மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் 24 ஆம் ஆண்டுத் தொடக்க விழாவை முனின்டடு, நேற்று 06.5.2017 காலை 10.30 மணி அளவில், தலைமைக் கழகம் தாயகத்தில் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா அவர்கள் கழகக் கொடியேற்றி இனிப்பு, நீர், மோர், பழங்கள் வழங்கினார்.
தந்தை பெரியாரின் திருஉருவச் சிலைக்கு சட்டத்துறைச் செயலாளரும், உயர்நிலைக்குழு உறுப்பினருமான வழக்கறிஞர் ஜி,தேவதாஸ் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
பேரறிஞர் அண்ணா அவர்களின் திருஉருவச்சிலைக்கு தலைமை நிலையச் செயலாளர் கவிஞர் தமிழ்மறவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
வடசெனனை கிழக்கு மாவட்டச் செயலாளர் சு.ஜீவன் அவர்கள் இரத்ததானம் வழஙகி, இரத்ததான முகாமை தொடங்கி வைத்தார்.
மருத்துவர் அணி மாநில்த் துணைச் செயலாளர் டாக்டர் கோபாலகிருஷ்ணன் அவர்கள் தனது குழுவினருடன் வந்து இரத்தம் சேகரித்தார்.
இந்நிகழ்ச்சியில் தென்சென்னை கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் கே.கழககுமார். தென்சென்னை மேற்கு மாவட்டடப் பொறுப்பாளர் வழக்கறிஞர் சைதை ப.சுப்பிரமணி, வடசென்னை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் டி.சி.இராசேந்திரன், காஞ்சிபுரம் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் இ.வளையாபதி, செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் நன்மாறன், சிறுபான்மை பிரிவுச் செயலாளர் முராத் புகாரி, அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் பூவை மு.பாபு, ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினர் சு.நவநீதகிருஷ்ணன், வெளியீட்டு அணி துணைச் செயலாளர் எம்.எல்.எப். ஜார்ஜ், தலைமைக் கழகத் துணைச் செயலாளர் மல்காமலி, மகளிர் அணி மாநிலத் துணைச் செயலாளர் மல்லிகா தயாளன். மாவட்த் துணைச் செயலாளர் லட்சுமி ஜீவா, கௌசல்யா இரவி உள்ளிட்ட மகளிர் அணி நிர்வாகிள். மற்றும் பகுதிக் கழகச் செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள், அணிகளின் மாநிலத் துணைச் செயலாளர்கள், மாவட்ட அமைப்பாளர்கள், வட்டக் கழகச் செயலாளர்கள் கழக முன்னணியின்ர் திரளாகக் கலந்துகொண்டனர்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment