மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து, மக்கள் நலன் காக்கும் கூட்டு இயக்கத்தின் சார்பில், ஆகஸ்ட் 13 ஆம் தேதியன்று மாலை நான்கு மணி அளவில் தமிழ்நாட்டில் ஐந்து இடங்களில், மக்கள் பெருந்திரள் ஆர்ப்பாட்ட அறப்போர் நடைபெற இருக்கின்றது.
இந்த அறப்போரில் ஐந்து இடங்களிலும் பங்கேற்போர் பட்டியலை, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவற்றின் சார்பில், வைகோ, ஜி. இராமகிருஷ்ணன், இரா. முத்தரசன், தொல். திருமா வளவன், எம்.எச். ஜவாஹிருல்லா ஆகியோர் விடுத்த கூட்டு அறிக்கையில் தெரிவித்து உள்ளனர்:
சென்னை - வைகோ, ஜி.ராமகிருஷ்ணன், இரா.முத்தரசன், தொல். திருமாவளவன், தமிமுன் அன்சாரி.
தஞ்சை - துரை.பாலகிருஷ்ணன், கே.பாலகிருஷ்ணன், மு.வீரபாண்டியன், சிந்தனைச்செல்வன், மதுரை மைதீன்.
ஈரோடு: திருப்பூர் சு.துரைசாமி, கே.வரதராஜன், கே.சுப்பராயன், ரவிக்குமார், ஆரூன் ரஷீத்.
மதுரை - மல்லை சத்யா, டி.கே.ரங்கராஜன், தா.பாண்டியன், தலையாரி, மன்னை செல்லச்சாமி.
நெல்லை - நாசரேத் துரை, ஆர்.சௌந்தரராஜன், கோ.பழனிச்சாமி, ஆளூர் ஷாநவாஸ், ஜோசப் நொலஸ்கோ.
மக்கள் நலன் காக்கும் கூட்டு இயக்கம்
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment