2009 ஆம் ஆண்டு மே மாதம் நடந்த உக்கிர போரில் தமிழீழ விடுதலை புலிகள் களத்தை இழந்ததால், அந்த போரில் தமிழ் மக்களை கொன்றொழித்தனர் காங்கிரஸ் திமுக கூட்டணியினர் சேர்ந்து அனுப்பிய இந்திய படை உதவியுடன் சிங்கள படையினர்.
முடிந்து 8 ஆண்டுகள் ஆகிறது. இனப்படுகொலையாளர்கள் அனுதாபம் தேட முயலுகிறார்கள். தமிழர்கள் அவர்களை அவர்கள் செய்த துரோகங்களை மன்னிப்பதில்லை. அந்த நினைவேந்தல் நிகழ்வு மதிமுக தலைமை நிலையமான தாயகத்தில் இன்று 17-05-2017 மாலை 6 மணி அளவில் நடைபெறுகிறது.
மதிமுக பொதுச் செயலாளர் மல்லை சத்யா தலைமை வகிக்கிறார். மதிமுக முன்னணி தலைவர்கள் முன்னிலை வகிக்கிறார்கள்.
தமீழத்தை மூச்சாக கொண்ட புகழேந்தி தங்கராஜ், திருமுருகன் காந்தி, ஓவியர் சந்தனம் ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள்.
அவர்களுடன் கழக தீர்மான குழு செயலாளர்கள் ஆவடி அந்தரிதாஸ், கவிஞர் மணிவேந்தன் ஆகியோரும் உரையாற்றுகிறார்கள்.
கழக நண்பர்கள் அனைவரும் தவறாது கலந்துகொண்டு தமிழீழ படுகொலையாளனை உலகறிய செய்ய வேண்டுகிறோம்.
ஓமன் மதிமுக இணையதள அணி
No comments:
Post a Comment