நேற்று தமிழகம் முழுதும் நடந்த கடையடைப்பில் சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மதுக்கடைகளை அடைக்க முயர்ச்சி செய்தனர். இதை தமைழக காவல்துறையினர் தடுத்தனர். அப்போது வாக்குவாதத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் கடுமையாக தாக்கினர். இதில் பல மாணவர்கள் மருத்துவமனை சென்று சிகிச்சை எடுத்தனர். பலர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் அடைபட்டுள்ள அப்பாவி மாணவர்களை காண மதிமுக பொதுசெயலாளர் வைகோ அவர்கள் புழல் சிறைக்கு வந்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், பகிரங்கமாக மாணவர்களை அழைக்கிறேன். மது ஒழிப்பும் சுதந்திர போராட்டம்தான், இதற்காக என்ன வழக்கு வேண்டுமானாலும் போடட்டும். கலாச்சார புரட்சிக்கு மாணவர்களை அழைக்கிறேன் என்றார். மேலும் காக்கி சட்டை போட்டு பூட்ஸ் காலில் மிதித்தால் அவர் மனிதனா எனவும் கேள்வி எழுப்பினார்.
பின்னர் புழல் சிறைக்குள் மாணவர்களை பார்க்க சென்றார் தலைவர் வைகோ. சிறுது நெரம் பேசிவிட்டு மாணவர்களை தைரியபடுத்திவிட்டு திரும்பினார். தமிழகத்திற்காக போராடும் ஒரே அரசியல் தலைவன் தமிழகத்தில் வைகோ மட்டுமே என்பதை தமிழக மக்களே அறிவார்கள்.
எனவே வருகிற தேர்தல்களிலாவது மக்கள் நலன் காக்கும் மதிமுகவிற்கு பம்பரம் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்து மக்கள் நலத்திட்டங்களை பெற்று பயனடை மக்கள் உணர்ந்து செயல்படவேண்டும்.
மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment