நெல்லை மாவட்டமான மதிமுக பொதுசெயலாளர் வைகோவின் சொந்த ஊரில் கலிங்கபட்டியில் மதுபானகடையை அகற்ற கோரி வைகோவின் தாயார் மாரியம்மாள் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதோ இந்த சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கும் 92 வயது தாயாரான இவர் தான் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வின் தாய். இவர் இன்றைக்கு கலிங்கப்பட்டியில் உள்ள மதுக்கடைகளை அகற்றக்கோரி அக்கிராமப் பெண்கள் நடத்திய போராட்டத்திற்கு தலைமை தாங்குகிறார்.
கலிங்கப்பட்டி யில் மதுக்கடையை மூடும் போரட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளதை அடுத்து தலைவர் வைகோ விரைந்து கலிங்கப்பட்டி க்கு வந்து கொண்டு இருக்கிறார் என்ற செய்தி வந்த உடனே
வைகோ அவரது சொந்த ஊருக்கு செல்ல காவல்துறை தடை விதித்துள்ளதாக தகவல். திருவேங்கடத்தில் போலீஸ் குவிப்பு. சுற்று வட்டார கிராம மக்கள் அனைவரும் தற்போது கலிங்கப்பட்டியில். கட்டுக்கடங்காத கூட்டம். தலைவர் விரைவில் வந்து கொண்டு இருக்கிறார். தமிழகத்தில் மதுக்கடைகள் மூடப்படும். தமிழகம் காக்கப்படும். தமிழக காவலாளி வைகோ தமிழகத்தை காப்பாற்றுவார்.
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment