கடந்த ஜூலை மாதம் 31 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் பகுதியை ஒட்டிய உண்ணாமலைகடையில் நடைபெற்ற மது விலக்கு ஆர்ப்பாட்டத்தில் காந்தியவாதி சசிபெருமாள் அலைபேசி கோபுரத்தில் ஏறி போராடியதில் காவல்துறை நடவடிக்கை எடுக்காததால் இறந்தார். இதனால் முழு மது விலக்கு அறிவிக்கும் வரை சசிபெருமாள் உடலை வாங்கமாட்டோம் என சசிபெருமாள் குடும்பத்தார் அறிவித்தனர். இதனால் சசிபெருமாள் உடல் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையிலே பாதுகாக்கப்பட்டிருந்தது. அன்றிலிருந்து தமிழகம் முழுதும் முழு மதுவிலக்கிற்காக தமிழக மக்களும், குறிப்பாக படிக்கும் மாணவர்கள் களத்தில் இறங்கி போராடி வருகிறார்கள்.
இந்நிலையியில்தான் நேற்று வைகோ, திருமாவளவன், ராமகிருஸ்ணன், மற்றும் பல அரசியல் தலைவர்கள் சசிபெருமாள் வீட்டிற்கு சென்று பேசி அவரது உடலை வாங்க வேண்டுகோள் வைத்து அவர்கள் ஒப்புக்கொண்டதும், வைகோ அவர்களே சேலத்தில் இருந்து விரைந்துிரவு 11 மணி அளவில் நாகர்கோவில் வந்தார். சசிபெருமாள் உடலை அவரது சகோதரர் மற்றூம் வைகோ அவர்கள் கையெழுத்திட்டு பெற்றுக்கொண்டு உடனே சேலம் திரும்பினர்.
சசிபெருமாள் உடல் அவரது சொந்த ஊரை இன்று காலை 10 மணியளவில் நெருங்கியது. சசிபெருமாள் உடல் சேலம் மாநகருக்குள் ஊர்வலமாய் வந்து புறவழி சாலை வழியே இளம்பிள்ளை சென்றது. பின்னர் தலைவர் வைகோ, திருமா, குமரி அனந்தன் இறுதி மரியாதை செலுத்தினர்.
சசிபெருமாள் உடலை தலைவர் வைகோ, திருமாவளவன் மற்றும் சிலர் சுமந்து கொண்டுவந்து அஞ்சலிக்காக வைத்தனர்.
பின்னர் நினைவஞ்சலி பொதுக்கூட்டத்தில் தலைவர்கள் பேசினார்கள்.
அஞ்சலி செலுத்த வருபவர்களை ஊர் எல்லையில் தடுக்கப் படுவதாக புகார் எழுந்த நிலையில் தலைவர் வைகோ காவல்துறைக்கு வேண்டுகோள் விடுத்து அனுமதிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
இறுதி அஞ்சலியில் கழக முன்னணியினர், குமரி அனந்தன் இரங்கலுரை செலுத்தினார்கள். ஸ்டாலின் மேடையில் தலைவர் வைகோ அவர்களிடம் நலம் விசாரித்தார். ஆம் ஆத்மி, புதிய தமிழகம், இந்திய தேசிய லீக் கட்சிகளை சேர்ந்தவர்கள் இரங்கல் உரை நிகழ்த்தினர்.
அதில் பேசிய திரு.ஸ்டாலின் அவர்கள் கலைஞர் அவர்களின் சார்பில் மரியாதை செலுத்த வந்திருக்கிறேன். சசிபெருமாள் சாவுக்கு விசாரணை கமிசன் வேண்டும். கலைஞர் கவர்னருக்கு மடல் எழுதி உள்ளார். இன்று மாலை கொடுக்கப்பட உள்ளது. என்னதான் வழங்கினாலும் அது செவிடன் காதில் ஊதிய சங்குதான். இருந்தாலும் நமது கடமை தருகிறோம் என பேசினார். மேலும்சசிபெருமாள் என்னையும் சந்தித்து மதுவிலக்கு குறித்து பேசினார். திமுக தியாகி சசிபெருமாளின் குடும்பத்துக்கு துணை நிற்கும் என கூறினார் ஸ்டாலின்.
மதுவை எதிர்த்து போராடும் சட்டக் கல்லூரி மாணவி நந்தினி அந்த கூட்டத்தில் தலைவரிடம் மதுவிலக்கு கோரிக்கை வைத்தார்.
விடுதலை சிறுத்தைகள் ரவிக்குமார், 20 தமிழர்கள் ஆந்திராவில் படுகொலைக்கு நியாயம் கேட்ட ஹன்றி திபேன் அவர்கள் தியாகியின் இரங்கல் உரையாற்றினர். அரசியல் மேடைகளில் பேசாமல் தவிர்க்கும் மனித உரிமை ஆர்வலர் ஹன்றி திபே..அவர்கள் இரங்கலுரை..வேண்டுமென்றே அரசு காலம் தாழ்த்தியது.,என்ற குற்றச்சாட்டை வைக்கிறோம்,,மனிம உரிமை காப்பாளர் சசிபெருமாள் என புகழாரம் சூட்டினார்.
மதுவிலக்கு வேண்டி உயிர் நீத்த தியாகி சசி பெருமாள் அவர்களுக்கு மதிமுக இணையதள தோழர்கள் சார்பாக மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.
மா.கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் அவர்கள் அஞ்சலி செலுத்தி உரையாற்றினார்.
சசிபெருமாள் அவர்களின் தம்பி செந்தில் அவர்கள் நடந்த உண்மைகளை விவரித்தார். என் தகப்பனாருக்கு செய்ய வேண்டிய மரியாதயாக சசிபெருமாள் அவர்களுக்கு செய்தேன், எட்டு நாட்களாக இருந்த உடம்பை கவுசு பாராமல் தொட்டு தூக்கி டிரஸ் போட்டு அனைத்து உதவிகளையும் செய்தவர் வைகோ அவர்கள். பணத்திற்கு கட்டுபடுவதா, வைகோ அவர்களின் பாசத்துக்கு கட்டுப்படுவதா. நேற்று முதல் இன்று வரை அண்ணன் வைகோ அவர்கள் சாப்பிடவில்லை என சசிபெருமாள் அவர்களின் தம்பி செந்தில் கூறினார் செந்தில். சசிபெருமாள் அவர்களின் அண்ணன் வேங்கடாசலம் இரங்கலுடன் நன்றியுரையாற்றினார்.
விளவங்கோடு எம்,எல்.ஏ விஜயதாரணி அவர்கள், மனித நேய மக்கள் கட்சி பொது செயலாளர் தமிமும் அன்சாரி அவர்கள், தோழர் மணியரசன் அவர்கள் இரங்கல் உரை நிகழ்த்தினார்கள்.
பூரண மதுவிலக்கு வேண்டி ஒரு கோடி கையெழுத்து இயக்கம் அந்த தியாக இடத்தில் நடந்தது. சிதம்பரத்தில் காப்பாற்றிய அரசு, ஏன் நாகர்கோவிலில் காப்பாற்ற வில்லை என சசிபெருமாள் அவர்களுடன் பணியாற்றிய ஆனந்தி கேள்வியெளுப்பினார். மதிமுக சார்பில் கழக பொருளாளர் டாக்டர் மாசிலாமணி அவர்கள் இரங்கலுரையில் பறவை முனியம்மாளுக்கு காட்டிய கருணையையாவது சசி பெருமாளுக்கு இந்த அரசு காட்டியதா, ஒரு குடும்பத்திற்கு ஒரு குடி நோயாளி உருவாகி கொண்டிருக்கிறான் என பேசினார்.
முழு கடையடைப்புக்கு கேட்ட மாத்திரத்திலேயே ஆதரவு தந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் இரங்கல் உரையில் தன் மனைவிக்காக தீயில் தன்னை இணைத்து கொண்ட நடிகர் சசிகுமார் அவர்களின் நினைவாகவே பெருமாள் என்ற தன் பெயரை சசிபெருமாள் என மாற்றி கொண்டார். அரசியலுக்கு அப்பாற்பட்டு மதுவிலக்கு வரவேண்டும் என்ற ஒத்த கருத்து உண்டு. கலிங்கபட்டி கலவரத்தின் போது வைகோவுக்கு 60 வயது எண்டவில்லையோ என எண்ண தோன்றியது. 10 நாட்களாக நடக்கும் மது போராட்டத்திற்கு முதல்வர் நீங்கள் பதில் சொல்லாவிட்டாலும் நீங்க வைத்திருப்பீங்களே பன்னீர் செல்வம் .அவர் கூட ஏதும் சொல்லக் கூடாதா என இளங்கோவன் பேசினார்.
ஏழு நாட்களாக உண்ணாவிரதம் மேற்கொண்ட சசிபெருமாள் மகன் விவேக் நன்றியுரை ஆற்ற வந்தார்..அவரால் உடல் நலம் முடியவில்லை. ஆனாலும் நன்றி தெரிவித்தார். தமாக சார்பில் இளைஞரணி யுவராஜ் பேசினார். விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமா அவர்கள் உரை நிகழ்த்தினார்.
பின்னர் தியாகத்தை மண்ணில் விதைத்து மதுவிலக்கு கொள்கையை கையிலெடுத்து போராட துணிந்து நிறைவுரை ஆற்றினார் தமிழின முதல்வர் வைகோ. அவர் பேசுகையில், 20 தமிழர் படுகொலைக்காக நான் முதல்வரை சந்திக்க நேரம் கேட்டிருந்தேன். அப்போது நேரம் வழங்காமல் பிரச்னை பெரிதாகாமல் தடுக்க திடீரென அரசு உதவி அளித்துள்ளது. உச்சநீதி மன்றம் வரை சென்று உண்மைக்காக போராடுவோம். மதுவிலக்கு முழுமையாக வேண்டும் .அதற்காக கள்ளை ஆதரிப்பதாக அர்த்தம் இல்லை. மாற்று சிந்தனை இல்லை. தியாகியின் உடலை நானே தொட்டு தூக்கி கதராடை அணிவித்தேன். அவரது உடல் கெட்டு போகவில்லை. ஆளாளுக்கு அவரவர் விருப்பத்துக்கு பேசக்கூடாது. முழு மதுவிலக்கே நமது இலக்கு. மதுக்கடைகள் நேரக்குறைப்பு கட்சிகாரர்களுக்கு மட்டுமே உதவும். ஏமாற்று வேலை வேண்டாம் என பேசினார் வைகோ. பண உதவி வேண்டாம் என்றார் சசிபெருமாள் மகன் விவேக். அதனால் அவருக்கு மணிமண்டபம் அமைக்கவே உதவி செய்கிறோம். மணிமண்டப குழுத் தலைவர் வைகோ, செயலாளர் திருமாவளவன், இணைச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன். பொருளாளர் சசி பெருமாள் மகன் விவேக் ஆகியோர் பொறுப்பேற்று மணிமண்டபம் அமைப்பர் எனவும் வைகோ தெரிவித்தார். ரத்தக்கறை படிந்த சசிபெருமாள் சட்டை வேண்டும். அதுதான் எங்களின் சாட்சி. நீதிமன்றத்திற்கு சென்று போராடுவோம். தமிழ்நாட்டில் அதிக சுடுகாட்டுக்கு சென்ற ஒரே தலைவன் நான்தான். ஜெயிலுக்கு போனா அதிகமாக சந்தோசம் அடைவது எங்க அம்மாதான் (மாரியம்மாள் அன்னை) என வைகோ கூறினார்.
பின்னர் இறுதிசடங்கு நடந்தது. தலைவர்கள் அனைவரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தி காந்தியவாதி தியாகி சசிபெருமாள் அவர்களின் உடல் அவரது வீட்டு பக்கத்திலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது.
கடந்த ஒரு வாரமாக சசிபெருமாள் அவர்களின் மகன் விவேக் மதுவிலக்கிற்காக மேற்கொண்ட உண்ணாவிரதத்தை குமரி அனந்தன் அவர்கள் முடித்து வைத்தார். பின்னர் தியாகி சசிபெருமாள் அவர்களுக்கு மணிமண்டபம் கட்ட ஐந்து லட்சம் நிதி அளிக்கப்பட்டது. அதை சசிபெருமாள் மகன் விவேக் பெற்றுக்கொண்டார்.
செய்தி சேகரிப்பு:மதிமுக இணையதள நேரலை அம்மாபேட்டை கருணாகரன்
மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment