனுமதி
அளிக்கப்படும். சான்றிதழ்கள் வழங்கப்படும்.
கருத்துப் பட்டறையில் இரண்டு
நாட்களும் பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொள்வதோடு நிறைவுரையும் ஆற்றுகிறார்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment