முள்ளி வாய்க்காலில் சிங்கள ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு, 8 ஆம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம், 17.5.2017 புதன்கிழமை, சென்னையில் மறுமலர்ச்சி திமுக தலைமை நிலையம் தாயகத்தில் நடைபெற்றது.
மறுமலர்ச்சி தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார்.
இயக்குநர் புகழேந்தி தங்கராஜ், ஓவியர் வீரசந்தனம், திருமுருகன்காந்தி, ஆவடி இரா.அந்திரிதாஸ், கவிஞர் மணிவேந்தன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
வழக்கறிஞர் ஜி.தேவதாஸ், டி.ஆர்.ஆர்.செஙுகுட்டுவன், சு.ஜீவன், கே.கழககுமார், சைதை ப.சுப்பிரமணி, டி.சி.இராஜேந்திரன், மா.வை.மகேந்திரன், ஊனை ஆர்.இ.பார்த்திபன், கவிஞர் தமிழ்மறவன், ஆ.வந்தியத்தேவன், கவிஞர் கோமகன், முராத் புகாரி, வழக்கறிஞர் கோ.நன்மாறன், சு.நவதீதகிருஷ்ணன், மல்லிகா தயாளன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கழக தொண்டர்கள் நிர்வாகிகள் மற்றும் தமிழ் உணர்வாளர்கள் கலந்துகொண்டார்கள்.
No comments:
Post a Comment