குமரியில் 99% கடைகள் அடைப்பு: பூரண மதுவிலக்கிற்கு பரிபூரண ஆதரவு. 28 இடங்களில் அரசு பஸ்கள் உடைப்பு. தனியார் கல்லூரிகள் பலவற்றுக்கு விடுமுறை. கன்னியாகுமரி வெறிச்சோடியது.
மீனாட்சிபுரத்தில் தளவாய் சுந்தரம் தலைமையில் வந்த நூறு பேரும் பணத்துக்கு வந்தவர்கள். தில்லை செல்வம் தலைமையில் நின்ற மதிமுகவினர் எதையும் சந்திக்க தயாரானார்கள். ஏன் தில்லை செல்வத்தை நேரடியாக நீயே எதிர் கொள்ள வேண்டியது தானே எதற்கு காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் ரவுடிசத்தை அழைத்தாய்?
காலம் மாறும் ஆட்சியில்லை என்றால் உன்னை போல் வேட்டி கட்ட அஞ்சிய கூட்டம் அல்ல மதிமுக.
நாஞ்சில் முருகேசன் 10 வாகனங்களில் வந்து கடை கடையாக சென்று கடையை திறக்க சொல்லி வற்புறுத்தி திறக்காத கடுப்பில் வந்து மதிமுக மாவட்ட செயலாளர் தில்லை செல்வத்தை பார்த்து நீ என்ன பெரிய ஆளா யாருகிட்ட கேட்டாலும் கடைய திறக்க மாட்டேங்கிறான் கேட்டா தில்லை சொல்லியிருக்காருண்ணு... நான் எம்எல்ஏ வந்திருக்கேன் பிச்சை கேட்பது போன்று கடை திறக்க சொல்லி பார்த்தியே யாராவது திறந்தார்களா?
மதிமுகவினரின் கொள்கைப்பிடிப்பால் மக்கள் நலப்பணிகளால், தலை தொங்கி போன நாஞ்சில் முருகேசனும், தளவாய் சுந்தரமும் திட்டமிட்டே மதுக்கடைகளை முற்றுகையிட்ட மதிமுக குமரி மாவட்ட செயலாளர் தில்லை செல்வத்தை காவல்துறையை ஏவிவிட்டு தாக்கினர். பின்னர் தில்லை செல்வம், நாகர்கேவில் நகர செயலாளர் திரு .ஜெரால்டு, மதிமுக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் அரிராமஜெயம், மாவட்ட தொண்டரணி செயலாளர் சுமேஷ் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதிமுக தக்கலை ஒன்றிய செயலாளர் ஜே.பி.சிங் அவர்களை கைது செய்து நீதிமன்ற காவலில் கொண்டு சென்றனர் தமிழக அடாவடி காவல்துறையினர்.
அறவழியில் போராடிய குமரி மதிமுகவினர் மீது வன்முறையை பிரயோகித்த காவல்துறையை வன்மையாகக் கண்டிக்கிறோம். மேலும் தில்லை செல்வம் அவர்களி நற்செயல்களை கண்டு பொறுக்காத அதிமுக அரசு காவலர்களை ஏவிவிட்டு காயப்படுத்தியதை ஓமன் மதிமுக இணையதள அணி சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். அதிமுக அரசையும் அதன் கூன்பாண்டி சட்டசபை உறுப்பினர்களையும் தூக்கி எறியும் நாள் விரைவில் இல்லை என்ற நாள் வரும். அடக்க நினைப்பவர்கள் எல்லாம் அடங்கும் காலம் விரைவிலே!
No comments:
Post a Comment