திருவள்ளூர் மாவட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொது உறுப்பினர் கூட்டமானது இன்று (01-08-2015) அம்பத்தூர் தொழிற்பேட்டை, எம்.டி.எச் ரோடு, தொலைபேசி அலுவலகம் அருகில் உள்ள எச்.பி.எம் திருமண மண்டபத்தில் காலை 9 மணி அளவில் நடைபெற்றது. மதுவிலக்குக்காக போராடிய காந்தியவாதி சசிபெருமாள் மறைவுக்கு ஓர் நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது,
அப்போது மதிமுக பொதுசெயலாளர் தலைவர் வைகோ உரையாற்றுகையில், திருப்பூர் மாநாடு கோடிக்கணக்கான
தமிழ் மக்களை நம்மை நோக்கி திரும்ப வைக்கும். நாம் எதிர்பார்க்கும்
வெற்றி நம்மை நோக்கி வரும் காலம் வரும். இன்றைய செயல்வீரர் கூட்டத்திற்கு கூட சசிபெருமாள் நினைவாக அசைவ உணவு ஏற்பாட்டை தவிர்க்க சொன்னேன். மதுவிலக்கை ஆதரித்து நடக்கும் ஆக.4ல் நடக்கும் கடையடைப்பு போராட்டத்தில் மதுவுக்கெதிராக
திடீர் பாசம் கொண்ட அனைத்து கட்சிகளும் ஆதரிக்குமா, பொறுத்திருந்து பார்ப்போம் என கூறினார்.
மேலும், தவறு செய்தவர்களுடன் கூட்டணி வைத்து ஆதாயம் பெறப் போவதில்லை. இதுதான் தொண்டர்களின் விருப்பம். நான் தொண்டர்களை மதிப்பவன் என பலத்த கைத்தட்டலுக்கு
இடையில் தலைவர் வைகோ அறிவித்தார்.
தமிழ்நாட்டின் முதல் வேலைக்காரன் இந்த வைகோ, வைகோ சொன்னால் அதில் நியாயம் இருக்கும் என தமிழக மக்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் எனவும் தெரிவித்தார். கலிங்கப்பட்டியில் உள்ள மதுக்கடையை அகற்ற போராடும் மக்களை காவல்துறை அச்சுறுத்துகிறது.
கைது செய்யப் போவதாக மிரட்டல். பயப்பட வேண்டாம், கலிங்கப்பட்டியில் மதுக்கடையை நடத்தவிட மாட்டோம் என தலைவர் வைகோ திருவள்ளூரிலிருந்தே அறிவுறுத்தினார்.
சசிபெருமாள் உடலை இரவு போஸ்ட்மார்ட்டம் செய்ய இருந்ததை தடுத்தேன். சசிபெருமாள் மகன் விவேக் அவர்களுக்கு அவ்வப்போது தகவல் சொல்லி கொண்டிருக்கிறேன்.
அப்துல் கலாம் மறைவு இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் நமக்கு மட்டும் அரசாங்க பாஸ் தரப்படவில்லை. ஆனால் கலாம் குடும்பத்தினர்
அவர் எங்கள் குடும்பத்தில் ஒருவர் எனச் சொல்லி பாஸ் வாங்கி தந்தனர் என வைகோ தெரிவித்தார்.
எதிர்பார்த்த காலங்களில் ஜெயிக்கவில்லை. இனி எதிர்பாராத காலங்களில் ஜெயிக்க போகிறோம். சாஞ்சியில் அறிவித்தது ஞாபகமிருக்கிறதா...
இனி யார் தலைமையின் கீழும் வைகோ அல்ல... நம் தலைமையில்தான்
இனி மற்றவர்கள். ஒருநாள் ஆட்சி அதிகாரத்தை மதிமுக கைப்பற்றும் என வைகோ சிறப்புரையாற்றினார்.
இந்த பொது உறுப்பினர் கூட்டத்தில் பூண்டி ஒன்றியம் சார்பாக, ஏராளமான இளைஞர்கள் இன்று தலைவர் முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர்.
பின்னர் நகர செயலாளர் தோழர் ஆட்டோராஜ் முயற்சியில் ஏராளமான மகளிர் மதிமுக வில் இணைந்தனர். இதுதான் மாற்றம்.முன்னேற்றம்.
இதில் கழக முன்னணி நிர்வாகிகளான ஆவடி அந்தரிதாஸ், மகளிரணி தலைவி குமரி விஜயகுமார், துணைபொதுசெயலாளர்
மல்லை சத்யா, மற்றும் நகர செயலாளர் ஆட்டோராஜ், இணையதள அணி நண்பர்கள், நல்லு லிங்கம், சந்திரசேகர், தீபன், கு.கருணாகரன், மதிமுக இணையதள நேரலை அம்மாபேட்டை கருணாகரன் ஆகியோர் கலந்துகொண்டனர். மற்றும் கழக தொண்டர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
செய்தி சேகரிப்பு: அம்மாபேட்டை கருணாகரன் முகநூல்.
மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment