Sunday, May 7, 2017

மதிமுக 24 ஆம் தொடக்க விழா பொதுக் கூட்டம்!

மதிமுகவின 24 வது ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சிகள், திருவள்ளுவர் மாவட்டத்தில் ஆட்சிமன்ற குழு தலைவர் டி.ஆர்.செங்குட்டுவன் ஏற்ப்பாட்டில் 06-05-2017 அன்று நடைபெற்றது.

இதில் மாவட்ட செயலாளர்கள், மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி தலைவரகள், மகளிரணி தலைவர்கள், மற்றும் கழக முன்னோடிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இந்த பொதுக் கூட்டத்தில் பேசிய மதிமுக மாநில மகளிரணி செயலாளர் மருத்துவர் ரோஹையா பேசும்போது, நம் எதிரியிடம் பணம், அதிகாரம், ஜாதி, மதம் ஆகிய ஆயுதங்கள் இருக்கின்றன.


அவைகளை கொண்டு மதிமுகவை 23 ஆண்டுகளாக தாக்கி வந்தாலும் நாம் இன்னும் ஈடுகொடுக்கிறோமே! 

எதனால் ...? 


நேர்மை என்ற கவசத்தால்... 

கர்ணனுக்கு கவச குண்டலம் மாதிரி...


மதிமுகவுக்கு கவசம் நேர்மை... என முழங்கினார்.

ஓமன் மதிமுக இணையதள அணி

No comments:

Post a Comment