Tuesday, March 1, 2016

உச்சி வெயிலிலும் மாற்றம் வேண்டி மக்கள் நலக் கூட்டணி தலைவர்களின் உரை கேட்ட மக்கள்!

சென்னை ஆவடி நகரில் 01.03.2016 இன்று காலை 10.30 மணிக்கு மக்கள் நலக் கூட்டணியின் மூன்றாம் கட்ட முதல் நாள் மாற்று அரசியல் எழுச்சிப் பயணத்தில், தகத்தகக்கும் மதிய உச்சி வெயிலில் தலைவர்கள் உரையை கேட்க, மக்கள் பெருவெள்ளம் போல திரண்டிருந்தார்கள்.

அப்போது பேசிய திருமாவளவன் அவர்கள், இந்தத் தேர்தலில் முக்கியப் பிரச்சினையாக இருப்பவை ஊழலும், மதுவும் என்றார்.

டேவிட் கோலியாத்தை வீழ்த்தியதைப்போல மக்கள் நலக் கூட்டணி மிகப் பெரும் ஊழல் கட்சிகளை வீழ்த்தும். பிற ஊடகங்களைப் பற்றி கவலைப் படாதீர்கள். சமூக வலைத்தளங்கள் மூலம் நம்மால் மக்கள் மனங்களுக்குள் நம்மால் செல்ல முடியும் எனவும் திருமாவளவன் நம்பிக்கை தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய மார்க்ஸிஸ்டு கட்சியின் தமிழ் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் அவர்கள், கருணாநிதியும் ஜெயலலிதாவும் ஆட்சி செய்வது மக்கள் சேவைக்காக அல்ல, சுயநலத்திற்காக எனவும் எடுத்துரைத்தார். மக்களுக்குப் பயனில்லாத மத்திய பட்ஜெட்டை அதிமுக, திமுக இருவரும் பாராட்டுகின்றனர் எனவும் கேள்வி எழுப்பினார்.

இறுதியாக பேசிய மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ அவர்கள், இன்று மார்ச் 1 ஆம் தேதி,

Let us March forward... Capture the Power...
முன்னேறிச் செல்வோம்... அதிகாரத்தைக் கைப்பற்றுவோம்... என கூறினார்.

1970 ல் 67 வயது காமாராஜரைப் பார்த்து "வயதான காலத்தில் காமராஜருக்கு முதலமைச்சர் பதவி ஆசை ஏன்?" என்று கேட்டாரே கருணாநிதி கேட்டார். ஆனால் இப்போது, கருணாநிதி மகனே, அந்த வயதை நெருங்கிவிட்டார். ஆனால், இன்னும் கருணாநிதிக்கு ஏன் பதவி ஆசை எனவும் பழைய பத்திரிகையை காட்டி ஆதாரத்தோடு கேள்வி எழுப்பினார் வைகோ!

கூட்டத்தில் மாற்றம் தேவை என வலியுறுத்தி வந்திருந்தவர்களிடம், தாய்மார்களே! அதிமுக, திமுக ஆட்சிக்கு வந்தால் உங்கள் பிள்ளைகள் பாதுகாப்பாக இருக்க முடியாது, பெண் பிள்ளைகள் பாதுகாப்பாக வெளியில் சென்று வர முடியாத சூழல் எனவும் விளக்கினார்.
1967க்குப் பின்னர் 2016ல் தமிழகத்தில் அரசியல் அதிசயம் கண்டிப்பாக நிகழும் எனவும் ஆரூடம் கூறினார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment