நீண்ட நாள் கோரிக்கையான ஊதிய உயர்வு, தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட பணம், நின்றுவிட்ட தொழிலாளர்களுக்குக் கிடைக்க வேண்டிய ஓய்வூதியப் பணத்தை வழங்குவது ஆகிய கோரிக்கைகள் குறித்துத் தொழிற்சங்கங்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமூகமான உடன்பாடு ஏற்படாததால், அரசு போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் இன்று வேலை நிறுத்தத்தைத் துவக்கி உள்ளனர்.
இதன் காரணமாக பொதுமக்கள், நோயாளிகள் மற்றும் கல்லூரியில் சேர வேண்டிய மாணவ - மாணவிகள், ஏழை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு, மிகுந்த சிரமத்திற்கு ஆட்பட்டுள்ளனர்.
எனவே, தமிழக முதலமைச்சர் அவர்கள் இதில் உடனடியாகத் தலையிட்டு, தொழிற்சங்கத் தலைவர்களை அழைத்துப் பேசி, விரைவில் சுமூகமான தீர்வு காண வேண்டுமென, மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சார்பில் வலியுறுத்துகின்றேன் என மதிமுக அவை தலைவரும், மறுமலர்ச்சி தொளிலாளர் முன்னணியின் பொதுச் செயலாளருமான திருப்பூர் சு.துரைசாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment