தேச துரோக வழக்கில் தமிழீழத்திற்கு ஆதரவாக உண்மையை பேசியதால், 2009 ல் திமுக கருணாநிதி அரசு வழக்கு தொடர்ந்தது. அது 8 ஆண்டுகள் கழித்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதால், வைகோ கடந்த 52 நாட்களாக சிறையில் இருந்தார்.
இன்று 25-05-2017 விடுதலையானார். அப்போது வரும் வழியில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு மதிமுக தலைமை நிலையமான தாயகம் சென்று அங்குள்ள அண்ணா, பெரியார் சிலைகளுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடந்து செய்தியாளர்களிடம் பேசிய வைகொ அவர்கள், கல்வித்துறையில் மாற்றம் கொண்டு வந்த அமைச்சர் செங்கோட்டையனுக்கு திரு.வைகோ பாராட்டு
டாஸ்மாக்கிற்கு எதிரான மக்கள் எழுச்சியை அடக்குமுறையால் ஒடுக்க முடியாது. மதுக்கடைகளை அரசால் இனி நடத்த முடியாது.
52நாட்கள் சிறை வாசத்தில் என்ன நானே ஆய்வு செய்து கொண்டேன். அதிக புத்தகங்கள் படிக்க வாய்ப்பு கிடைத்தது.
கட்சி நிர்வாகிகள் வற்புறுத்தியதால் ஜாமீனில் வெளிவர ஒப்புக்கொண்டேன்.
பழிவாங்கும் நோக்கத்திலேயே திமுகவினரால் என் மீது வழக்கு தொடரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டேன்.
சீமைக்கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக அரசு பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.
மதுக்கடைகளுக்கு எதிராக போராடும் மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் கண்டிக்கத்தக்கது.
ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சி தொடங்கலாம்.
கலைஞரின் வைர விழா சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள்.
நீட் தேர்வு சமூக நீதிக்கு கேடானது. மத்திய அரசு மாநில அரசை எப்படி வேண்டுமானாலும் ஆட்டி படைக்கலாம் என்ற மனப்பான்மை வரகூடாது.
ஹைட்ரோகார்பன் என்ற குடைக்குள் அனைத்து திட்டத்தையும் மத்திய அரசு கொண்டு வர பார்க்கிறது.
இப்போது மீத்தேன் வேண்டும் என்று சொன்னவர்கள், எதிர்த்தும், மதுக்கடைகளை கொண்டு வந்தவர்கள் மதுக்கடை மூடவேண்டுமென்று சொல்கிறார்கள். நல்ல மாற்றம் நடந்தால் நல்லதுதான்.
மறைமுகமாக திட்டம் தீட்டும் ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்களை மாநில அரசு ஏன் கண்டிக்கவில்லை?
அரசை கடந்து மக்கள் சக்தி இருக்கிறது. அந்த சக்தி திரளும். ஆதலால் மத்திய மோடி அரசு இந்த திட்டங்களையெல்லாம் கொண்டு வர முடியாது என பேசினார். தொடர்ந்து தாயக பணிகளை தொடர்ந்தார் வைகோ.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment