Tuesday, June 30, 2015

வைகோவின் அஞ்சாத அறிக்கைக்கு அடிபணிந்தார் ஜெயலலிதா!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருவைகுண்டம் ஆற்றின் மேல் 1941 ஆம் ஆண்டு தலைவர் வைகோ அவர்களின் தாத்தா கொடைவள்ளல் உயர்திரு கோபால்சாமி நாயக்கர்‬ அவர்கள் ‪‎நகர சபை தலைவராக‬ இருந்த போது திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட மக்களின் வாழ்வாதாரமான விவசாயம், குடிநீர், பெற அணையை செம்மைப்படுத்தி, அதன்மேல் பாலம் கட்டினார், ஆனால் இப்போது பல ஆண்டுகள் தூர்வாரப்படாமல் மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. 

இந்நிலையில் அந்த திருவைகுண்டம் அணையைத் தூர்வாருவதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரி கழகப் பொதுச்செயலாளர் அறிவுறுத்தலுக்கு இணக்க மாவட்டச் செயலாளர் ஜோயல் வழக்குத் தொடர்ந்திருந்தார், இவ்வழக்கில் பசுமைத் தீர்ப்பாயம் திருவைகுண்டம அணையை துர் வாருவதற்கு மாநில அரசு அரசை வலியுறுத்தியது.

ஆனால் அந்த தீர்ப்பை அலட்சியம் செய்த தமிழக ஜெயலலிதா‬ அரசைக்கண்டித்து, ஜூலை 6 ஆம் தேதி, நானே களத்தில் இறங்கி மக்களை திரட்டி, கழக தொண்டர்களோடு, மண்வெட்டி, கடப்பாரை, அரிவாள், தட்டுகளோடு ‪‎தூர்வாருவேன்‬ என்று ஆற்றை பார்வையிட்டு நேற்று அறிவித்துவிட்டு இன்று அனைத்து விவசாயிகளுக்கு அழைப்பும் விடுத்தார் வைகோ!

அதை கவனித்த தமிழக அரசானது, திருவைகுண்டம் ஆற்றை தூர்வாருவதாக இன்று அறிவிப்பு செய்தது! இது தலைவர் வைகோ‬ அவர்களுக்கு கிடைத்த மாபெரும் ‪‎வெற்றி. தலைவர் எடுக்கும் ஒவ்வொரு மக்க்ள் பணிக்கும் அங்கிகாரம் கிடைத்துக்கொண்டே இருக்கிறது. 

22 வருடமாக மக்களுக்கு பணி செய்து மதிமுகவின் செயல்பாட்டை, மக்கள் சேவையை, எந்தவித எதிர்பார்ப்புமில்லாமல் செய்துகாட்டியிருக்கிறோம். இதனால் மக்கள் மனதில் மதிமுகவிற்கு ஒரு வாய்ப்பு கொடுக்கவேண்டும் என்ற எண்ணம் எழுந்துள்ளது. அது வருகிற சட்டமன்ற தேர்தலில் வாக்குகளாக பிரதிபலிக்கும். அப்போது மதிமுக பீனிக்ஸ் பறவையை போல மேலே மேலே மேலே பறக்கும், துரோகிகளும், எதிரிகளும் கழகத்தையும் வழிநடத்திய தலைவரையும் அண்ணார்ந்து பார்க்கும் நிலை உருவாகும். மறுமலர்ச்சி திமு கழகம் இவ்வளவு நாள் தமிழக மக்களின் வாழ்வாதாரத்திற்காக ஓயாது பாடுபட்டுள்ளதை மக்கள் இப்போது நன்கு அறிகிறார்கள். விதைத்திருக்கிறோம், விதைத்துக்கொண்டே இருப்போம். அறுவடை காலம் நெருங்குகிறது. சோர்வடையாமல் பணியாற்றுவோம். அதிகாரத்தை கைப்பற்றும் நிலைக்கு உயருவோம்.

மறுமலர்ச்சி மைக்கேல்.
மதிமுக இணையதள அணி - ஓமன்

சென்னை பசுமைத் தீர்ப்பாயத்தில் நாளை வாதிடுகிறார் வைகோ!

தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் திருவைகுண்டம் அணையைத் தூர் வாருவது சம்பந்தமாக தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் ஜோயல் தொடர்ந்த பொதுநல வழக்கில், சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் நாளை (01.07.2015) காலை 10.30 மணிக்கு ஆஜராகி வாதிடுகிறார். 

திருவைகுண்டம் அணையை தூர்வார உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் தமிழக அரசு தூர்வாராமல் இழுத்தடித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து வைகோ தலைமையில் வருகிற 6 ஆம் தியதி திங்கள் கிழமை அணையை தூர்வார அனைத்து விவசாயமக்களுக்கும் அழைப்பு விட்டிருந்த நிலையில், தமிழக அரசு நாளை தூர்வார உத்தரவு பிறப்பித்து பணியை முதல்வர் ஜெயலலிதா காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்

நெல்லை புறநகர் மாவட்ட மதிமுக செயல்வீரர்கள் கூட்டம்!

நெல்லை புறநகர் மாவட்ட மறுமலர்ச்சி தி.மு.கழக செயல்வீரர்கள் கூட்டம் ஹோட்டல் சகுந்தலாவில் இன்று 30.06.2015 செவ்வாய்கிழமை மாலை 6 மணி அளவில் நடைபெற்றது. இதில் கழக கொள்கை விளக்க அணிச்செயலாளர் அடுக்குமொழியில் அழகுற பேசும் இலக்கிய செல்வன் வழக்கறிஞர் க.அழகுசுந்தரம் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். 

இந்நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் ப.ஆ.சரவணன், மாணவர் அணி மாநிலச் செயலாளர் தி.மு.இராசேந்திரன், இணையதள ஒருங்கிணைப்பாளர் மின்னல் முகமது அலி ஆகியோர் கலந்துகொண்டனர்.


மதிமுக இணையதள அணி - ஓமன்

ஜூலை 6 திருவைகுண்டம் அணையில் தூர் வாருவோம்! வைகோ அழைப்பு!

தாமிரபரணி ஆற்றில், தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் அணையின் மூலமாக 25,560 ஏக்கர் நஞ்சை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. மாவட்டம் முழுவதிலும் உள்ள மக்களுக்குக் குடிநீரும் கிடைக்கின்றது.
இந்த அணையில் பொதுப்பணித்துறையின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படாததால் எட்டு அடி ஆழம் நீர் தேங்கி நிற்க வேண்டிய இடத்தில் மணல் குவிந்து மேடு ஆகி விட்டது. அதில் அமளை, வேலி காத்தான் செடிகள் படர்ந்து நீரை உறிஞ்சுவதால், தற்போது அங்கே ஒரு அடி தண்ணீரே தேங்கி நிற்கிறது. சுமார் 20 டி.எம்.சி. தண்ணீர் கடலில் சென்று வீணாவதால், மூன்று போக விவசாயம் நடைபெற்ற பகுதி, கடந்த ஆண்டுகளில் ஒரு போகமாக மாறிவிட்டது. குடிதண்ணீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுவிட்டது.
விவசாயிகள் பொதுமக்கள் நலனைப் பாதுகாக்க திருவைகுண்டம் அணையைத் தூர்வார ஆணையிடக்கோரி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் ஜோயல் தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை ஏப்ரல் 9, 30, மே மாதம் 8, 13, 28,30 ஆகிய நாள்களில், சென்னையில் விசாரணை நடைபெற்றது.

இறுதி விசாரணை ஜூன் 5 ஆம் தேதி புதுடில்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைமை அமர்வில் நீதி அரசர் ஜோதிமணி, தொழில்நிபுண உறுப்பினர் பேராசிரியர் யூசுப் அமர்வு முன்னிலையில் நடைபெற்றது.
முடிவில், தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயம் திட்டவட்டமான தீர்ப்பைத் தந்தது.
பருவ மழையைக் கருத்தில் கொண்டு ஜூன் 10 ஆம் தேதிக்குள் மத்திய சுற்றுச் சூழல் வனத்துறை அமைச்சகம், திருவைகுண்டம் அணையைத் தூர் வாருவதற்கு உரிய அனுமதியை வழங்க வேண்டும். தவறினால், தமிழக அரசு மத்திய அரசின் அனுமதிக்குக் காத்திராமல் ஜூன் 11 ஆம் தேதி அணையை தூர்வாரும் பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்பதே அந்தத் தீர்ப்பு ஆகும்.

இந்நிலையில், தீர்ப்பு ஆயத்தினுடைய ஆணையை ஏற்று மத்திய சுற்றுச் சூழல் வனத்துறை அமைச்சகம் அணையைத் தூர் வாருவதற்கான அனுமதியை ஜூன் 10 ஆம் தேதி வழங்கி விட்டது. எனவே, ஜூன் 11 ஆம் தேதி அன்று தமிழக அரசு அணையைத் தூர்வாரும் பணிகளை தொடங்கும் என்று விவசாயிகளும், பொதுமக்களும் எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்தனர். பணிகள் தொடங்கப்படவில்லை.

ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர் ஜோயலும், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளும் ஜூன் 22 ஆம் தேதி அன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவரைச் சந்தித்து தூர்வாரும் பணியைத் தொடங்குமாறு கோரிக்கை விடுத்தனர். ஆனால், தமிழக அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

8 கிலோ மீட்டர் நீளத்திற்கு மணலும், அமளிச் செடிகளும் தாமிரபரணி ஆற்றில் குவிந்து கிடக்கின்றன. இங்குள்ள மணலை எடுத்து அரசாங்கமே ஏலம் விட்டு பல கோடிக்கணக்கான ரூபாய் வருவாயும் பெறலாம்.

மழைக்காலம் தொடங்கி விட்டால், தூர்வாரும் பணியைக் கிடப்பில் போட்டுவிடலாம் என்பதுதான் தமிழக அரசின் நோக்கம் ஆகும். ஏறத்தாழ 20 நாட்கள் கடந்துவிட்ட நிலையில், தூர்வாரும் பணியைத் தமிழக அரசு மேற்கொள்வதற்கான நடவடிக்கை எதுவும் தெரியவில்லை.

எனவே, குடிமராமத்து வேலையாக, பல்லாயிரக்கணக்கான விவசாயிகளைத் திரட்டி, ஜூலை 6 ஆம் தேதி தாமிரபரணி ஆற்றில் திருவைகுண்டம் அணைப் பகுதியில் தூர்வாரும் பணிகளை என்னுடைய தலைமையில் தொடங்குவோம் என்று, இரண்டு நாட்களுக்கு முன்னர் திருவைகுண்டம் அணையைப் பார்வையிட்டு அறிவித்தேன்.

இது அறப்போராட்டம். விவசாயிகளுக்கான போராட்டம். மக்களுக்காக மக்களே முன்நின்று மக்கள் நலன் காக்கும் அறப்போராட்டம். எனவே, தாமிரபரணி பாசனப் பகுதி விவசாயிகள் அனைவரும் வீட்டுக்கு ஒருவர் தவறாது மண் வெட்டி, இரும்புச் சட்டி மற்றும் தேவையான கருவிகளுடன் அறப்போராட்டத்தில் பங்கேற்க வேண்டுகிறேன்.

முல்லைப் பெரியாறு அணையைக் காக்க எட்டு ஆண்டுகள் போராடிய உணர்வோடு, காவிரி அமராவதி பாசனப் பகுதியைக் காக்கப் போராடிய உணர்வோடு தமிழகம் எங்கும் உள்ள கழகத் தோழர்கள் திருவைகுண்டம் அணை அறப்போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கில் பங்கேற்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

காவல்துறை அடக்குமுறையை ஏவுமானால், அறவழியில் எதிர்கொள்வோம் எனத் தெரிவிக்கிறேன் என தெரிவித்துள்ளார் வைகோ.

மதிமுக இணையதள அணி - ஓமன்

Monday, June 29, 2015

விரிவுரையாளர் விஜயகுமார் - ரம்யா திருமணத்தை நடத்தி வைத்தார் வைகோ!

இன்று ராசபாளையத்தில் நடந்த இனிய இணையதள நண்பரும் தலைவர் வைகோ அவர்கள் வழி நடக்கும் விரிவுரையாளருமான சகோதரர் விஜயகுமார் - ரம்யா அவர்கள் திருமணத்தை தமிழின தலைவர், பார் போற்றும் படைதலைவன் வைகோ அவர்கள் நடத்தி மணமக்களுக்கு திருக்குறள் கொடுத்து தமிழ் போல தழைக்க வாழ்த்தினார்.

இத்திருமண விழாவில் பேசிய தலைவர் வைகோ அவர்கள், தன்னல மறுப்பாளனாக இருந்தால் மட்டுமே திராவிட கொள்கையில் சிறக்க முடியும் எனவும், கடந்த காலங்களில் திமுக போராட்டங்களில் ஈடுபட்டதை பற்றி பேசி அதற்காக நாண் பங்கு கேட்கவில்லை, தேவையுமில்லை, அது முடிந்து போன கதை, வெகுதூரம் வந்து விட்டோம்... ஆனால் லட்சியங்கள் மாறுவதில்லை எனவும் தெரிவித்தார். 
தேர்தலில் உங்களை விற்காதீர்கள், பிறகெப்படி உங்கள் வாரிசுகள் வாழ முடியும் எனவும் கேள்வி எழுப்பினார். வருகிற செப்டம்பர் 15 க்கு பிறகு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் விசுவரூபம் எடுக்கும் எனவும் உணர்ச்சிகரமாக பேசினார். அப்போது தொண்டர்களிடையே மிகுந்த ஆரவாரம் எழுந்தது. 

விஜயகுமார் - ரம்யா தம்பதியர் நலமோடும் வளமோடும் மகிழ்வோடும் பேரோடும் புகழோடும் சீரோடும் சிறப்போடும் ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரூன்றி வாழையடி வாழையாய் வாழ்வாங்கு வாழ ஓமன் மதிமுக இணையதள அணி சார்பாக வாழ்த்துகிறோம்.

மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்

Sunday, June 28, 2015

சி.பா.ஆதித்தனார் திருவுருவச் சிலையைத் திறந்து வைத்தார் வைகோ!

 
தூத்துக்குடி மாவட்டம் காயாமொழியில் இன்று ஞாயிறு 28.06.2015, தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் அவர்களின் திருவுருவச் சிலையைத் திறந்து வைத்து வைகோ உரை நிகழ்த்தினார்.

உடன் மாலை முரசு அதிபர் கண்ணன் ஆதித்தன், தினத்தந்தி அதிபர் பாலசுப்பிரமணிய ஆதித்தன். மத்திய அமைச்சர் பொன்.இராதாகிருஸ்ணன் தமிழக அமைச்சர் வைத்தியலிங்கம், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மதிமுக இணையதள அணி - ஓமன்

ஜூலை 6 இல் திருவைகுண்டம் அணையைத் தூர்வாருகிறார் வைகோ!

திருவைகுண்டம் அணையைத் தூர்வாருவதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரி கழகப் பொதுச்செயலாளர் அறிவுறுத்தலுக்கு இணக்க மாவட்டச் செயலாளர் ஜோயல் வழக்குத் தொடர்ந்திருந்தார், இவ்வழக்கில் பசுமைத் தீர்ப்பாயம் திருவைகுண்டம அணையை துர் வாருவதற்கு மாநில அரசு அரசை வலியுறுத்தியது,

ஆனால் இதுவரை மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, இன்று மதியம் திருவைகுண்டம் அணையைப் பார்வையிட்ட வைகோ அவர்கள். வந்திருந்த செய்தியாளர்களிட்ம் மண்வெட்டி கடப்பாறை, இரும்பு சாந்துச் சட்டி எடுத்து வந்து ஆயிரக்கணக்கான விவசாயிகளுடனும், கழகத் தொண்டர்களுடனும் நானே அணையில் இறங்கி தூர் வாரப்போகிறேன் என்றார்,

இந்நிகழ்ச்சியில் குலசேகர நையனார், துணைப்பொதுச்செயலாளர் நாசரேத் துரை, மாவட்டச் செயலாளர்கள் எஸ்.ஜோயல், ப.ஆ.சரவணன், எஸ்.பெருமாள். மாணவர் அணி மாநிலச் செயலாளர் தி.மு.இராசேந்திரன், இணையளதள ஒருங்கிணைப்பாளர் மின்னல் முகமது அலி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


மதிமுக இணையதள அணி - ஓமன்