நெய்வேலி அனல் மின் நிலையத்தை தனியார்மயமாகாமல் தடுத்திட்ட தலைவர் வைகோ அவர்களின் ஆதரவு தொழிலாளர் ஊதிய பிரச்னை தொடர்பாக அதன் தொழிற்சங்க தலைவர்கள் இன்று மாலை 6-00 க்கு மறுமலர்ச்சி திமு கழகத்தின் தலைமை அலுவலகமான தாயகத்திற்கு வருகை தந்தார்கள்.
பின்னர் தலைவர் வைகோ அவர்கள் வருகை புரிந்தார். தமிழின முதல்வர் வைகோ அவர்களை தாயகத்தில் தொழிற்சங்க தலைவர்கள் சந்தித்து தங்களை அறிமுகபடுத்தி கொள்கின்றனர்.
அதிமுக தொழிற்சங்கத்தைத் தவிர அனைத்து கட்சி தொழிலாள தலைவர்களும் தலைவர் வைகோ அவர்களை சந்தித்து தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தினர்...
நெய்வேலி சுரங்கம் MLF தலைவர் மத்தியாஸ் அவர்கள் தமிழின முதல்வர் வைகோவுடன் இருந்தார்.
பின்னர் ஊதிய உயர்வு தொடர்பான மனுவை தலைவர் வைகோ அவர்களிடம் அளித்தனர்.
பின்னர் எப்போதும் போல வந்தவர்களை வழியனுப்ப கீழிறங்கி வாசல்வரை வந்தார் தலைவர் வைகோ. அப்போது ஊடகங்களுக்கு பேட்டியில் மக்கள் நலன் காக்கும் கூட்டு இயக்கம் தொழிலாள தோழர்களுடன் போராட்டத்தில் ஈடுபடும்என்றார். உழைக்கும் வர்க்கத்தையும் அரவணைக்கும் வீடு நம் தாயகம் அல்லவா....
செய்தி சேகரிப்பு: மதிமுக இணையதள நேரலை அம்மாபேட்டை கருணாகரன் முகநூல்
மறுமலர்ச்சி மைக்கேல்
மதிமுக இணையதள அணி - ஓமன்
No comments:
Post a Comment